Wednesday, March 10, 2010

விசா வாங்கியாச்சா விசா?

எக்கச்சக்க முன் எச்சரிக்கைகளுடன் ஆவணங்களை எடுத்து கொண்டு விசா நேர்முகத்திற்கு சென்றேன். எப்போதும் போல வழக்கப்படி நேரம் தாழ்த்தி செல்லாமல் சீக்கிரமே சென்றுவிட்டேன். முழுக்கை சட்டைக்குள் என்னை பொருத்தி கொள்வது மிகவும் சங்கடமாய் இருந்தது. எப்போதும் சற்று மடித்து விட்டு தான் பழக்கம். வெளியே வரிசையில் நின்று இருக்க ஜெமினி மேம்பாலத்தில் செல்லும் பேருந்துகளில் இருந்து சில முகங்கள் எட்டி பார்த்த வண்ணமே இருந்தது. ஆயுத எழுத்தில் வருவது போல எதாவது பெண் நமக்கு பின்னல் வருகிறதா என பார்த்து கொண்டே வந்தேன். அதற்கு எல்லாம் கொஞ்சம் குடுப்பினை வேணும். ஒருவழியாக அத்தனையும் சரிபார்த்து. உள்ளே சென்றேன். ஒரு மணி நேரம் முன்னதாக வந்து இருந்தேன். ஒவ்வொருவராய் நேர்முகத்திற்கு சென்று கொண்டு இருந்தனர்.




சில சந்தோஷங்கள், சில ஏமாற்றங்கள், சில குழப்பங்கள் என பல வகையான முகங்கள். என் பக்கத்தில் இருந்த வயதான தம்பதி தெலுங்கில் ஒருவருக்கு ஒருவர் சந்தேகம் கேட்டு கொண்டு இருந்தனர். மொழி சார்ந்து தனி தனி நேர்முகங்கள் இருக்கிறது என்பது சற்று சந்தோசம் அளிப்பதாய் இருந்தது. அம்மாவை அப்போது தமிழிலேயே பேச சொல்லி விசா வாங்கிகொள்ளலாம் என நினைத்தேன். சடாரென்று சிரித்து கொண்டேன், முதலில் நம்ம போகணும், படிக்கணும், வேலை வாங்கணும்...

எங்கேயோ பார்த்து கொண்டிருந்த என்னை தீடிரென்று சார் இந்த லைன்ல நில்லுங்க என்றனர். அவர்கள் சொன்னதை புரிந்து கொள்ள சில நிமிடங்கள் பிடித்தது, இன்னும் சற்று நேரத்தில் எனக்கு கிடைக்கும் ஒரு சில வினாடிகளில் என் எதிரில் இருக்கும் அந்த தேர்வாளனை கவர்ந்து ஆக வேண்டும். மூன்று வருடமாக புது புது காண்ணாடி எல்லாம் வாங்கி, பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் எட்டு எல்லாம் போட்டு காண்பித்தும் ஒரு பெண்ணை கூட கவர முடியாத ஒரு இந்திய பிரஜை இன்னும் சில மணித்துளிகளில் அந்த அமெரிக்கனை கவர வேண்டும்.
வரிசை போக போக மெல்ல இரண்டாக பிரிந்தது. ஒரு பக்கம் சற்று பெருத்த பெண்மணி, யார் போனாலும் சிரித்து பேசி கொண்டு இருந்தாள். என் ராசிப்படி நான் அவளிடம் போக மாட்டேன் என நன்றாகவே தெரியும். எனக்கு முன்னால் சென்ற நான்கு பேரிடமும் சுமார் 5 நிமிடம் பேசிவிட்டு ப்ளூ ஸ்லிப் எனப்படும் விசா நிராகரிப்பை செய்து கொண்டு இருந்தவரிடம் தான் போனேன்.    

நீங்கள் நினைப்பது போல அவர் என்னை மேலும் கீழும் எல்லாம் பார்க்கவில்லை, நேராக முகம் பார்த்து 
முகமன் கூறி Certificates என்றார். என்ன படிக்க போகிறாய், பணம் எப்படி கட்ட போகிறாய் போன்ற கேள்விகளுக்கு நான் தயாரித்து வைத்து இருந்த எந்த விடையும் உபயோடகபடுத்த வாய்ப்பு தரவில்லை. சிரித்து கொண்டே என்னுடைய Certificates திரும்ப தந்து, இன்னும் ஐந்து நாட்களில் உங்கள் பாஸ்போர்ட் வீட்டிற்கு வரும் என்றார். ஒரு கணம் அதிர்ச்சிக்கு பின் சிரித்து விடை பெற்று வெளியில் வந்தேன். கைபேசி எதுவும் எடுத்த வரவில்லை, பையில் சற்று பணத்துடன் ஆட்டோவில் வந்து இருந்தேன் மீண்டும் வீட்டிற்கு சென்று தான் விசா கிடைத்த விஷயத்தை எல்லாருக்கும் சொல்ல வேண்டும்.

மதியான வெயில் நேர்கோட்டில் இறங்கி உடம்பிற்குள் ஊடுருவ ஆரமித்திருந்தது. அதர்ச்சி, சந்தோசம், 
பிரிவு என பல வித உணர்சிகள் ஆட்கொள்ள வெளியில் வந்தேன். MLA சீட் ஜெயித்து வெளியில் வரும் வேட்பாளரை சூழ்ந்து கொள்ளும் தொண்டர் போல, ஆட்டோ ஓட்டுனர் அருகில் வந்தனர். 

எங்கே போகணும் சார்? என எவரும் கேட்கவில்லை. விசா கிடைச்சிடுச்சா சார் விசா? என்றனர். கிடைச்சுடுச்சு என்ற உடன், கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். எனக்கு கிடைத்த வாய்ப்பை எண்ணி முன் பின் பழக்கம் இல்லாத ஒரு சக சிட்டிசன் கொள்ளும் உவகை மகிழ்ச்சி அளித்தது. பின் அவர்களில் சற்று தடிமனாக இருந்தவர் தன வண்டிக்கு அழைத்து சென்றார்.
நான் அவர் வண்டியில் அமர்ந்ததில் இருந்து சந்தோஷமாகவே காணப்பட்டார்.



“Good Sir, I Happy, You visa got” என்றார்.

மெல்ல சிரித்து வைத்தேன்.

“ 12 years Auto sir, Only Visa office, I know all formalities, photo, certificates, bank statement, Flight ticket all”.

சந்தோசம் அண்ணே என்றேன். When Going என்று அவர் அரமிப்பதை புரிந்து கொண்டு, இன்னும் ஒரு வாரத்துலே கிளம்பிடுவேன், இங்க தான் வேளச்சேரி பக்கம் வீடு. விசா கண்டிப்பா கிடைச்சிடும்னு தெரியும்ணா. Flight Ticket எல்லாம் ஏற்கனவே முன்பதிவு பண்ணி ஆச்சு என்றேன்.

சென்னையில் ஆட்டோ ஏறுகையில் செய்ய கூடாத ஒரே தவறை நான் செய்து விட்டு இருப்பதை உணர்ந்தேன். உடனே நினைவு வந்தவனாக ஷென்னாய் நகர் போகணும், ஆட்டோ சார்ஜ் எவ்வலோனு சொல்லவே இல்லையே என்றேன்.

“Today Happy day You sir, Give me” என்றார்.

அவரது ஆங்கிலம் வயுற்றுக்குள் சில பல பட்டாம்பூச்சிகளை பறக்க விட ஆரமித்தது. அண்ணே, அது கிடக்கட்டும், எவ்வலோனு சொல்லுங்க என்றேன்.

500 Rs!

நான் வரும்போது 80 ருபாய் கொடுத்து வந்ததை கேட்காமல், "யு ஹாப்பி சார்" . ஒரு நாள் தானே, எனக்கு மட்டும் இல்லை சார் அங்கு இருக்குற வாட்ச்மேன், போலிஸ் எல்லாருக்கும் போகணும், இல்லைனா ஆட்டோ நிறுத்த விடுவாங்களா என்றார்.

இறங்கும் வரை அவர் குழந்தை குட்டிகளை பற்றி பேசிவிட்டு, 300 ரூபாய் வாங்கி கொண்டு
யு ஹாப்பி, மீ ஹாப்பி சார் என சொல்லிவிட்டு போனார்.

14 comments:

  1. Welcome and Thanks a lot Mr.Kumar :)

    ReplyDelete
  2. வழக்கம் போல நல்லா எழுதியிருக்கீங்க.

    சார், நான் உங்க ஃபேன் சார் ! :D

    ReplyDelete
  3. @Aravindan, நன்றி தல! :D

    ReplyDelete
  4. சந்தோஷம் மதன், எந்த ஊருக்கு வர்றீங்க?
    இங்க ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்க
    செல் 781 363 9168 இமெயில் nsriram73@gmail.com, http://bostonsriram.blogspot.com
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  5. நன்றி ஸ்ரீராம்! இந்தியானாபோலிஸ் வந்திருக்கேன்...

    தொடர்புக்கு மிகவும் நன்றி,:D

    ReplyDelete
  6. Anna, cool!! Congrats!! Very happy for you! :)
    What course? Where?

    ReplyDelete
  7. Thanks Madhan...

    Masters in Bioinfo @ Indiana University...

    ReplyDelete
  8. this post made me realise how much am missing ur posts!!! naanum unga fan sir! :D

    ReplyDelete
  9. I ll have to say the same for your comments... Thks a lot ka! :)

    ReplyDelete
  10. வணக்கம் மதன் நலமா?
    கட்டுரை அருமை. கொஞ்ச இடத்தில் ஜெயமோகன் வாடை வீசுவது போல இருந்தது. :) புது இட‌ம் எப்படி உள்ளது? புது இட‌ம், புது கலாச்சாரம் பற்றி அவ்வபோது வலைப்பூவில் எழுதுங்கள்.

    ReplyDelete
  11. நன்றி வினய்.. கண்டிப்பா எழுதறேன்.. :)

    ReplyDelete
  12. how u ppl r writing blogs. i am finding time to give comments itself...good keep writing.

    zayeed.dxb.

    ReplyDelete
  13. Thanks for the visit and your comments Zayeed!

    ReplyDelete