Friday, January 30, 2009

Clint Eastwood-சாகச நாயகன்


Cow Boy படங்களில் "பெயரில்லா மனிதன்" என்னும் கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாய் Hollywood படங்களில் நிலைபெற்று Icon ஆக திகழ்பவர் ஈஸ்ட்‌வுட்.நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து கொண்டிருந்தவரை Spaghetti Westerns எனப்படும் கௌ பாய் படங்களின் பிதாமகர் ஆன Sergio Leone அவர்கள் "A Fistful of Dollars (1964)" என்னும் படத்தில் "பெயரில்லா" (Man with No Name) நாயகனாக அறிமுகப்படுத்தினார். கூர்மையான கண்கள், அலட்டல் இல்லாத நடை, உணர்வுகளை முகத்தில் காட்டாத இறுக்கம் என கௌ பாய்க்கலின் ஆளுமைக்கு சரியாக பொருந்தினார் ஈஸ்ட்‌வுட்.பெயரில்லா நாயகனாக A Fistful of Dollars ஐ தொடர்ந்து வெளிவந்த For a Few Dollars More (1965) மற்றும் The Good, The Bad, and The Ugly (1966) மூலம் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார் ஈஸ்ட்‌வுட். பின்னர் அவரே இயக்கி நடித்த High Plains Drifter (1973), The Outlaw Josey Wales (1976) ஆகிய படங்களும் ஓரளவு வரவேற்பை பெற்றது.




1960 கலில் கௌ பாய் ஆக கலக்கியவர் 70,80 கலில் தன்னுடைய ஆளுமையை சற்றே நவீன படுத்தி "Dirty Harry" என்னும் அதிரடி போலீஸ் கதாபாத்திரத்தின் மூலம் வெற்றிகளை அள்ளினார். Dirty Harry ஆக அவர் கலக்கியவையில் Dirty Harry, Magnum Force (1973), The Enforcer (1976), Sudden Impact (1983),In the Line of fire(1993) ஆகியவை சிறப்பானவை.சட்டத்தை மதிக்ாத போலீஸ் அதிகாரியாய் இவர் ஏற்ற பாத்திரம் விமர்சகர்காளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் ரசிகர்களின் தொடர் ஆதரவால் "Dirty Harry" தொடர்ந்து வெற்றிகளை ஈட்டியது.


80 களின் இறுதியில் தோல்வியால் துவண்டு இருந்த இவர் மீண்டும் "Unforgiven(1992)" படம் மூலம் மறு அவதாரம் எடுத்தார். வசூலில் சாதனை படைத்தத்துடன் இப்படம் இவரக்கு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருததையும் பெற்று தந்தது. இவருடைய இந்த மூன்றாவது அவதாரத்தில் வெளிவந்த அவரது படங்கள் அவரது வயதுக்கு ஏற்ற முதிர்ச்சியான கதை கலங்களை கொண்டு இருந்தது. இந்த காலங்களில் வந்த இவரது "Perfect world" "True Crime" ஆகியவை எனது Personal Favourites.

2000 திற்கு பிறகு வெளியான Blood Work, Mystic River,Million Dollar Baby.Flags of Our Fathers, Letters from Iwo Jima ஆகிய அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருததை Million Dollar Baby காக மீண்டும் ஒரு முறை இவர் பெற்றார்.ஓர் திரைப்படத்தில் அவர் சொல்லும் "Go on, Make my day" என்பது போல் இந்த 45 ஆண்டு கால தன் திரை வாழ்க்கையில் அவரே அவர் வழியை அமைத்து நடந்து கொண்டு இருக்கிறார்….

Wednesday, January 28, 2009

மாடன் மோட்சம் - ஜெயமோகன்

நவீன தமிழ் இலக்கியத்தில் சிறந்த ஆளுமையாகவும் விமர்சிகராகவும் அறியப்படுபவர் ஜெயமோகன், இவரது மாடன் மோட்சம் தமிழின் சிறந்த சிறு கதைகளில் ஒன்று.”மாடன்” என்பது சேரி பகுதியில் ஆயிரம் வருடங்களாய் வாழும் குல தெய்வங்களுள் ஒன்றாக வாழ்ந்து, தற்போது கேட்பாரற்று கிடப்பதை விவரித்து கதை தொடங்குகிறது.

கதையின் ஊடாக பெருந்தெய்வங்கள் சிறுதெய்வங்களை தன்னுள் வரித்து கொண்டது, இந்தியாவில் பரவிய வறுமையயும் சமூக ஏற்ற தாழ்வுகளையும் பயன்படுத்தி நடை பெற்ற மதமாற்றம்,மக்களின் அறியாமை, ஒரு மையம் கட்டமைக்க பட்டவுடன் அதில் கோல் ஒச்சும் அதிகாரம் ஆகியவை மறைவாய் குறுப்பிடப்பட்டுள்ளது.இதனுடன் ஒரு மெல்லிய நகைச்சுவையும் மெலிந்து ஓடுவது இக்கதையின் சிறப்பம்சம்.நேர்த்தியாய் எழுதப்பட்ட இக்கதை தன் 5 ஆம் பாகத்தை நெருங்கையில் உச்ச வேகம் கொண்டு கதை முடிக்கையில் ஒரு வேதனையும் விரக்தியும் நம் மனத்தில் விட்டு செல்கிறது.

முதல் அத்தியாயத்தில், இந்தக் காலத்தில் சில்லறைத் தொந்தரவுகளாவது தராமல் தேமே என்று இருக்கிற சாமியை எவன் மதிக்கிறான்? என்று கருவியபடி எழுகிறது மாடன். வழியில் சேரியின் “அழகு” விளக்கப்பட, வருவது மாடன் சாமி என தெரியாமல் குலைக்கும் நாய்களை கடந்து பூசாரி அப்பி வீட்டை அடைகிறது மாடன்.அப்பியிடம் “பூசெ வல்லதும் நடத்துத எண்ணம் உண்டுமா?” என கேக்க, அவன், “இப்பம் சேரியில ஏளெட்டு பறக்குடிய விட்டா, பாக்கியொக்க மத்தசைடு பயவளாக்கும் பாத்துக்கிடும்”. மத்தசைடுனா வேதகாரங்க என்கிறான் அப்பி.

இரண்டு மற்றும் மூன்றாம் அத்தியாயங்களில் மாடனை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர அப்பி முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெறுவது கூறப்பட்டுள்ளது.இதில் குறிப்பாக மூன்றாம் அத்தியாயத்தில் மாடன் வெறும் பார்வையாளன் போலவே உள்ளது, அதை முன்னிறுத்தி நடை பெற்ற எந்த சண்டையுளும் அதன் பங்கு வெறும் பார்வையாளன் மட்டுமே. ஆமாம்! பின் “கந்தன் கருணை” போன்ற பக்தி (?) படங்களை தவிர வேறு எங்கு கடவுள் நேரில் வந்து சண்டை இட்டார்?. ஆனால் வேறு கோணத்தில் இதுவரை நடந்தவை அனைத்தும் அப்பியின் பிரமையோ? என்னும் கேள்வி எழுகிறது. இந்த இடத்தில் இருந்து கதையை மீண்டும் படிக்க தொடங்கலாம்.இப்போது பார்த்தால் முதல் அத்தியாயத்தில் நாய்கள் குலைத்தது இயல்பாகவே படுகிறது.

நான்காம் அத்தியாயத்தில் மாடன் புகழும் புது பொலிவும் பெற்ற உடன் அப்பி “அடாடா, ஒரு கண்ணாடி இல்லாமப் போச்சே. சும்மா விஜெயகாந்த் வில்லன் வேசம் கெட்டினதுமாதிரி இருக்கேரு. பட்டணத்திலேந்து வந்தபய. பெயிண்ட் வச்சு கீசியிருக்கான். உம்ம மீசையிருக்கே அடாடா . . .” என்கிறான் மாடனை. ‘சத்தியமாட்டு ? ‘ என்று மீசையைத் தொட்டபடி மகிழ்ந்து கொள்கிறது மாடன்.

மாடன் வெட்கி சிரிக்கும் ஓர் இடத்தில் அப்பி, ‘இந்தச் சிரிப்ப மட்டும் வெளிய எடுக்காதியும், ஏமான்பயவ கண்டானுவண்ணு சென்னா அப்பமே எறக்கி வெளியில விட்டு போடுவானுவ. தெய்வமிண்ணா ஒரு மாதிரி மந்தஹாசமாட்டு இருக்கணும். இந்தால கையை இப்படிக் காட்டிக்கிட்டு…, வாளை ஓங்கப்பிடாது. மொறைச்சிப் பார்க்கப்பிடாது . . . ” என்று சொலும் இடத்திலும், இங்க வர பெண்களுக்கெலாம் கர்ப்பம் உண்டாகுதாமே என்னும் இடத்திலும் சமூக சாடல் நகைச்சுவையாய் மிளிர்கிறது.

மோட்சம் அடைந்தவர்கள் நம் கைக்கு எட்டா தூரத்தில் உள்ள பீடத்திற்கு சென்று விடுவதை போல் மாடானும் விலகி விடுதல் தான் இந்த “மாடன் மோட்சம்”.

P.S

இக்கதையை படிக்க இந்த சுட்டியை அணுகவும்

http://jeyamohan.in/?p=550

Tuesday, January 27, 2009

மணிரத்னம் - ஓர் திருப்புமுனை


தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றி அமைத்த இயக்குநர்களில் மகேந்திரனும் மணிரத்னமும் குறுப்பிடத்தகுந்தவர்கள். Neo realistic எனப்படும் யதார்த்தவாத சினிமாவாய் நோக்கி தமிழ் திரையை உதிரிப்பூகள், நெஞ்சத்தை கிள்ளாதே, முள்ளும் மலரும் மூலம் நகர்த்தியவர் மகேந்திரன்.கதை சொல்லும் முறையில் நவீனத்தையும், காமிரா கோணங்களில் புதுமையயும், ஒளி - ஒலியை பயன்படுத்துவதில் நேர்த்தியையும் உருவாக்கியவர் மணி.பல்லவி அனுபல்லவி (தமிழில் ஓ பிரியா பிரியா) என்னும் கன்னட படம் மூலம் அறிமுகமான மணியை மௌன ராகமே அடையாளம் காட்டியது. மௌன ராகம் கதை அளவில் நெஞ்சத்தை கிள்ளாதேவை நினைவூட்டியது, இறுதி காட்சியில் மோகனும் ரேவதியும் சேரும் காட்சி பிரதாப்பும் சுகாசினியும் சேரும் காட்சியை போலவே இருந்தது.ஆனால் மௌன ராகத்தில் சொல்லப்பட்ட கார்த்திக் character தமிழுக்கு முற்றிலும் புதுசு.மணியிடம் ஒரு பேட்டியில், “ஏன் சார், Asst. Directora இல்லாம Directa படம் எடுத்தீங்க என கேட்டதற்கு, பாக்கியராஜ், மகேந்திரனிடம் கேட்டேன், Vacancy இல்ல, ஏற்கனவே வந்தது Late இனியும் late பண்ண வேண்டாம் தான்” என்றார்.

அதன் பின் வெளி வந்த “நாயகன்”, தமிழ் சினிமாவின் திருப்புமுனை. Godfather உடன் ஒப்பிடப்பட்டாலும் Brandoவின் வாழ்க்கையை சொல்ல Francis Ford Coppolaவிற்கு இரு படங்கள் தேவைப்பட்டது, ஆனால் “நாயகன்” அந்த அற்புதத்தை 2.30 மணி நேரத்தில் நிகழ்த்தியது.டைம்ஸ் இதழ் இந்த நூற்றாண்டின் சிறந்த 100 படங்களில் நாயகனையும் பட்டியல் இட்டுள்ளது கூறுப்பிடத்தக்கதது.

தொடர்ந்து வெளிவந்த தளபதி (மகாபாரத கர்ணன்), ரோஜா (எமனிடம் இருந்து கணவனை மீட்ட சாவித்திரி) ஆகியவை மணியை உலகுக்கு அடையாளம் காட்டியது.அதன் பின் சம கால பிரச்சனைகளை மையமாக கொண்ட பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களை எடுத்தார்.Romance(அலைபாயுதே), சமூகம்(பம்பாய்), Biographical(இருவர்,குரு), இதிகாசங்களின் Inspiration(தளபதி), நிழல் உலகம்(நாயகன்), குழந்தைகள்(அஞ்சலி,கன்னத்தில் முத்தமிட்டால்) என அவர் கையாண்ட அத்துனை களங்களிலும் அவருடைய படங்களே இதுவரை Benchmark ஆக உள்ளது.

ராமாயணத்தை மையமாய் கொண்ட இவரது ”அசோகவனம்” மார்ச் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது

Monday, January 19, 2009

சென்னை புத்தக கண்காட்சி நிகழ்வுகள்

சென்னை புத்தக கண்காட்சிக்கு Jan 10,18 ஆகிய இரு நாட்கள் செல்ல நேர்ந்தது. Jan 10 அன்று வாங்க நினைத்திருந்த "புயலிலே ஒரு தோணி", "கோபல்ல கிராமம்", "18வது அட்சக்கோடு","நாளை மற்றுமொரு நாளே" முதல் சுஜாதாவின் சிறு சிறு கதைகள் வரை வாங்கினேன். ஜெயமோகனின் "ஏழாம் உலகம்" மற்றும் நீல.பத்மநாபனின் "பள்ளிகொண்டபுரம்" கிடைக்கவில்லை. புத்தக கண்காட்சி சிறப்பாகவே இருந்தது.

வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் எஸ்.ரா, ஜெயமோகனின் சிபாரிசுகளே. சுஜாதா மட்டும் எப்போதும் போல் என் விருப்பத்திற்காகவே. உயிர்மையில் புத்தகம் வாங்கிய பின் எஸ்.ரா விடம் கை எழுத்து வாங்கும் போது "நீங்க சிபாரிசு பண்ண புத்தகங்கள் தான் sir எல்லாம், நீங்க பண்ணாதது இருந்தா கை எழுத்து போட வேண்டாம் என்றேன்". அதற்கு அவர் நான் சொல்லாதது என் புத்தகந்தான் என்று சொல்லி சிரித்தார்.பின் Sergion Leone's "Once Upon a time in west" படத்தை பற்றி 5 நிமிடம் பேசினோம். எஸ்.ரா மார்க்ரெட் யூரிசனாரின் கீழைத் தேய கதைகள் புத்தகத்தை அங்கேய சிபாரிசு செய்தார், அதயும் வாங்கி வந்துவிட்டேன்.

அம்ருதா பதிப்பகத்தார் தி. ஜா,ந. பிச்சமூர்த்தி, நாஞ்சில் நாடன்,புதுமைப்பித்தன், வண்ணநிலவன் முதல் அத்தனை சிறந்த சிறு கதை ஆசிரியர்களின் சிறந்த பத்து சிறு கதைகளை தேர்ந்தெடுத்து "முத்துக்கள் பத்து" என வெளியிட்டு இருந்தனர். அந்த எழுத்தாளர்களை புரிந்த கொள்ள உதவும் நல்ல முயற்சி.காலச்சுவடு அத்தனை சிறந்த புத்தகங்களயும் "Classic Varisai" என வெள்ளியிட்டு இருந்தனர். ஆனால் விலை அதிகம், கோபல்ல கிராமம்,அன்னம் பதிப்பகத்தில் 80, இவர்களிடம் 100.

எல்லா கடைகளிலும் 10% தள்ளுபடி, கிழக்கு இலக்கிய பதிப்பகம் மட்டும் 25% தந்தனர், அதனால் அசோகமித்திரன் மலிவு விலைக்கு கிடைத்தார்.விடுபட்ட புத்தகங்களை வாங்க நேற்று சென்றேன், எதிர்பாராதவிதமாய் சுஜாதாவின் கணேஷ்-வசந்த் குறுநாவல்கள் புது தொகுதியாய் வந்திறந்தது, ஆதயும் வாங்கி வந்துவிட்டேன்.

எல்லாம் நிறைவே, ஆனால் சென்ற வருடம் சென்று இறுந்தால் சுஜாதவிடமே கைஎழுத்து வாங்கி இருக்கலாம். இந்த வருடம் அவரின் சிரித்த முகம் கொண்ட புத்தகங்களுடன் மட்டும் திரும்பினேன்!!

Friday, January 9, 2009

சுஜாதா - The Boss


தமிழ் இலக்கிய உலகத்தில் பல தளங்களில் இயங்கிய ஒரு முன்னோடி எழுத்தாளர் எஸ்.ராங்கராஜன் என்கின்ற சுஜாதா. ஒரு தலைமுறையை இலக்கியம் நோக்கி திருப்பிய பெருமை இவரின் எழுத்துக்களை சாரும்.தொடர்ந்து 50 வருட காலம் எழுதி வந்த இவர், எப்போதும் சமகாலத்தவராகவே இருந்து வந்துள்ளார்.இசை, சினிமா, கவிதை, உலக இலக்கியம், அறிவியல் என பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.
தான் எடுத்து கொண்ட அத்துணை துறைகளிலும் சிறந்த ஆளுமைகளையும் அவர்தம் படைப்புகளையும், அவை வந்த காலத்திலே இனம் கண்டு தொடர்ந்து தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்த வண்ணமே வந்துள்ளார். அவர் ஆரம்ப காலத்தில் அறிமுகம் செய்த நூல்களும், ஆளுமைகளும் பின்னாளில் மிக முக்கிய ஆக்கங்களாக வலுப்பெற்றது அவரது கூர்ந்த ஆவதானிப்பை காட்டுகிறது.


சா.கந்தசாமியின் சாயாவனம், கி.ராவின் கோபல்ல கிராமம், ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே, சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை, நீல.பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம், ஜெயமோகனின் விஷ்ணுபுரம், பூமணியின் பிறகு ஆகியவை அவை வந்த நாட்களில் சிறந்த படைப்பு என எடுத்து காட்டியவர். (கணையாழியின் கடைசி பக்கங்கள் , உயிர்ம்மை பதிப்பகம், விலை ரூ.350). அறிவியல் புனைக்கதை உலகின் முன்னோடியான இவரது விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு உயிர்ம்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
Alfred Hitchcock, Satyajit Ray, Krzysztof Kieslowski, Andrae Wajae, Roman Polanski, Clint Eastwood என உலக சினிமாவின் அத்தனை முக்கிய படைப்பாளிகளையும் அவர்தம் படைப்புகளையும் அறிமுகம் செய்துள்ளார். (கற்றதும் பெற்றதும், விகடன் பிரசுரம்). புதுமைபித்தன் நடைக்கு பின் தமிழ் சிறுகதை உலகில் சுஜாதாவின் நடை மிக முக்கியமான ஒன்று. இவருக்கு பின் வந்தவர்களில் இவர் பதிப்பு இல்லாமல் இறுந்தவர்கள் மிக குறைவே. நகரம், எல்டரோடா, அரிசி, ஒரே ஒரு மாலை, கர்‌ஃப்யூ, திமலா ஆகியவை இவரது சிறந்த சிறுகதைகளில் சில. தொடர்ந்து இலக்கிய மற்றும் வெகுஜன உலகில் மதிக்க பெற்ற இவர், மணிரத்னம் அவர்களின் கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.நீண்ட வசனங்கள் கொண்ட தமிழ் சினிமாவில் நறுக்கு தெரிததார் போல் வசனம் எழுதி அங்கேயும் ஒரு “Trand setter” ஆகவே தன்னை நிலை நிறுத்தி கொண்டார்.
இவரது மொத்த சிறுகதைகளும் குறுநாவல்களும் உயிர்மையில் புத்தகமாக வெளி வந்துள்ளது, அதனுடன் கணையாழியின் கடைசி பக்கங்கள், கற்றதும் பெற்றதும், ஸ்ரீரங்கத்து தேவதைகள், எழுத்தும் வாழ்க்கையும், என்னும் சில சிந்தனைகள், ஹைக்கூ ஒரு அறிமுகம், கடவுள் ஆகியவை சில முக்கிய புத்தகங்கள். எப்போதும் தோழமையுடன், ஒரு நண்பனின் கைகுலுக்கல் போன்றவையாகவே அவரது எழுத்து இதுவரை இருந்து வந்துள்ளது.
வாசிப்பின் முழு இன்பத்தை தர கூடிய இவரது எழுத்துக்கள் என்றும் நம்மை விட்டு நீங்காதவை!!

ஆதவனின் “காகித மலர்கள்”

1970 கலில் வெளிவந்து பரவலான வாசக கவனத்தை பெற்ற நாவல் "காகித மலர்கள்".நமது இயல்பை மறைத்து கொண்டு, சமூகத்தில் நாம் போடும் வேஷங்களை கலைந்து காட்டி எள்ளாலான ஒரு நடையுடன் செல்லும் இந்த நாவல் சம காலத்திற்க்கும் பொருந்தி வருவதே!! .டெல்லி நகரை கதை கலமாய் கொண்டது இந்நாவல்.அரசியில், திரை உலகம், சமூகம், பண்பாடு என பல துறைகளின் வேஷங்களை இந்நாவலில் காண முடியும்.
நாவலின் கதையை விவரிப்த்தை விட, அதில் என்னை கவர்ந்த விசயங்களை உங்களிடம் பகிந்து கொள்ளவே இப்பதிவு. ஹிப்ப்பி களின் வருகை, ஹிந்தி சினிமாவின் போக்கு, அரசியல் உயர் மட்டத்தின் அவலம், ஒரு ஆராய்ச்சியாளனின் சிந்தனை ஆகியவற்றை விளக்கும் இடங்கள் நாவலில் சிறப்பானவை.

ஆதவனின் வரிகளில், "வெவ்வேறு "வேடங்களின்" கைதிகள். அரசியல் தலைவர்கள், mob Psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள், "நடக்கிறபடி நடக்கட்டும். நமக்கேன் வம்பு ?" என்ற playsafe மனப்பாங்கின் கைதிகள். அறிவு ஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமான, அதிக செலவாணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயத்துக்கொண்டு, சில "தியரிகளை" உச்சாடனம் செய்துகொண்டு, "உஞ்சவிருத்தி" செய்கிற பிராமண பிம்பத்தின் கைதிகள். பெண்கள் ஆணின் "அடிமை", "மகிழ்வூட்டும் கருவி" அல்லது இந்த பிம்பங்களுக்கெதிராகப் புரட்சி செய்கிறவள் - என்கிற பிம்பங்களின் கைதிகள், இளைஞர்கள், வயதையும், "வேடங்கள்" அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற ஒரு அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurityஇன், ஒரு alienationஇன் கைதிகள்" .
ஒவ்வருவரும் ஒரு வேடம் அணிந்து சுயத்தை இழந்து காகித மலர்களை வாழ்கிறோம். காகித மலர்கள் நீடிததிருப்பவை, பார்க்கும் போது எல்லாம் ஒரு மலிரினை போல் தோற்றம் தறுபவை, ஆனால் அவை உள்ளே எப்போதும் வெறுமயை கொண்டவை. மனம் வீசுதல்தானே மலர்களின் இயல்பு, அதை இழந்து நிற்பதில் பெருமை என்ன இருக்க முடியும்?

எஸ்.ரா - நூல்கள் வெளியீட்டு விழா

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் எட்டு நூல்கள் வெளியீட்டு விழா சென்னை “South Indian Film Chamber” அரங்கில் கடந்த திங்கள் மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மனுஷ்யபுத்திரன், பிரபஞ்சன், ஜெயமோகன், பாரதிமணி, வெ.இறையன்பு, சாரு, தோட்டாதரணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பேராசிரியர் மணி அவர்கள் எஸ்.ரா துணையெழுத்தில் தன்னை பற்றி எழுதியதால் (Andy Whorhol ன் தத்துவப்படி!!) தான் பதினைந்து நிமிட உலக புகழ் அடைந்ததை குறுப்பிட்டார். பின் எஸ்.ரா வின் பழகும் இயல்பை சிலாகித்து பேசினார்.
Script இல்லாமல் தன்னை பேச அழைத்ததை நகைச்சுவயோடு குறிப்பிட்டு பேச ஆரம்பித்த திரு.பாரதிமணி, Money இல்லாத பாரதியாருக்கு “பாரதி” படத்தில் தந்தையாக நடித்தவர் (காரண பெயராக இருக்குமொ?), கலகலப்பாக பேசினார். இறுதியில் தமிழின் சிறந்த ஆளுமைககளான நாஞ்சில் நாடன், எஸ்.ரா, ஜெயமோகன் அவர்களுக்கு சாகித்ய ஆகாதெமி விருது வழங்க சிபாரிசு செய்தார்.
வெ.இறையன்பு தனக்கே உரிய பாணியில் பேசினார். “சித்திரங்கள் விசித்திரங்கள்” புத்தகத்தை பற்றி பேசியவரின் நீண்ட உரையினால் தோட்டாதரணி பேச நேரம் கிடைக்க வில்லை.தொகுபாளர்கள் கடைசி நேரத்தில் வர இயாலாத காரணத்தால் Sun Music ஆனந்த கண்ணனும், நிஷாவும் தொகுத்து வழங்கினர். அவசரத்தில் வந்தாலும் ஆனந்த கண்ணன் நன்றாகவே பேசினார். நிஷா “நூல்” வெளியீடுக்கு பதில் “நூலக” வெளியீடு என்றார். அதுவும் பொருத்தமாகவே பட்டது. (எட்டு நூல்கள் அல்லவா?). எஸ்.ரா வின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
நிகழ்ச்சி தொடங்க 5 நிமிடத்திற்க்கு முன், நானும் நண்பர் கார்ததியும் ஜெயமோகனை சந்தித்தோம், அவருடைய “காடு” நாவலை பற்றியும், Blog யை பற்றியும் 5 நிமிடம் பேசினோம். நிகழ்ச்சி முடிந்த பின், “அதே இரவு அதே வரிகள்” புத்தகத்தில் ஜெயமோகனிடமும் “உலக சினிமா” வில் எஸ்.ரா விடமும் Autograph வாங்கி கொண்டோம். பின் மனுஷ்யபுத்திரனுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து விட்டு விடை பெற்றோம். எஸ்.ரா “குலுங்க” சிரித்து விடை தந்தார். நிறைவான விழா.