Friday, January 9, 2009

சுஜாதா - The Boss


தமிழ் இலக்கிய உலகத்தில் பல தளங்களில் இயங்கிய ஒரு முன்னோடி எழுத்தாளர் எஸ்.ராங்கராஜன் என்கின்ற சுஜாதா. ஒரு தலைமுறையை இலக்கியம் நோக்கி திருப்பிய பெருமை இவரின் எழுத்துக்களை சாரும்.தொடர்ந்து 50 வருட காலம் எழுதி வந்த இவர், எப்போதும் சமகாலத்தவராகவே இருந்து வந்துள்ளார்.இசை, சினிமா, கவிதை, உலக இலக்கியம், அறிவியல் என பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.
தான் எடுத்து கொண்ட அத்துணை துறைகளிலும் சிறந்த ஆளுமைகளையும் அவர்தம் படைப்புகளையும், அவை வந்த காலத்திலே இனம் கண்டு தொடர்ந்து தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்த வண்ணமே வந்துள்ளார். அவர் ஆரம்ப காலத்தில் அறிமுகம் செய்த நூல்களும், ஆளுமைகளும் பின்னாளில் மிக முக்கிய ஆக்கங்களாக வலுப்பெற்றது அவரது கூர்ந்த ஆவதானிப்பை காட்டுகிறது.


சா.கந்தசாமியின் சாயாவனம், கி.ராவின் கோபல்ல கிராமம், ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே, சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை, நீல.பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம், ஜெயமோகனின் விஷ்ணுபுரம், பூமணியின் பிறகு ஆகியவை அவை வந்த நாட்களில் சிறந்த படைப்பு என எடுத்து காட்டியவர். (கணையாழியின் கடைசி பக்கங்கள் , உயிர்ம்மை பதிப்பகம், விலை ரூ.350). அறிவியல் புனைக்கதை உலகின் முன்னோடியான இவரது விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு உயிர்ம்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
Alfred Hitchcock, Satyajit Ray, Krzysztof Kieslowski, Andrae Wajae, Roman Polanski, Clint Eastwood என உலக சினிமாவின் அத்தனை முக்கிய படைப்பாளிகளையும் அவர்தம் படைப்புகளையும் அறிமுகம் செய்துள்ளார். (கற்றதும் பெற்றதும், விகடன் பிரசுரம்). புதுமைபித்தன் நடைக்கு பின் தமிழ் சிறுகதை உலகில் சுஜாதாவின் நடை மிக முக்கியமான ஒன்று. இவருக்கு பின் வந்தவர்களில் இவர் பதிப்பு இல்லாமல் இறுந்தவர்கள் மிக குறைவே. நகரம், எல்டரோடா, அரிசி, ஒரே ஒரு மாலை, கர்‌ஃப்யூ, திமலா ஆகியவை இவரது சிறந்த சிறுகதைகளில் சில. தொடர்ந்து இலக்கிய மற்றும் வெகுஜன உலகில் மதிக்க பெற்ற இவர், மணிரத்னம் அவர்களின் கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.நீண்ட வசனங்கள் கொண்ட தமிழ் சினிமாவில் நறுக்கு தெரிததார் போல் வசனம் எழுதி அங்கேயும் ஒரு “Trand setter” ஆகவே தன்னை நிலை நிறுத்தி கொண்டார்.
இவரது மொத்த சிறுகதைகளும் குறுநாவல்களும் உயிர்மையில் புத்தகமாக வெளி வந்துள்ளது, அதனுடன் கணையாழியின் கடைசி பக்கங்கள், கற்றதும் பெற்றதும், ஸ்ரீரங்கத்து தேவதைகள், எழுத்தும் வாழ்க்கையும், என்னும் சில சிந்தனைகள், ஹைக்கூ ஒரு அறிமுகம், கடவுள் ஆகியவை சில முக்கிய புத்தகங்கள். எப்போதும் தோழமையுடன், ஒரு நண்பனின் கைகுலுக்கல் போன்றவையாகவே அவரது எழுத்து இதுவரை இருந்து வந்துள்ளது.
வாசிப்பின் முழு இன்பத்தை தர கூடிய இவரது எழுத்துக்கள் என்றும் நம்மை விட்டு நீங்காதவை!!

No comments:

Post a Comment