Monday, January 19, 2009

சென்னை புத்தக கண்காட்சி நிகழ்வுகள்

சென்னை புத்தக கண்காட்சிக்கு Jan 10,18 ஆகிய இரு நாட்கள் செல்ல நேர்ந்தது. Jan 10 அன்று வாங்க நினைத்திருந்த "புயலிலே ஒரு தோணி", "கோபல்ல கிராமம்", "18வது அட்சக்கோடு","நாளை மற்றுமொரு நாளே" முதல் சுஜாதாவின் சிறு சிறு கதைகள் வரை வாங்கினேன். ஜெயமோகனின் "ஏழாம் உலகம்" மற்றும் நீல.பத்மநாபனின் "பள்ளிகொண்டபுரம்" கிடைக்கவில்லை. புத்தக கண்காட்சி சிறப்பாகவே இருந்தது.

வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் எஸ்.ரா, ஜெயமோகனின் சிபாரிசுகளே. சுஜாதா மட்டும் எப்போதும் போல் என் விருப்பத்திற்காகவே. உயிர்மையில் புத்தகம் வாங்கிய பின் எஸ்.ரா விடம் கை எழுத்து வாங்கும் போது "நீங்க சிபாரிசு பண்ண புத்தகங்கள் தான் sir எல்லாம், நீங்க பண்ணாதது இருந்தா கை எழுத்து போட வேண்டாம் என்றேன்". அதற்கு அவர் நான் சொல்லாதது என் புத்தகந்தான் என்று சொல்லி சிரித்தார்.பின் Sergion Leone's "Once Upon a time in west" படத்தை பற்றி 5 நிமிடம் பேசினோம். எஸ்.ரா மார்க்ரெட் யூரிசனாரின் கீழைத் தேய கதைகள் புத்தகத்தை அங்கேய சிபாரிசு செய்தார், அதயும் வாங்கி வந்துவிட்டேன்.

அம்ருதா பதிப்பகத்தார் தி. ஜா,ந. பிச்சமூர்த்தி, நாஞ்சில் நாடன்,புதுமைப்பித்தன், வண்ணநிலவன் முதல் அத்தனை சிறந்த சிறு கதை ஆசிரியர்களின் சிறந்த பத்து சிறு கதைகளை தேர்ந்தெடுத்து "முத்துக்கள் பத்து" என வெளியிட்டு இருந்தனர். அந்த எழுத்தாளர்களை புரிந்த கொள்ள உதவும் நல்ல முயற்சி.காலச்சுவடு அத்தனை சிறந்த புத்தகங்களயும் "Classic Varisai" என வெள்ளியிட்டு இருந்தனர். ஆனால் விலை அதிகம், கோபல்ல கிராமம்,அன்னம் பதிப்பகத்தில் 80, இவர்களிடம் 100.

எல்லா கடைகளிலும் 10% தள்ளுபடி, கிழக்கு இலக்கிய பதிப்பகம் மட்டும் 25% தந்தனர், அதனால் அசோகமித்திரன் மலிவு விலைக்கு கிடைத்தார்.விடுபட்ட புத்தகங்களை வாங்க நேற்று சென்றேன், எதிர்பாராதவிதமாய் சுஜாதாவின் கணேஷ்-வசந்த் குறுநாவல்கள் புது தொகுதியாய் வந்திறந்தது, ஆதயும் வாங்கி வந்துவிட்டேன்.

எல்லாம் நிறைவே, ஆனால் சென்ற வருடம் சென்று இறுந்தால் சுஜாதவிடமே கைஎழுத்து வாங்கி இருக்கலாம். இந்த வருடம் அவரின் சிரித்த முகம் கொண்ட புத்தகங்களுடன் மட்டும் திரும்பினேன்!!

No comments:

Post a Comment