Tuesday, January 27, 2009

மணிரத்னம் - ஓர் திருப்புமுனை


தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றி அமைத்த இயக்குநர்களில் மகேந்திரனும் மணிரத்னமும் குறுப்பிடத்தகுந்தவர்கள். Neo realistic எனப்படும் யதார்த்தவாத சினிமாவாய் நோக்கி தமிழ் திரையை உதிரிப்பூகள், நெஞ்சத்தை கிள்ளாதே, முள்ளும் மலரும் மூலம் நகர்த்தியவர் மகேந்திரன்.கதை சொல்லும் முறையில் நவீனத்தையும், காமிரா கோணங்களில் புதுமையயும், ஒளி - ஒலியை பயன்படுத்துவதில் நேர்த்தியையும் உருவாக்கியவர் மணி.பல்லவி அனுபல்லவி (தமிழில் ஓ பிரியா பிரியா) என்னும் கன்னட படம் மூலம் அறிமுகமான மணியை மௌன ராகமே அடையாளம் காட்டியது. மௌன ராகம் கதை அளவில் நெஞ்சத்தை கிள்ளாதேவை நினைவூட்டியது, இறுதி காட்சியில் மோகனும் ரேவதியும் சேரும் காட்சி பிரதாப்பும் சுகாசினியும் சேரும் காட்சியை போலவே இருந்தது.ஆனால் மௌன ராகத்தில் சொல்லப்பட்ட கார்த்திக் character தமிழுக்கு முற்றிலும் புதுசு.மணியிடம் ஒரு பேட்டியில், “ஏன் சார், Asst. Directora இல்லாம Directa படம் எடுத்தீங்க என கேட்டதற்கு, பாக்கியராஜ், மகேந்திரனிடம் கேட்டேன், Vacancy இல்ல, ஏற்கனவே வந்தது Late இனியும் late பண்ண வேண்டாம் தான்” என்றார்.

அதன் பின் வெளி வந்த “நாயகன்”, தமிழ் சினிமாவின் திருப்புமுனை. Godfather உடன் ஒப்பிடப்பட்டாலும் Brandoவின் வாழ்க்கையை சொல்ல Francis Ford Coppolaவிற்கு இரு படங்கள் தேவைப்பட்டது, ஆனால் “நாயகன்” அந்த அற்புதத்தை 2.30 மணி நேரத்தில் நிகழ்த்தியது.டைம்ஸ் இதழ் இந்த நூற்றாண்டின் சிறந்த 100 படங்களில் நாயகனையும் பட்டியல் இட்டுள்ளது கூறுப்பிடத்தக்கதது.

தொடர்ந்து வெளிவந்த தளபதி (மகாபாரத கர்ணன்), ரோஜா (எமனிடம் இருந்து கணவனை மீட்ட சாவித்திரி) ஆகியவை மணியை உலகுக்கு அடையாளம் காட்டியது.அதன் பின் சம கால பிரச்சனைகளை மையமாக கொண்ட பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களை எடுத்தார்.Romance(அலைபாயுதே), சமூகம்(பம்பாய்), Biographical(இருவர்,குரு), இதிகாசங்களின் Inspiration(தளபதி), நிழல் உலகம்(நாயகன்), குழந்தைகள்(அஞ்சலி,கன்னத்தில் முத்தமிட்டால்) என அவர் கையாண்ட அத்துனை களங்களிலும் அவருடைய படங்களே இதுவரை Benchmark ஆக உள்ளது.

ராமாயணத்தை மையமாய் கொண்ட இவரது ”அசோகவனம்” மார்ச் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது

No comments:

Post a Comment