Friday, January 9, 2009

ஆதவனின் “காகித மலர்கள்”

1970 கலில் வெளிவந்து பரவலான வாசக கவனத்தை பெற்ற நாவல் "காகித மலர்கள்".நமது இயல்பை மறைத்து கொண்டு, சமூகத்தில் நாம் போடும் வேஷங்களை கலைந்து காட்டி எள்ளாலான ஒரு நடையுடன் செல்லும் இந்த நாவல் சம காலத்திற்க்கும் பொருந்தி வருவதே!! .டெல்லி நகரை கதை கலமாய் கொண்டது இந்நாவல்.அரசியில், திரை உலகம், சமூகம், பண்பாடு என பல துறைகளின் வேஷங்களை இந்நாவலில் காண முடியும்.
நாவலின் கதையை விவரிப்த்தை விட, அதில் என்னை கவர்ந்த விசயங்களை உங்களிடம் பகிந்து கொள்ளவே இப்பதிவு. ஹிப்ப்பி களின் வருகை, ஹிந்தி சினிமாவின் போக்கு, அரசியல் உயர் மட்டத்தின் அவலம், ஒரு ஆராய்ச்சியாளனின் சிந்தனை ஆகியவற்றை விளக்கும் இடங்கள் நாவலில் சிறப்பானவை.

ஆதவனின் வரிகளில், "வெவ்வேறு "வேடங்களின்" கைதிகள். அரசியல் தலைவர்கள், mob Psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள், "நடக்கிறபடி நடக்கட்டும். நமக்கேன் வம்பு ?" என்ற playsafe மனப்பாங்கின் கைதிகள். அறிவு ஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமான, அதிக செலவாணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயத்துக்கொண்டு, சில "தியரிகளை" உச்சாடனம் செய்துகொண்டு, "உஞ்சவிருத்தி" செய்கிற பிராமண பிம்பத்தின் கைதிகள். பெண்கள் ஆணின் "அடிமை", "மகிழ்வூட்டும் கருவி" அல்லது இந்த பிம்பங்களுக்கெதிராகப் புரட்சி செய்கிறவள் - என்கிற பிம்பங்களின் கைதிகள், இளைஞர்கள், வயதையும், "வேடங்கள்" அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற ஒரு அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurityஇன், ஒரு alienationஇன் கைதிகள்" .
ஒவ்வருவரும் ஒரு வேடம் அணிந்து சுயத்தை இழந்து காகித மலர்களை வாழ்கிறோம். காகித மலர்கள் நீடிததிருப்பவை, பார்க்கும் போது எல்லாம் ஒரு மலிரினை போல் தோற்றம் தறுபவை, ஆனால் அவை உள்ளே எப்போதும் வெறுமயை கொண்டவை. மனம் வீசுதல்தானே மலர்களின் இயல்பு, அதை இழந்து நிற்பதில் பெருமை என்ன இருக்க முடியும்?

No comments:

Post a Comment