Monday, March 30, 2009

கவிதைசாரல் - எல்லோரும் கவிதை எழுதலாம்….

வைரமுத்து, அப்துல் ரகுமான் மூலம் தான் உங்களுக்கும் கவிதை அறிமுகம் என்றால், கை கொடுங்க Boss நீங்க நம்ம ஆள்.ஆனா இப்போ எல்லாம் கல்யாண்ஜி, தேவதேவன், மனுஷ்யபுத்திரன் தான் புடிச்சிருக்கு, ஏன் சொல்ல போன, பிரமிள் கவிதை தேடிட்டு இருக்கேன் என்றால் சந்தேகமே இல்லை நீங்க மேல தைரியமா படிக்கலாம். 14 வயசில் பிறந்த நாள் பரிசாக வைரமுத்து கவிதைகள் முழு தொகுப்பு கேட்டவன் நான். அதன் பின் கவிதையில் வெகு தூரம் வந்து விட்டேன்.


பார்த்திபன் ரம்பாவை பண்யாரம் சாப்பிட வைத்து விளக்கம் சொன்ன பின்னும் , புதுகவிதைனா என்ன? என்று கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் மேலே செல்கிறேன். இந்த புதுகவிதை இயக்கம் வெற்றி பெற்றதில் வந்த சில முக்கியமான நன்மைகள், எல்லாரும் " நாம கூட கவிதை எழுதலாம் போல இருக்கே" என என்ன வைத்தது தான்.ஆனால் கவிதை என்பது வார்த்தை விளையாட்டுகளை மீறியது, பொதுவாக இந்த கவிதைகளை சில வார்த்தைகளை வைத்து கண்டுபிடித்து விடலாம் அவை என்ன வகை மாதிரி என்று.கீழ் வரும் சொற்கள் எந்த வகை கவிதையில் வரும் என கண்டு பிடித்தால், ஓர் எவர் சில்வர் டம்ளர் பரிசு அளிக்க படும்.


(1) ஏ பெண்ணே-அடியே (2) ஒ தமிழே,என் அணங்கே,மூச்சே,பேச்சே (3) கூர் வாளினை எடு, திலகம் இடு, தீ பறக்கட்டும் (4) சொல் - வெல் - நில் - என்னை கொல்.


ஏற்கனவே இந்த பகுதியில் எனக்கு பிடித்த சில கவிதைகளையும், சில விளக்கங்களையும் கொடுத்து உள்ளேன்.


1. கவிதை செய்ய பட கூடாது , நிகழ வேண்டும்


2. கொஞ்சம் மொழி ஆளுமையும் கூறிய அவதானிப்பும் இருந்தால் கண்டிப்பாக எல்லோராலும் சில நல்ல கவிதைகள் எழுதி விட முடியும்.


3. பட்டம் பூச்சி, சிட்டுகுருவி, காதல்,அம்மா, இவை எல்லாம் தேவை ஆன அளவு அலச பட்டு விட்டதால் அடுத்த இடங்களை நோக்கி நகர்வது நல்ல கவிதைக்கான வாசல் திறக்கும்.


4. நல்ல கவிதை ஒற்றைபடையாய் இருக்காது, தொடர்ந்த வாசிப்பில் பல வாசல்களை திறந்த வண்ணமே இருக்கும்.


நான் நல்ல கவிதைகளின் ரசிகன், நமது CH1ல் எழுதபடும் சில கவித்துவம் கொண்ட வரிகளை தொடர்ந்து ரசித்து வந்து உள்ளேன். கவிதை எழுதுவது நல்ல விஷயம் தான்,ஆனால் நல்ல கவிதை எழுதுவது முக்கியம் என நோக்கில் தான் இந்த பதிவுகளும், பகிர்தல்களும்.சமீபத்தில் படித்த நல்ல கவிதை தொகுப்பு, மனுஷ்யபுத்திரனின் " கடவுளுடன் பிராத்தித்தல்" அதில் வரும் "ஒரு மழை நாளில் ", "காணமல் போன மகள்" "அந்த இடம்" ஆகியவை மிக அழகான கவிதைகள்.

படிமங்கள் அதிக அளவில் பயிலும் இவரது கவிதைகள், எனக்கு விருப்பமானவை.நல்ல கவிதை தொடர்ந்து நம் அழ் மனதில் நாம் மறைக்க அல்ல மறந்து விட்ட பகுதிகளுடன் உரையாடுகிறது. அதற்க்கு அது தேர்ந்தெடுத்து கொண்டவையே படிமங்கள். கவிதையில் படிமம் என்பது ஓர் நிகழ்வு, ஓர் பொருள் அல்லது ஓர் சொல் ஒரு குறியீடு அது தொடர்ந்து நாம் அழ் மனதை தொடர்பு கொள்ளவே முயற்சிக்கிறது,


சாத்தியங்கள்


நடக்கலாம்

கால் வலிக்கும் பொது கொஞ்சம் உட்காரலாம்

பேசலாம்

வெறுமை சூழும் பொது மௌனமாக இருக்கலாம்

கைகளை பற்றி கொள்ளலாம்

பயம் வரும் போது கைகளை விலக்கி கொள்ளலாம்

ஒருமுறை முத்தமிடலாம்

முத்தத்தை பற்றி பேச்சு வந்து விடாமல்

வேறு எதாவது பேசலாம்

அவரவர் வீடு நோக்கி போகலாம்!!



அந்த இடம்

நீ அங்குதான்

இருப்பதாய் சொன்னாய்

நான்

அங்கு வந்த போது

அந்த இடம்

கலைந்துவிட்டிருந்தது

மேல குறிபிட்ட கவிதைகளில் முத்தம், வீடு, இடம் ஆகியவை படிமங்கள்.


பழக்கம்

பழக்கத்திற்கு இன்னொரு அடிமை

பழக்கமற்ற எதையும் இதுவரை

செய்ததில்லை - இனிமேல்

செய்யபோவதில் பழக்கமற்றது

சாவதும்

பழக்கமானது என்னவோ

அதுவும் நாள்தோறும்

மேல குறிபிட்ட சி, மணியின் கவிதையில் "சாவதும்" படிமம் கவிதைக்கு மிக முக்கியம்,

Chungking express - நகர வீதிகளில் நசியும் காதல்கள்

இந்த உலகம் கை விடபட்டவர்களால் நிரம்பி இருக்கிறது. நாம் எல்லோரும் ஏதோ ஓர் நிலையில் யாராலாவது கை விடபட்டவர்களாக தாம் இருப்போம். அதிலும் காதலில் கை விடபட்டவர்கள் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும்.நகரங்களில் காதல் உருவாவதில் உள்ள மர்மம் போலவே உள்ளது அது கலைந்து போவதிலும்.நகர வீதிகளில் நசிந்து விழும் காதலையும், அதன் மெல்லிய மாற்றங்களையும் கலை அழகுடன் உருவாக்கிய படைப்பு Wong Kar Waiன் Chungking express. நவீன சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான இவரது Chungking express 1990 களின் Hongkong வீதிகளையும், மிக வேக மாற்றம் கொண்ட அந்த காலம் மனித உணர்வுகளிடம் ஏற்படுத்திய சலனங்களையும் விவரிக்கிறது.



Time இதழ் வெளியிட்டு உள்ள இந்த நூற்றாண்டின் சிறந்த நூறு படங்கள் வரிசையில் உள்ள இப்படம், காதலியை பிரிந்த இரு காவலர்களை பற்றியது. முதலில் Cop 223, எனபவரின் கதை, படத்தின் முதல் காட்சியில் Cop 223 ஒருவனை துரத்தி கொண்டு வருகிறான், அந்த துரத்தல் காட்சி மிக அழகாக படமாக்க பட்டிருந்தது, அவன் துரத்துகையில் ஒரு பெண்ணை மோதுகிறான். மின்னல் வேகத்தில் சென்ற கேமரா ஒரு கணம் அவளில் நிலைக்கிறது, இன்னும் 56 மணி நேரத்திற்கு பின்னால் இவளை நான் காதலிப்பேன் என நினைக்கவில்லை என அந்த காவலன் சொல்வது போல் வர, மீண்டும் துரத்தல் காட்சி.



அந்த 56 மணி நேரத்தில் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் நம் கண் முன் விரிகிறது. Cop223ன் காதலி April 1 ஆம் தேதி அவனிடம் ஒரு சின்ன பிரச்சனையால் பிரிந்து சென்று இருகிறாள், இன்னும் இரண்டு நாளில் வர போகும் தன் பிறந்த நாள் (May 1) அன்று எப்படியும் அவள் தன்னிடம் பேசி விடுவாள், என நம்பி அவளுக்கு பிடிக்கும் என Bottleல் அடைக்கப்பட்ட May 1அன்று Expire ஆக கூடிய அண்ணாச்சி பழங்களை வாங்கி வைத்து காத்திருக்கிறான்.


“உலகத்தில் எல்லா பொருட்களுக்கும் Expiry Date இருக்கிறதா என்ன?, காதலுக்குமா?” என நினைத்து கொள்கிறான். அப்படி “ஒருவேளை காதலுக்கு Expiry Date இருக்கும் என்றால் அது 10000 வருடமாய் இருக்கட்டும்“ என்கிறான். அவள் May 1 வராததால் Expiry ஆன அண்ணாச்சி பழங்களை உண்டு விட்டு ஒரு மது விடுதிக்கு செல்கிறான், அங்கே இப்போது நான் முதலில் எந்த பெண்ணை பார்கிறேனோ அவளை காதலிக்க போகிறேன் என்று நினைக்கையில் முதல் காட்சியில் அவன் மேல் மோதிய பெண், போதை மருந்து கடத்துவதில் பிரச்சனை ஏற்பட்டு அங்கு வர அவள் மீது காதல் கொள்கிறான், அவளை இரவு அவள் வீட்டில் விட்டு விட்டு அவள் உறங்குவதையே பார்த்துவிட்டு அவள் காலணிகளை கழுவி விட்டு தன் இருப்பிடும் செல்கிறான். சென்றவுடன் அவனுக்கு ஒரு செய்தி வருகிறது அவளிடம் இருந்து “இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று.


மறுநாள் அவன் வழக்கமாய் தான் செல்லும் கடைக்கு போக அங்கே ஒரு பெண் மீது இடிக்கிறான், இப்போது அவளின் கதை - படத்தின் இரண்டாவது கதை. அந்த பெண் ” Express” என்னும் இரவு நேர உணவு விடுதியில் வேலை செய்பவள். அவள் அங்கு வரும் Cop 663 என்பவரை காதலிக்கிறாள், அவர் விமான பணிபெண்ணான தன் முன்னால் காதலியை பிரிந்து வாழ்பவர். அவர் இல்லாத சமயம் அவர் வீட்டிற்கு சென்று அந்த வீட்டை அழகு படுத்துகிறாள் அந்த உணவு விடுதியில் வேலை செய்பவள். மிக மெல்லிய காதல் கட்சிகள் அவை. இறுதியில் அவள் அவரை பிரிந்து California சென்று மீண்டும் இணைவதாய் படம் நிறைகிறது.


படத்தின் கேமரா கோணங்கள், இரவு நேர நகரம்,அமெரிக்கா செல்ல விரும்பும் இளைய தலை முறை, இசையோட கலந்த வாழ்வு என அன்றைய நிலையை மிக அழகாய் பதிவு செய்து உள்ளார். Wong Kar Waiன் In the Mood for Love என்னை கவர்ந்தது போலவே இந்த படமும் கவர்ந்தது.
மிக தனித்துவமாய் படம் பிடிக்க பட்டிருந்த இப்படம், Berlin, Venice என பல சர்வதேச விருதுகளை வென்றது. Hollywoodல் நிழல் உலகை மையமாய் வைத்து Pulp Fiction, reservoir Dogs படங்களை தந்த Quentine Torantino Wong Kar Wai ன் தீவிர ரசிகர். நானும் கூட!!

இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |

Tuesday, March 24, 2009

Lifestyleல் தான் அந்த தேவதையை பார்த்தேன்

2008 ஆம் ஆண்டின் முதல் நாள் தான் அது நடந்தது. நானும் என் நண்பனும் மைலாப்பூர் கபாலிஷ்வரர் கோவில், சரவண பவன் டிபன், அப்படியே "சத்யம்" போய் Ratatouille படம் என ஒரு Highclass திட்டத்தோடு கிளம்பினோம். கபாலிஷ்வரர் கோவில், வருடம் முதல் நாள், கூட்டத்தை சமாளித்து உள்ளே சென்றோம். எப்போதும் செல்லும் பொது தரிசன வழிக்கு 20 ரூபாய் டிக்கெட் விற்பனை ஜருறாய் நடந்து கொண்டிருந்தது. இதுக்கு எதுக்கு 20 ரூபாய் என நினைத்து வரிசையில் சற்று முன்னேறியவுடன், ஒரு வழி எங்களுக்கு இடையில் வந்து புகுந்தது, வரிசையில் வாங்கப்பா என்றதர்க்கு 100 ரூ டிக்கெட் காட்டினார். சிவனை தரிசித்து வெளியே வருகையில், வாசலுக்கு வெளியே ஒரு தாத்தா தன் பேரனை தோள் மேல் தூக்கி "அதோ தெரியரார் பார் அவர்தான் சாமி, கும்பிடு" என்று சொல்லி கொண்டிருந்தார். டிக்கெட் வாங்காத பொது ஜனம்!!!


அடுத்து சரவண பவனுக்குத்தான் சென்று இருப்போம், அந்த வெண் பொங்கல் குடுக்கும் பெரியவர், "வாங்க சார் வந்து வாங்கிக்குங்க" என சொல்லாமல் இருந்திருந்தால். மீண்டும் வரிசை, பொங்கல் வாங்கிய என் நண்பன், பழக்க தோஷத்தில் வடை இல்லய என்றான். மெல்ல கொடுத்த இருபது ரூபாய்க்கு மேலாகவே இரண்டு முறை வரிசையில் நின்று என் நண்பன் மாலை உணவை முடித்து விட்டு, வருகையில் அந்த 100 ரூ டிக்கெட்ல் வந்தவர் மூன்றாவது முறை வரிசையில் நின்று கொண்டு இருந்தார். எப்படியோ ஒரு மாதிரி Adjust ஆயிடுத்து என சொல்லி கொண்டோம்.


ஆண்டி எங்கே? என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது, சத்யம் தியேட்டர் நோக்கி செல்கையில், என் நண்பன், " டே என் PLக்கு அடுத்த வீக் கல்யாணம், Teamல 3000 ரூ Collect பண்ணி இருக்கோம், வா Lifestyleல Gift Voucher வாங்கிட்டு போய்டுவோம்" என்றான்.அது என்னடா PLங்களுக்கு மட்டும் கல்யாணம் ஆகுது என சொல்லி கொண்டு கடை உள்ளே நுழைந்தோம்.


கல்யாண சீருக்கு வேண்டிய அத்தனை சமாச்சாரமும் இருந்தது, முடிந்த வரை அத்தனையும் கண்ணாடியில்!!!. முதல் மாடியில் வித விதமான கட்டில்கள் - ஓர் கட்டிலின் விலை சற்றே குறைய நான் Apply பண்ணி வாங்கி இருந்த Personal Loan அளவுக்கு இருந்தது, அதை மூன்று வருடத்தில் கட்டி முடிப்பதாக வங்கிக்கு வாக்கு கொடுத்து இருந்தேன். அந்த கட்டிலை சுற்றி சில குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்தன, அங்கே வந்த அதன் அம்மா "பீங்கி, ரிச்சா வா போகலாம்" என்று கூட்டி கொண்டு போனார்.


மெல்ல என் காதில் ஒரு இளையராஜா BGM கேட்க திரும்பினால் ஒரு பெண் - 20 வயது - தங்க நிறம் - பாப் முடி - சிகப்பு குடுத்தா - Blue Jean. பெண்ணே உனக்கு குடுதா யார் குடுத்தா? என கவிதை எல்லாம் தோன்றியது. என் நண்பன் , வாடா படத்துக்கு நேரம் அச்சு, Gift Voucher வங்கலாம் என்றான், வாங்க Counter அருகே வந்தேன். மெல்ல அவளும் அங்கே வந்தால். இதயம் - பட்டாம்பூச்சி - வானம்- பூ- பனி துளி அத்தனையும்!!!


அவள் சிரித்து கொண்டே அருகே வர, ஓர் உருவம் எங்கள் இருவருக்கும் நடுவில் ஓர் குழந்தையை வண்டியில் தள்ளி கொண்டபடி. குழந்தை மிக சிறியது. கண்ணை மூடி ஏதோ சிந்தனையில் இருந்தது. அந்த குழந்தையை பார்த்துவிட்டு, மேலே பார்த்தால், ஆ!! இந்த தேவதையை நான் எங்கோ பார்த்து இருக்கிறேன், அவரும் என்னை தான் பார்க்கிறார். என் நண்பன் காலை மிதிக்கிறான், ஏன் என தெரியவில்லை. ஆனா இந்த தேவதை?? அதற்க்குள் வெளியே ஓர் Carவர அந்த தேவதையும் அவருடன் வந்த ஓர் அம்மாவும் காரில் ஏற, என் நண்பன் டேய் பார்த்தியாடா?, யாரு? என்றேன், "ஜோதிகா டா நாம ஜோ" என்றான். ஆமாம் ஜோ தான் அது,


இப்படி தான் ஜோவை விட்டு விட்டேன், ஒருவேளை அவரை பார்த்து சிரித்து இருந்தால், "நல்லா இருப்போம் நல்லா இருப்போம்,எல்லோரும் நல்லா இருப்போம்" என புத்தாண்டு வாழ்த்து சொல்லி இருக்கலாம்.

மணிரத்னத்திற்க்கு கிடைக்கல எங்களுக்கு கிடைத்தது….

ரொம்ப நாளா Plan பண்ணி கடந்த வருடம் ஊட்டிக்கு போனோம். தங்கி இருந்த 4 நாட்களில், நாங்கள் ஊட்டியில் ஓர் நாள் கூட இல்லை. ஊட்டியை விட, அதை சுற்றி உள்ள இடங்களில் பார்ப்பது என்ற குறிக்கோளுடன் தான் போனோம். மசினகுடி, முதுமலை, Porthi Mund, Parsan Valley, Upper Bhavani என அத்தனை இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு வந்தோம். என் நண்பனின் அப்பா ஊட்டியின் EE ஆக இருந்ததினால் வந்த அனுகூலம் இது.

புது வெள்ளை மழை பாடலை கேட்டு கொண்டே, சிறு தூறலுடன் நடந்தது இந்த இடம் தான்,.Porthi Mund!!!



நதி உருவாகி பொங்கும் இடம், மங்கை மோக கூந்தல்!!



ரோஜா படத்தின் இறுதி காட்சியில் அரவிந்சாமியும் மதுபாலாவும் சந்தித்து கொள்ளும் அந்த இறுதி காட்சி Parsans Valleyல் தான் படமாக்க பட்டது. மணிரத்னம் அந்த காட்சியை Porthi Mundல் படமாக்க திட்டமிட்டு இருந்தார், ஆனால் அனுமதி கிடைக்காததால் Parsan Valleyல் படமாக்கினார். எங்களுக்கு அனுமதி கிடைத்தது, எப்படி நம்ம படம்?.



Upper Bhavani….


ஊட்டிக்கு சென்றால் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள இடங்களை கண்டிப்பாக பாருங்கள். அடுத்த முறை மசினகுடியில் Log Houesல் தங்க முடிவு எடுத்து உள்ளோம். நடு காட்டில் இரவு நேரத்தில்..

Sunday, March 22, 2009

Alfred Hitchcock - மர்மங்களின் மன்னன்

நம் ஆழ்மன இச்சைகளுக்கு ஒரு வடிகால் ஆகவோ அல்லது நல்ல வேலை நான் அப்படி இல்லை என்னும் சமாதானத்துக்காகவோ அவை உதவுவதால் தானோ என்னமோ மர்ம கதைகள் எப்போதுமே வசீகரமாக உள்ளது. "குற்றம் நடைபெறுவதில் அல்ல அதை பற்றிய எதிர்பார்ப்பில்தான் இருக்கிறது சுவாரசியம்" என்னும் Alfred Hitchcock மர்மங்களை கொண்ட திரைப்படங்களை உருவாக்கியதில் மன்னன் என அறியபடுபவர் . வித விதமான கொலைகளை விவரித்து பார்வையாளனை திருப்தி படுத்த முனைந்தவை அல்ல இவரின் திரைப்படங்கள் மாறாக கொலை செய்தவனின் மன நிலையையும் அதன் காரணமாய் அவனது வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களையுமே நம் முன் நிறுத்துகிறது. ஒரு வகையில் நம் மனத்தை பற்றிய அகதரிசனம் Hitchcockன் படங்கள்.




லண்டன் நகரில் 1899 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1920 முதல் திரை துறையில் பணியாற்ற தொடங்கி 50 மற்றும் 60 களில் Hollywoodன் முடி சூடா மன்னனாக விளங்கினார்.20 மற்றும் 30 களில் லண்டன் நகரில் BlackMail (1929), The Lady Vanishes (1938) என்னும் வெற்றி படங்களின் மூலம் தன் திரை வாழ்க்கையை துவக்கிய இவர் Rebecca (1940)மூலம் Hollywoodல் தடம் பதித்தார்.40 களில் இவர் இயக்கிய படங்கள் பல முன்னோடி


முயற்சிகள்.உதாரணமாக Life Boat (1944)ல் ஒரே ஒரு படகில் முழு திரைப்படத்தையும் உருவாக்கி இருந்தார், அதன் ஊதாகவே காதல், கல்கம், துரோகம், கருணை என அத்தனை அம்சங்களை கொண்டு வந்திருந்தார். பின்னர் Rope(1948) திரைப்படத்தில் ஒரே Shotல் முழு திரைப்படத்தையும் எடுத்தார் (Editing, Retake என எதுவும் இல்லை படத்தில்!!).இந்த வருடங்களில் வெளிவந்த படங்களில் Notorious(1946) (தனி Blogல் நிச்சயமாக) எனது Personal Favourite. Spellbound (1945), Shadow of Doubt (1943) ஆகியவை சிறப்பானவை.
"என்னுடைய பயத்தை போக்கி கொள்ளும் ஒரே வழி அதை பற்றிய திரைப்படங்கள் எடுப்பது தான்" என்னும் Hitchcock 50 களில் திரை துறையில் சிகரங்களை தொட்டார். இவரது Masterpieceகள் ஆன Strangers on Train (1951), Dial M for Murder (1954), Rear window (1954), Northby Northwest (1959) மற்றும் Vertigo (1958) ஆகியவை இந்த வருடங்களில் வெளிவந்தன. Rear Wndowல் கால் உடைந்து வீட்டு பால் கணியில் உட்கார்ந்திருக்கும் ஒருவர் எதிர் Plotல் கொலை நடந்திருக்கிறது என சந்தேக படுவதை பற்றியது. படம் முழுதும் நாம் நம் வீட்டு பால் கணியில் இருந்து படம் பார்ப்பது போலவே எடுக்க பட்டிருக்கும். சுஜாதாவின் "விரும்பி சொன்ன பொய்கள்" குறுநாவலில் இவரது Vertigo திரைப்படத்தின் சாயல் இருப்பதை சமீபத்தில் பார்க்கையில் உணர முடிந்தது.


இவரது அதிகம் பேசப்படட படமான The Psycho(பாலு மகேந்திராவின் மூடுபனி!!) 1960 ஆம் ஆண்டு வெளியானது.காட்சி அமைப்பு களிலும், கதை சொல்லும் முறையிலும் பல உத்திகளை கொண்டு வந்த Hitchcok தொலைக்காட்சி தொடர்களும் இயக்கி உள்ளார்.இவரது "Alfred hitchcock வழங்கும்" என்ற பெயரொடு வெளியிடப்பட்ட ஒரு மணி நேர தொடர்கள் பிரசித்தி பெற்றவை. பொதுவாகவே நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவாரான இவரிடம் "Laurel and Hardy" வைத்து படம் எடுக்கும் எண்ணம் உள்ளதா என்றதற்கு, "I was already Hardy inside" என்றார்.




தான் இறுதி நாட்கள் வரை திரை துறையில் இருந்த இவர் தன்னுடைய கல்லறை வரிகளாய் "நான் ஒரு கதை கருவில் ஆழ்ந்திருக்கிறேன்" என பொறிக்க சொல்லி விட்டு 1980 ஆம் ஆண்டு மர்மமானார் (மறைந்தார்!!).

Friday, March 20, 2009

திரைப்படமும் அதன் பின்னணி இசையும்

திரைப்படங்களின் சிறந்த பின்னணி இசை என்பது, இயக்குநர் திரையில் காட்டும் காட்சியின் வீரியத்தை அதன் உச்சத்திற்கு செல்ல கூடியதாக இருக்க வேண்டும். பல சிறந்த காட்சிகள் பின்னணி இசையின் பலத்தினாலேயே நிலை பெற்று விடுகின்றது. நான் பார்த்த படங்களில், என்னை பின்னணி இசையில் மிகவும் கவர்ந்தவார்கள் spaghetti westerns எனப்படும் Sergio Leone ன் Cow Boy படங்களுக்கு இசை அமைத்து புகழ் பெற்ற இசை மேதை எனியோ மோரிகனும் (Ennio Morricone) , நமது இளையராஜாவும்.


எனியோ மோரிகன் இத்தாலி நாட்டை சேர்ந்தவர், இரண்டாம் உலக போர் சமயம் தன் இளமையை வறுமையில் கழித்த இவர் தொடர்ந்து இசை பயின்று சிறு சிறு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். 1960 ல் இவர் Sergio Leone உடன் இணைந்தது ஓர் முக்கியமான நிகழ்வு. இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவான சில முக்கியமான படங்கள், A Fistful of Dollars, For a Few Dollars More (1965), The Good, the Bad and the Ugly (1966), Once upon a time in west,Once upon a time in America (1968).இதை தவிரவும் The Battle of Algiers(1965), Malena, Cinema paradiso போன்ற மிக சிறந்த பல படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.



Once Upon a Time in West ல் ஒரு காட்சி - படத்தின் முதல் 15 நிமிடங்களுக்கு படத்தில் இரு வரி வசனம் மட்டுமே வருகிறது, மற்ற அத்தனை விஷயங்களையும் இசை பேசுகிறது. கௌ பாய் உடை அணிந்த ஓர் ஐந்து பேர் ஓர் வீட்டின் முன் வருகிறார்கள், அந்த வீட்டின் உரிமையாளன்(ஓர் கிழவன்) , ஏதாவது வேண்டுமா என்கிறான், ஐவரில் ஒருவன் கையை Beltல் உள்ள துப்பாக்கியை நோக்கி செலுத்துகிறான், மெல்ல ஒரு Guitar ஒலி கேட்கிறது. அந்த கிழவன் ஒன்றும் சொல்லாமல் ஓர் அறையில் சென்று ஒளிந்து கொள்கிறான், அந்த ஐவரும் ஆளுக்கு ஓர் மூலையில் அந்த வீட்டை சுற்றி நின்று கொள்கின்றனர், இதன் அத்தனைக்கும் நடுவில் மெல்ல கீச் கீச் என்று ஓர் ஒலி கேட்டு கொண்டே உள்ளது. அவர்கள் தன் இடம் நோக்கி சென்ற உடன், காமீரா அங்கே உள்ள ஓர் காற்றாடியை நோக்கி திரும்ப, அந்த கீச் ஒலி பெருகுகிறது. அங்கு நிற்க்கும் ஒருவனது கண் இங்கும் அங்கும் அலை பாய்கிறது, இசையும் சேர்ந்து அவனோடு. கண்ணின் அசைவுக்கு இசை வடிவம் கொடுத்தவர் இவராகத்தான் இருப்பார். அந்த 15 நிமிட காட்சி இயக்கமும் இசையும் ஓத்திசையும் ஓர் அதிசயம். பல காட்சிகளில், மோரிகனிடம் ஒரு காட்சியை சொல்லி விடுவாராம் Sergio Leone, அவர் இசை அமைத்த பின் அந்த இசைக்கு தகுந்தார் போல் காட்சி படம் பிடிக்க படுமாம்.


எனியோ மோரிகனின் பின்னணி இசை தனி குறுந்தகடுகளாக வந்து வசூலில் சாதனை படைத்து உள்ளது. இதுவரை அதிக விற்பனையான இசைதகடு இவர் உடையதே!!. இவர் பல படங்களில் அமைத்த பின்னணி இசையின் 2 மணி நேரத்திற்க்கும் அதிகமான இசை தொகுப்பு என்னிடம் உள்ளது. உறக்கம் வராத பின்னிரவு பொழுதுகளில் (12 மணியை தாண்டி) அந்த இசையை கேட்ட உடன், மெல்ல அது நம்மை கௌ பாய்களின் உலகத்திற்கே கொண்டு செல்வதை உணர்ந்திருக்கிறேன்.


அந்த இரவுகளில் எங்கோ ஓர் புதையலை நோக்கி என் மனம் செல்லும் சாகச பயணத்தின் துணையாக இவரது இசை வந்த வண்ணம் இருக்கும், அதில் வரும் துப்பாக்கி குண்டுகளின் சத்தமும், குதிரை குளம்பின் ஒலியும் மெல்ல துரத்தி கொண்டே வரும். மெல்ல அந்த புதையலை எடுக்க போகையில் தீடீரென்று ஓர் கனத்த மௌனம் நிலவும், இவரது இசையின் உச்சம் அவர் உருவாக்கும் அந்த மௌனத்தின் ஊடே உள்ளது.எங்கோ ஒளிந்திருந்து துப்பாகியுடன் இரு கண்கள் நம்மை காண்பது போல் அந்த மௌனம் நம்மை உறுத்த, மெல்ல அந்த இசை கண் விழிக்கும், மீண்டும் நம் துணை வந்து விட்டது என்று ஒரு சின்ன புன்னகையுடன் அந்த புதையலை எடுத்து கொண்டு விழிக்கையில் காலை மணி 4ஐ கடந்திருந்தது.


இவரது இசை பாடல்களும் பல உலக திரை படங்களில் இவர் அனுமதியுடன் பயன் படுத்த பட்டுள்ளது. எனது விருப்பமான இயக்குநர் Quentine Torantino இவரது தீவிர விசிறி, இந்த ஆண்டு வெளியாகும் இவரது படத்திற்க்கு எனியோ மோரிகனே இசை அமைத்து உள்ளார். அதை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.



பல படங்களுக்காக ஆஸ்கர் விருதிற்க்கு இவர் பரிந்துரை செய்ய பட்டிருந்தாலும் , சத்தியஜித் ரேவிற்க்கு கொடுக்க பட்டது போல், இந்த மேதைக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி ஆஸ்கர் பெருமை பட்டு கொண்டது. இவருக்கு அந்த விருது வழங்கபடுகையில் அரங்கமே எழுது நின்று வணங்க, விருதை இவர் Clint Eastwood கையில் இருந்து பெற்று கொண்டார். அப்போது இவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை, அப்போதும் இவர் கை எங்கோ காற்றை நோக்கி நீட்டிய வண்ணம் இருந்தது

பின் வரும் பதிவுகளில் இளையராஜாவின் பின்னணி இசையை பற்றி……

Thursday, March 19, 2009

No Man’s Land - தனிமையின் சுழலில்

இந்திய படமான "Lagaan" மற்றும் French படமான "Amelie" ஆகிய இரண்டு படங்களுடன் போட்டியிட்டு Oscar விருதை தட்டி சென்ற படம் No Man's Land. கீழே இருக்கும் படத்தை பார்த்தால் யாரோ இருவர், சாலையில் Lift கேட்கிறர்கள் என்று தான் முதலில் தோன்றும். நானும் அப்படி தான் நினைத்தேன், பின் அதுவும் என்ன இது சட்டை எல்லாம் இல்லாமல் இப்படி நிற்கிறார்கள் என்று கூட நினைத்தேன். No Man's Land படத்தை பார்த்த பின் தான் தெரிந்தது அவர்கள் சட்டை போட்டு கொண்டு நின்றிருந்தால் சுடப்பட்டு இறந்து போய் இருப்பார்கள் என்று.




Bosnia என்று உலக மேப்பில் தேடி கண்டு பிடிக்க வேண்டிய ஒரு தேசத்தில் இருந்து வெளியான படம் இது. Danis Tanović என்னும் இப்படத்தின் இயக்குநரது முதல் படாமாம், நம்ப முடியவில்லை. Bosnia மற்றும் Serbia நாடுகளின் எல்லை பகுதியில் இரு நாட்டாரும் நுழைய கூடாத இடத்தில் நடக்கும் கதை இது. கதை ஓர் இரவில் துவங்குகிறது. வழி தவறிய Bosnia உதவி குழு ஓர் மரத்தடியில் ஓய்வு எடுகின்றனர், காலை எழுந்தவுடன் செல்லலாம் என்று. காலை கண் விழிக்கையில் சூரியனை மறைத்து கொண்டு மேட்டில் இருந்து ஓர் பீரங்கி நகர்ந்து வர, அவர்கள் நிற்பது No Man's Landல் என்பது அவர்களுக்கு புரிவதற்குள், Serbia எல்லையில் இருந்து வந்த குண்டு மழையில் நனைந்து உயிர் துறக்கின்றனர். அவர்களில் ஒருவன் மட்டும் தப்பித்து பங்கர் போன்ற ஓர் குழியில் வீழ்கிறான்.


அவர்கள் அனைவரும் இறந்தார்களா இல்லையா என்று அறிந்து வர, Serbia படை வீரர்கள் இருவர் வருகின்றனர், அதே பங்கர் வழியில்!. கீழே இருந்த ஓர் துப்பாக்கியை எடுத்து வைய்த்து கொண்டு அதில் பதுங்கி இருக்கும் Bosnia வீரன், அவர்கள் வரும் சத்தம் கேட்டு அங்கிருந்த ஓர் சிறு குடில் உள் ஒளிந்து கொள்கிறான். அங்கே வரும் அந்த Serbia வீரர்கள், யாரும் இல்லை, ஆனால், இந்த இறந்த உடல்களை எடுக்க வருவார்கள் தானே என்று, ஓர் கண்ணி வெடியை இறந்து போன Bosnia வீரன் ஒருவனுது உடலுக்கு அடியில் வைய்த்து விட்டு செல்கின்றனர். அந்த சமயம் குடிலில் இருந்து வெளி வரும் அந்த Bosnia வீரன், அவர்களை நோக்கி சுட, ஒருவன் அங்கேயே இறக்கிறான், மற்றவன் காலில் குண்டடி பட்டு வீழ்கிறான்.
ஒருவன் கையில் துப்பாக்கியுடன் நிற்க, ஒருவன் காலில் அடி பட்டிருக்க, மெல்ல ஓர் முனகல் சத்தம் கேட்கிறது. மெல்ல நம் கவனம் அங்கே வீழ்ந்திருந்த ஓர் உடல் நோக்கி திரும்புகிறது. பிணம் என்று அவர்கள் கண்ணி வெடி வைத்த உடல் அசைகிறது, அவன் சாகவில்லை சாகும் தருவாயில் உள்ளான்!!.இருவரும் ஓடி சென்று அவனை அசைய வேண்டாம் என்று சொல்கின்றனர். மரணம் இரு நாட்டு வீரர்களையும் சிறிது சிந்திக்க வைக்கிறது. கண்ணி வெடி மேல் படுத்திருப்பவன், இருவரையும் அழைத்து, பங்கரின் மேல் சென்று எதிர் எதிர் எல்லையை நோக்கி கை அசைக்க சொல்கின்றான். அவர்களும் அதே போல் தங்கள் Military உடைகளை கலைந்து விட்டு அவ்வாறே செய்கின்றனர்.


சமாதானத்தின் பொருட்டு அங்கே தங்கி உள்ள UN வீரர்கள் இரு நாடுகளின் அனுமதியோடு உள்ளே நுழைகின்றனர்.அதற்க்குள் அங்கே வேறு ஓர் வேலையாய் வரும் தொலைக்காட்சி நிரூபினியின் கவனம் இங்கே குவிகிறது.பின் பல தொலைக்காட்சி நிருபர்கள் அங்கே வர, அங்கு நடக்கும் நிகழ்வுகள் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. அங்கே வரும் UN Bomb Squad நிபுணன், அந்த கண்ணி வெடியை ஆராய்ந்து விட்டு, இதை செயலிழக்க வைப்பது முடியாத காரியம், அவன் அங்கிருந்து அசைந்தால் இறப்பது உறுதி என்கிறான் UN வீரனிடம். Serbia வீரன் என்னை மட்டுமாவது அழைத்து செல்லுங்கள் என்கிறான், துப்பாகியுடன் உள்ள Bosnia வீரன் அவன் காலில் மீண்டும் சுட்டு போனால் நாம் அனைவரும் போவோம் என்று அவனை நிறுத்துகிறான்.


UN வீரர்கள் அவனை காப்பாற்றுவதாக வாக்கு கொடுத்து அவர்கள் இருவரையும் மேல கொண்டு வர, அப்போது ஆத்திரத்தில் Bosnia வீரன் Serbia வீரனை சுட, UN வீரர்கள் அந்த Bosnia வீரனை சுட்டு வீழ்த்துகின்றனர். அங்கு வரும் UN தலைவர், நிருபர்களிடம் அங்கே இருந்து செல்லுங்கள், இங்கு நிற்க கூடாது என்கின்றான். அந்த குழியில் இருப்பவர் என்று அந்த நிருபர் கேட்க, அவரை காப்பாற்றி விட்டாகியது, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல படுகிறான் என்கிறார்கள்.


அந்த இடத்தை விட்டு எல்லாம் நகர, மேல ஓர் விமானத்தில் UN தலைவர் செல்ல, அந்த பங்கருக்குள் கண்ணி வெடி மேல் உள்ள Bosniaன், தன் பாக்கெட்டில் உள்ள, தன் மனைவியின் புகைப்படத்தை பார்ப்பதாய் படம் கனத்த மௌனத்துடன் முடிகிறது.


UN குழுக்களின் கையலாகாத தனம், தொலைக்காட்சி செய்திகளின் வியாபார போட்டியின் ஊடே மனித மனதின் வெறுப்பு, காழ்புணர்ச்சி என அத்தனை அம்சங்களையும் தொட்டு செல்லும் இப்படம் Lagan ஐ மீறி விருது வாங்கியதில் ஆச்சரியம் ஏதுமில்லை..


இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |

Wednesday, March 18, 2009

பயணிகளின் கனிவான கவனத்திற்க்கு….

பயணிகளின் கனிவான கவனத்திற்க்கு நான் மிக குறைந்த அளவே ரயிலில் சென்று உள்ளேன்,சென்ற சில பயணங்களிலே சில சிறுகதைக்கான கரு உள்ளதால் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஏற்பாடாக இந்த பயணம் இனிதே துவங்குகிறது.


முதல் ரயில் பயணம் - திருவனந்தபுரம் டு சேலம், எதிர் சீட் சேச்சியுடன் இனிதே துவங்கியது, சேச்சி என்றவுடன் உங்கள் மனத்தில் ஒரு பிம்பம் தோன்றி இருக்கும் என்பதினால் அதை கலைக்க விரும்பாமல், சேச்சியை பற்றிய வர்ணனைகளை விடுத்து மேலே தொடர்கிறேன். கையில் ஓர் நாள் இதழ் வைத்து படித்து கொண்டிருந்தார், அதை பார்த்து, பரவா இல்லயெ, நம்ம ஊர் ஆச்சிக்கு கூட மலையாளத்தில் ஒரு நாள்ளிதழே வருகிறதே என பெருமை பட்டு கொண்டேன்.சிறிது நேரம் கழித்து தமிழா என்றார்?, கமல் பிடிக்குமோ என்றார், ஓ!! என்றேன், மலையாளம் அறியுமோ? என்றதற்கு "இச்சிறி அறியும்" என்றேன். மோகன்லால் படம் கண்டுட்டு உண்டோ? என்றார், "ஆங் குறைச்சு என்றேன், வல்லிய Actor ஆனும், மணிச்சிதிராதாழு பாக்கணும் கேட்டோ!! என்று சொல்லி அடுத்த Stationல் இறங்கி போகையில், "இவடயே வீடு, பின்னே ஒரு நாள் தம்பி(அநியன்) வீட்டிருக்கு வரணும்" என்று சொல்லி இறங்கி சென்று விட்டார். முகவரி தரவில்லை.


இரவு நேர Pune நகரம் - 6 மாத காலம் Pune நகர Project வேலையை முடித்து விட்டு ஏப்ரல் 12 ஆன இன்று இரவு ஊர் திரும்புகிறோம். ஏற்கனவே நண்பன் கிருஷ்ணா Ticket எடுத்து விட்டிருந்தான். 6 மாதம் பிழிந்து வேலை வாங்கிய professor இரவு விருந்திற்க்கு அழைத்திருந்தார். நம்ம ஊர்காரர்தான் என்பதால் சப்பாத்தி இல்லாமல், சாப்பாடு நன்றாகவே இருந்தது. இரவு 10 மணிக்கு மேல் எங்கள் இடத்தில் இருந்து ரயில் நிலையத்திற்க்கு பேருந்து வசதி இல்லாததால், 1.30 மணி ரயிலுக்கு 10.30 மணிக்கே வந்து விட்டோம். 1 மணி வரை வாசலில் இருந்து விட்டு, பின் ப்ளாட்பாரம் எண் அறிவித்த உடன் உள்ளே சென்றோம். தமிழில் நாங்கள் பேசி கொண்டிருப்பதை பார்த்து விட்டு எங்கள் அருகே ஒருவர் வந்தார். "தம்பி, இந்த வண்டி எங்கே வரும்னு பார்த்து சொல்லுப்பா என்றார்", 2.30 மணிக்கு 3 வது ப்ளாட்பாரம் வர போகும் ஒரு மதுரை வண்டியின் Ticket அது.எங்கள் வண்டி வந்த உடன், நாங்கள் ஏறி உள்ளே அமர்ந்தோம், ஒரு தாத்தா வந்து, இந்தியில் ஏதோ சொன்னார், நாங்கள் பிச்சை கேட்கிறார் என நினைத்து, திரும்பி கொண்டோம், பின் அவர் கையில் இருந்த Ticketஐ காட்டினார், எங்கள் சீட்டிற்கான Ticket அது. எப்படி ஒரே சீட்டுக்கு ரெண்டு Ticket கொடுக்க முடியும் என என் நண்பன் அவரிடம் அரை குறை இந்தியில் கேட்டு கொண்டிருக்க வண்டி நகர ஆரம்பித்தது, உடனே நான் என் நண்பனின் கையை பிடித்து இழுத்து கொண்டு அவசர அவசரமாக வண்டியில் இருந்து இறங்கினேன். "3 வது ப்ளாட்பாரம் மதுரை Ticket தான் அது ஆனா April 13 ஆம் தேதி ஆன நாளைக்கு போக வேண்டிய Train Ticket அது" என்று ஒருவரை நான் சற்று நேரத்திற்க்கு முன் அனுப்பினேனே அவரை தேடி!!! ரயில் நிலைய கடிகாரத்தில் மணி April13 காலை 1.30யை கடந்து கொண்டிருந்தது.எங்கள் Ticketல் April 12, 1.30 A.M என்று போட்டிருந்தததை சொல்ல தேவை இல்லை தானே??


சத்திய சோதனை - புத்தக கண்காட்சிக்கு இரண்டாவது முறையாக கிளம்பி கொண்டிருந்தேன், "சத்யம்" பிரச்சனையால் மனம் ஒடிநத என் அறை நண்பனையும் கூப்பிட்டு கொண்டு கிளம்பினேன். Velachery ரயில் நிலையத்தில், இரண்டு Chetpet Ticket என்று கேட்டு வாங்கி கொண்டு Port வரை சென்று அங்கிருந்து மற்றொரு ரயில் மாறி Chetpet வந்து சேர்ந்தோம். சரியாக Station Master அறை அருகில் இருந்த Berthல் இருந்த நாங்கள் இறங்க, அவர் எங்களிடம் Ticketஐ கேட்டார்.பார்த்து விட்டு, எங்க இருந்து வறீங்க என்றார்? Velachery என்றோம்.Chepauk வரை தான் Ticket எடுத்து இருக்கீங்க என்றார். அலறி அடித்து கொண்டு பார்த்தோம், Sir, Chetpetனு சொன்னது Ticket கொடுக்கிறவர் காதுல Chepaukனு விழுந்திருக்கு ,நாங்க ஒண்ணும் தப்பு பண்ணல. Book Fair க்கு வந்தோம் என்றோம். நான் ஒண்ணும் பண்ண முடியாது வாங்க, Fine கட்டுங்க, ஆளுக்கு 250 எடுங்க என்றார். Sir என்றோம், சரி ஒருத்தராவது கட்டுங்க என்று ஒரு voucherஐ எடுத்தார்.என்ன பண்றீங்க என்றார்?, Software Engineer என்றதற்க்கு அப்ப ரெண்டு பேரு கிட்டயும் வாங்கலாமே என்றார். "சத்யம்" company பரவா இல்லயா என்றான் என் நண்பன்.சற்று நிமிர்ந்து பார்த்தார், பின், என்னப்பா நடக்குது உங்க Companyல என்றார், Board Meeting வச்சி இருக்காங்க, இந்த மாச சம்பளம் வருமானு தெரியல sir என்றான். சரி போங்கப்பா, போகும் போது Ticket எடுத்துக்குங்க என்றார். ஒன்றும் பேசாமல் புத்தக கண்காட்சியை நோக்கி நடந்தோம்.

திரை இசை பாடல்களில் திருக்குறள் - ஒரு போட்டி

திருக்குறளையும் சினிமா பாடல்களையும் நம்மிடம் இருந்து பிரிக்கவே முடியாது என நினைக்கிறேன். ஏதேனும் ஒரு வகையில் இவை இரண்டும் நாம் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் துணையாகவோ, ஆறுதலாகவோ வந்துள்ளது. சங்க மற்றும் கம்ப ராமாயணத்தில் இருந்து வரிகளை நவீனப்படுத்தி திரை இசை பாடல்களில் கண்ணதாசனும் வாலியும் குடுத்து உள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். நேற்று திருக்குறள் புத்தகத்தை புரட்டுகையில் (இன்பத்துபால்தான்!!), சில குறள்கள் திரை இசை குரல்களாய் ஒளித்து உள்ளத்தை கண்டேன்.


காதலை, காதலியை ஒரு பித்து நிலையில் இருந்தே வள்ளுவர் வர்ணித்து தள்ளி உள்ளார். "அணங்கு கொள் ஆய் மயில் கொல்லோ" நீ மனித பிறவியா இல்லை தேவதையா என்கிறார். சூடான பொருட்களை உண்ண மாட்டேன், ஏன் என்றால் என் நெஞ்சத்தில் உள்ள காதலன் அந்த சூட்டை தாங்க மாட்டான் என்கிறாள் காதலி. தும்மினால் தலையில் தட்டி பார்த்து பார்த்து என்கிறாள், தட்டி முடித்த அடுத்த நிமிடம், உங்களை நினைக்க வேண்டிய நான் இங்கு இருக்க யார் உங்களை நினைக்க நீங்கள் இங்கு தும்மினீர்? என கோபம் கொள்கிறாள்.Possesiveness?!!


மேலே குறிப்பிட்ட சில நிகழ்வுகள் பல நாம் பார்த்திருக்கலாம், கேள்விப்பட்டிருக்கலாம், உங்களில் அதிஷ்டம் உள்ள சிலர் வாழ்வில் அது நடந்தும் இருக்கலாம்.இங்கே சில திருக்குறளும் அதன் பொருளும் கொடுத்து உள்ளேன், அதன் கீழ் சில திரைப்படங்களின் பெயர்களையும் கொடுத்து உள்ளேன். உங்க வேலை ரொம்ப Simple, நீங்க என்ன பண்ணுங்க,எந்த குறள் எந்த திரைப்படத்தின் பாடலுடன் பொருந்துதோ அந்த எண்னையும் அந்த பாடல் மற்றும் பாடல் வரியையும் குறிப்பிடுங்கள். (இந்த பதிவின் பின்னூட்டமாக உங்கள் பதிலை பதிவு செய்யுங்கள்).முடிந்த வரை எளிய குறல்களையே தேர்வு செய்து உள்ளேன், மேலும் அதன் பொருளையும் சுருக்கியே கொடுத்து உள்ளேன் (உங்களுக்கு புரியும் என்ற நம்பிக்கையில்).


திருக்குறள்:

(a) கண்ணோடு கண்ணினை நோக்குஒக்கின் வாய்சொற்கள்

என்ன பயனும் இல

பொருள்: கண் பேசுகையில் வாய் சொற்கள் வேண்டுமா? - பார்வை ஒன்றே போதுமே!! ஓராயிரம் சொல் வேண்டுமா?


திருக்குறள்:

(b) நனவினால் நலகா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டுஎன் உயிர்

பொருள்: நேரில் இல்லை என்றால் பரவாயில்லை, அடியே கனவிலேனும் சொல் உன் காதலை என் உயிர் வாழும்!


திருக்குறள்:

(c) மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும்

வேலை நீ வாழி பொழுது

பொருள்: மாலை பொழுதே, பிரிந்திருக்கும் என்னை வாட்டுவது ஏனோ?


திருக்குறள்:

(d) வாள்அற்றுப் புற்க்கென்ற கண்ணும் அவர்சென்ற

நாள்ஒற்றுத் தேய்ந்த விரல்

பொருள்: உன் வருகை பார்த்து என் கண் பூத்தது, நாள்காட்டி தாள் தள்ளி விரல் தேய்ந்தது..


திருக்குறள்:

(e) அவர்நெஞ்சு அவர்க்குஆதல் கண்டும் எவன்நெஞ்சே

நீஎமக்கு ஆகா தது

பொருள்: நான் சொல்வதை கேட்க மாட்டாயா என் மனமே?


திருக்குறள்:

(f) கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள

பொருள்: ஐம்புலன் தரும் இன்பம் உன் கண்களிலே பெண்ணே!


திரைபடங்கள்: (1) காதல் வைரஸ் / ஏப்ரல் மாதத்தில் (2) நேருக்கு நேர் (3) சுப்ரமணியபுரம்/ கிரீடம் (4) மண்வாசனை/ நீ வருவாய் என (5) பூவெல்லாம் கேட்டுப்பார் (6) சேது.


பதில்களை <திருக்குறள் > -<படஎண்>-<பாடல்வரி> என்ற வரிசையில் குறிப்பிடுக. மேலே குறிப்பிட்ட படம் அல்லாமல் வேறு ஏதேனும் படங்களில் நீங்கள் கேட்டிருந்தாலும் பகிந்து கொள்ளுங்கள்….

பிடித்த பத்து தமிழ் படங்கள்

தமிழில் எனக்கு விருப்பமான சில படங்களை இங்கு தெரிவு செய்து உள்ளேன். முன்பே சொன்னது போல், இவை விருப்ப பட்டியல், தர வரிசை பட்டியல் அல்ல. மேலும் இங்கு குறிப்பிட்டுள்ள படங்கள் யாவும் ஓர் வகையில் Trend Setterகள்.அதற்கு பின் வெளி வந்த பல படங்களில் இந்த படங்களின் பாதிப்பு இருக்கிறது, அந்த கால கட்டத்தில் யாரும் எடுக்க துணியாத விஷயங்களை எடுத்ததற்காகவும் சில படங்கள் எனக்கு பிடிக்கும்.


1.அந்த நாள்

S.பாலசந்தர் இயக்கத்தில் சிவாஜி, பண்டரி பாய் நடித்து 1954 ல் வெளியான அந்த நாள், தமிழ் சினிமாவின் ஒரு திருப்புமுமுனை படம். பக்கத்து அறையில் இருப்பவரை கூப்பிட கூட, "என் நாதா, நீ வருவாயா, உன் திருமேனி தரிசனம் தருவாயா" என பாடி கொண்டிருந்த கால கட்டத்தில், பாடல்களே இல்லாமல் ஒரு துப்பறியும் கதை இது."Roshomon" படத்தின் பாதிப்பு இருக்கும்.



2.காதலிக்க நேரமில்லை

கேளிக்கை படங்களுக்கான அத்தனை அம்சங்களும் கொண்ட ஸ்ரீதரின் படம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம், நாகேஷின் நகைச்சுவை, எம்.எஸ்.வின் பாடல்கள், அழகான திரைக்கதை யாவும் படத்தின் வெற்றிக்கு காரணம்.



3.16 வயதினிலே

ஒரு கிராமத்தின் வாழ்வை யதார்ததமாய் படம் பிடித்த பாரதிராஜாவின் வரவை அறிவித்த படம் 16 வயதினிலே."செட்" கலுக்குள் முடங்கி கிடந்த சினிமாவை கை பிடித்து தெருவுக்கு அழைத்து வந்தார் பாரதிராஜா என வைரமுத்து இப்படத்தின் வரவை குறுப்பிட்டு உள்ளார்.



4.அவள் ஒரு தொடர்கதை

கே. பலசந்தரின் இயக்கத்தில் வெளியான அவள் ஒரு தொடர்கதை, மிக அதிகமான கிளை கதைகளை கொண்டது.


5. உதிரிப்பூக்கள்

அன்றய போக்கிற்கு முற்றிலும் மாறாக, கருப்பு வெள்ளை என தட்டையான, ஹீரோ வில்லன் என்ற போக்கை உடைத்து, சாதாரண மனித உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க பட்ட படம். மணிரத்னம் அவர்களுக்கு ஒரு Inspiration ஆக அமைந்த படம்.



6.மூன்றாம் பிறை

கமல் மற்றும் ஸ்ரீ தேவியின் மிகை இல்லாத நடிப்பில் வெளியான பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை.


7. குணா

மன நலம் பாதிக்க பட்டவர்களை பற்றி எடுக்க பட்ட தமிழ் படங்களில், முதன்மையானது இப்படம். இளையராஜாவின் பின்னணி இசையும், கமலின் நடிப்பு திறனும் ஒன்று சேர்ந்த படங்களில் இதுவும் ஒன்று. வெளிவந்த காலத்தில் சரியாக கவனிக்க படாமல் போனது. தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக இதை நினைக்கிறேன்.



8.நாயகன்

இந்த நூற்றாண்டின் சிறந்த நூறு படங்கள் என டைம் இதழ் வெளியிட்டு உள்ள பட்டியலில் இடம் பெற்று உள்ள ஒரே தமிழ் படம். மணி ரத்னம் மற்றும் கமல் இணைந்து உருவாக்கிய ஒரு திருப்பு முனை படம். வேலு நாயக்கர் என்னும் நிழல் உலக நாயகனின் வாழ்வை 2.30 மணி நேரத்தில் உள்ளடக்கிய சாதனை.



9.அலைபாயுதே
நீண்ட யோசனைக்கு பின்னே இப்படத்தை பட்டியலில் சேர்த்தேன், "மௌன ராகம்" கார்த்திக்கின் சற்று நவீன வடிவம் உள்ள படமாக இருந்தாலும், அதுவரை இருந்து வந்த ஒரே வகைமாதிரி (stereotypical) படங்களை தகர்த்த விதத்தில் இப்படம் மிக முக்கியமானது.



10.கன்னத்தில் முத்தமிட்டால்

மணிரத்னம் படங்களிலே மிக குறைந்த அளவு சமரசம் கொண்ட படம், சுஜாதாவின் கட்சித வசனம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என உருவான ஓர் உலக தரமான படம்.



பிடித்த 10 படங்கள் வரிசையில், மணிரத்னம் அவர்களின் 3 படங்கள் வந்தது முழுக்க என் ரசணையின் பார் பொருட்டே, இதை தவிரவும் பல முக்கியமான படங்கள் இருக்கலாம். ஜெயகாந்தனின் , "சில நேரங்களில் சில மனிதர்கள்", "என்னை போல் ஒருவன்", பாலு மகேந்திரவின் "வீடு" ஆகியவை நான் இன்னும் பார்க்கவில்லை.

Thursday, March 12, 2009

பிடித்த பத்து ஆங்கில படங்கள்

IMDBயில் உள்ள Top 250 படங்களையும் பார்த்து விடுவது என்று நானும் என் நண்பனும் முடிவு எடுத்து, கடந்த 6 மாதங்களாக பார்த்து தள்ளி கொண்டு இருக்கிறோம். அவ்வப்போது எனக்கு பிடித்த உலக மற்றும் Hollywood சினிமாக்களை இங்கு பதிவு செய்து வந்து உள்ளேன். பொழுது போக்கிற்கு சினிமா என்பது மாறி, அதன் வீச்சும், சாத்தியங்களும் விரிந்து வந்துள்ளது. இனியும் தொடர்ந்து என்னை கவர்ந்த திரை படங்களை இங்கு எழுத உத்தேசித்திருந்தாலும், நல்ல படங்கள் பார்க்க விரும்பும் ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டும் என நான் நினைக்கும், பரவலாக பல பேர் தெரிந்திருக்கும் சில படங்களை இந்த பதிவில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இது தர வரிசை அல்ல என் விருப்ப வரிசை.

1. Shawshank Redemption


என்னிடம் யார் எப்போது வந்து நல்ல ஆங்கில படங்கள் பற்றி பேசினாலும், நான் முதலில் பரிந்துரைக்கும் படம் இது. Frank Darabount இயக்கத்தில் Tim Robinson, மற்றும் Morgan Freeman நடித்து 1994 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் Shawshank என்னும் சிறையில் 20 வருடங்களை கழிக்கும் ஒருவனை பற்றிய படம். “Fear can hold you in prison, Hope can set you Free” என்னும் Tag line உடன் வெளிவந்தது இப்பப்டம். IMDBயில் No.1இப்படத்தின் இயக்குநரது “Green Mile” லும் எனது விருப்பமான படம்.



2. The GodFather I and II

Francis Ford Coppola வின் இத்திரைப்படம், இன்று வரையில் நிழல் உலகின் கதையை எடுத்து காட்டியதில் முன்னணியில் உள்ளது. Brando மற்றும் Al Pacinno வின் நடிப்பில் 1972 ஆம் வெளியான இப்படத்தின் பதிப்பு இன்று வரை அத்துணை நிழல் உலக படங்களிலும் தொடர்கிறது.



3. The Good, the Bad and the Ugly

Cow boy படங்களில் ஒரு சகாப்த்த்தை உருவாக்கிய Sergio Leon னின் இததிரைப்படம், ஒரு புதையலை தேடி செல்லும் மூவரை பற்றியது.



4. One Flew over Cuckoos Nest

Jack Nicholson என்னும் அற்புத கலைஞன் நடிப்பில் வெளி வந்த இப்படம், ஒரு மன நல காப்பகத்தில் நடப்பது. மன நல காப்பகம் சார்ந்து இது வரை எந்த ஓர் திரைப்படமும் எனக்கு இந்த படம் அளவிற்கு பாதித்ததில்லை. அன்பு, கேலி, சந்தோஷம், விளையாட்டு என பல விஷயங்களை உள்ளடக்கிய இப்படம் Jack Nicholson நடிப்பில் ஒரு மைல்கல்.



5. 12 Angry Men

நீதி மன்ற காட்சிகளை உள்ளடக்கிய பட வகைகளில் என்னை மிகவும் கவர்ந்தது இது. 12 பேர் ஓர் அறையில் அமர்ந்து பேசி கொண்டே இருப்பதுதான் படம். இதை தவிர நீதி மன்றங்களை அடிபடையாய் கொண்டு வெளியாகிய படங்களில் To Kill a Mocking Bird மற்றும் Judgement at Nuremberg சிறப்பானது.



6. The Silence of the Lambs

Thriller வகைகளில் இந்த படம் சிறப்பானது. நேர்த்தியான திரைக்கதை மூலம் கதையை நகர்த்தி செல்லும் இப்படம் ஒரு தொடர் கொலைகாரனை தேடும் பெண் FBI ஐ பற்றியது.


7.Taxi Driver

நிழல் உலகத்தை பல வகைகளைல் எடுத்து காட்டிய Martin Scorsese ன் Taxi Driver Robert De Niro நடித்து வெளி வந்தது. இரவு நேர வாடகை வண்டி ஒட்டும் ஒருவனது வாழ்வும், அவன் எதிர் கொள்ளும் மன உளைச்சல்களும் மிக அழகாய் படம் பிடிக்கப்பட்டுள்ளது.



8. Notorious

ஓர் திரைக்கதை படத்தின் வெற்றிக்கு எந்த அளவு முக்கியம் என்பதை இந்த படம் மூலம் உணரலாம். Hitchcock என்னும் மேதை இரு நூல் நுனிகளையும் தன் கையில் வெய்து கொண்டு மெல்ல அதை சுற்றி சுற்றி பல முடிச்சுகளை விழ செய்து, அந்த கடைசி இரண்டு நிமிட காட்சியில் மெல்ல அந்த நுனியை இழுக்கையில் அத்துன்னை முடிச்சுக்களும் அறுந்து விழுகிறது இந்த படத்தில். Hitchcok ஐ பார்க்க ஆரம்பிபபவர்கள் இதிலிருந்து தொடங்கலாம்.


9. Schindlers List
Steven Spielberg இயக்கத்தில் 1993 ல் வெளியான இப்படம் Hitlerன் Nazy Campல் நடந்த கொடுமைகளை சித்தரித்து காட்டியது.



10. The Prestige
எனக்கு மிகவும் விருப்பமான இயக்குநர்களில் ஒருவரான Christophar Nolan னின் இந்த படம். இது வரை வெளியான திரைப்படங்களில் அதிக பட்ச திருப்பு முனை காளை கொண்டது. ஒவ்வொரு 10 நிமிடத்திற்க்கும் திரைக்கதையில் மாறுதல் வந்த வண்ணமே இருந்தது இந்த படத்தில்.

முடிந்த வரை, ஒவ்வொரு வகை மாதிரியில் (Genre) ஒரு படத்தை தந்து உள்ளேன். இவை தவிரவும் எனது விருப்பமான படங்கள் பல உள்ளது. இந்த படங்கள் அந்த இயக்குநரின் மற்ற படங்களை பார்க்க ஓர் தூண்டுதலாய் அமையும் என்ற நம்பிக்கையிலுமே நான் கொடுத்து உள்ளேன். உதாரணமாக, Prestige, Christophar Nolan ன் மற்ற படங்களான Momento, Batman Begins,Dark Knight ஆகியவை மிக சிறபானவை.இந்த படங்களை தவிரவும், Pulp Fiction,Once upon a time in west,Psycho,Rear windom,Usual Suspects,Forest Gump,Life is Beautiful,A beautiful mind, cindrella man,The Pianist,Roman Hloiday உட்பட பல படங்கள் எனது விருப்பமானவை. அவை பின் வரும் பதிவுகளில்



இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6

Tuesday, March 10, 2009

அசாருதினும் என் முதல் திருட்டு அனுபவமும்

5 ஆம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையியின் போது கரூரில் இருந்த அசாருதினின் தாத்தா தொலைபேசாமல் இருந்திருந்தாலோ இல்லை ஊருக்கு போக வேண்டும் என அவன் அப்பா முடிவு எடுக்காமல் இருந்திருந்தாலோ, நான் அந்த “தினத்தந்தி” பேப்பரை திருடி இருக்க வேண்டியதில்லை.


நானும் அசாருதினும் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு ஒன்றாக படித்தோம், அவனது அப்பாவும் என் அப்பாவும் colleague என்ற முறையிலே அவன் அறிமுகம் ஆனான். அதன் பின் சில முறை அவன் வீட்டிற்கு சென்று உள்ளேன். அவன் அம்மா எப்போதும் அழகாக சிரித்து கொண்டுதான் பேசுவார். நான் வகுப்பில் ஓரளவு நன்றாக படிப்பததாலும், நான் வரும் போது எல்லாம் அசாருதினும் என்னுடம் அமர்ந்து சில நேரம் படிப்பதாலும் அவர் என்னை அடிக்கடி வீட்டிற்க்கு வர சொல்லுவார். அவன் வீடு என் வீடு போல் அல்ல, வண்ண தொலைக்காட்சி, குளிர் சாதன பெட்டி எல்லாம் எனக்கு வெகு அன்னியம், அந்த வீட்டில் எனக்கு பரிட்சியம் அவனது அம்மாவின் அன்பும், அவனது ஒரு வயது தங்கையின் சிரிப்பும் மட்டுமே.பல நாள் அதற்காகவே அவன் வீட்டிற்கு செல்வேன்.


அசார் மிக அமைதியானவன், தேவை இல்லாமல் அதிகம் பேச மாட்டான், வகுப்பில் அவன் யாருடனும் சண்டையிட்டும் நான் பார்த்ததில்லை. “பெரியவன் ஆனா நான் டாக்டர் ஆவேன், பைய்லட் ஆவேன்” போன்ற எங்கள் பேச்சுகளிலும் அவன் கலந்து கொண்டதாய் எனக்கு நினைவு இல்லை.எப்போதும் தேர்வுக்கு முன் ஒவ்வொரு படத்திலும் முக்கியமான கேள்விகளை என்னிடம் குறித்து தர சொல்லுவான். நானும் வகுப்பில் ஆசிரியர் நடத்தும் போது சொன்னது, முந்தைய தேர்வுகளில் கேட்டது என சில கேள்விகளை குறித்து தருவேன். தேர்வு முடிந்த பின் நன்றி சொல்லுவான்.


5 ஆம் வகுப்பு தேர்விற்கு முன் அவன் வீட்டில் சென்று படித்து கொண்டிருந்தேன். அப்போதுதான் முதல் முதலாக, ராமாயன நாடகத்தில் ராமரையும் சீதாவையும் வண்ணத்தில் பார்த்தேன். அன்று இரவு நேரம் ஆகி விட்டதால், அவன் வீட்டிலேயே சாப்பிட சொன்னான். நானும் தட்டில் தோசையுடன் அமர்ந்து இருக்கையில், “ஊத்திக்கோடா பக்கத்திலே இறுக்குப்பார்” என்று அவன் சொன்ன போது தான் பார்த்தேன், இத்தனை நேரம் நான் ஊறுகாய் என நினைத்தது தான் தோசைக்கு ஊத்தி சாப்பிட வேண்டு என்று. அதன் பெயர் என்னடா என்றேன், Tomato Sauce என்றான். சாப்பிட முடியாமல் ஒன்று சாப்பிட்டு முடித்த பின், மீண்டும் அதில் சிக்கி கொள்ளாமல் பக்கத்தில் பச்சை நிறத்தில் இருந்த (புதினா சட்னி என நினைத்தேன்) கேட்டேன். இது என்னோட Favourite என்று எடுத்து கொடுத்தான் அரை தோசைக்கூட சாப்பிட முடியாமல் முழித்தேன், அதன் பெயர் “Chilly Sauce”.


அந்த தேர்வு முடிந்த ஓர் அதிகாலையில் தான், அவன் தாத்தா ஊருக்கு கிளம்பினான்.அவன் சென்ற கார் வளைவில் திரும்பையில் ஒரு லாரி மோதி முன் சீட்டில் அமர்ந்திருந்த அவன் அங்கேயே இறந்து போனான். ட்ரைவர் உட்பட அவன் அப்பா, அம்மா, அவனது ஒரு வயது தங்கை யாவரும் சின்ன காயங்களுடன் உயிர் பிழைத்தனர். அந்த செய்தி மறு நாள் “தினத்தந்தியில்” வந்திருந்தது, இரவு டீ கடையில் எல்லோரும் படித்து விட்டு போன பின் அந்த பேப்பரை பார்த்தேன். உருகுலைந்த அசாரின் படம் போட்டிருந்தது. பெயர் மட்டுமே நான் பார்த்த அசார். முகம் முற்றிலும் அடையாளம் தெரியவில்லை. அந்த படத்தை வீட்டில் அக்காவிடம் காட்டி “அது அசார் இல்லை தானே” என கேட்க அந்த தினத்தந்தி பேப்பரை திருடி வந்து விட்டேன்.


அந்த 5 ஆம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையியின் போது கரூரில் இருந்த அசாருதினின் தாத்தா தொலைபேசாமல் இருந்திருந்தாலோ இல்லை ஊருக்கு போக வேண்டும் என அவன் அப்பா முடிவு எடுக்காமல் இருந்திருந்தாலோ, நான் அந்த “தினத்தந்தி” பேப்பரை திருடி இருக்க வேண்டியதில்லை.

Saturday, March 7, 2009

எஸ். ராமகிருஷ்ணனின் நடந்து செல்லும் நீரூற்று



(நன்றி Anyindian வலைத்தலம்)

கதைகள் உலகை பிரதிபலிப்பதில்லை மாறாக கதைகள் தனக்கென ஓர் உலகத்தை கொண்டுள்ளது என்கிறார் எஸ். ரா தன் முன்னுரையில்.12 சிறுகதைகளை கொண்ட இந்த தொகுதியில் உள்ள அத்தனை கதைகளும் சம்பிரதாயமான கதைகளில் இருந்து பல வகையில் மாறுபட்டு உள்ளது. கதைகளில் மைய கதாபாத்திரத்தை சுற்றி நிகழ்ச்சிகளை அமைக்காமல், அந்தரங்கத்தில் அறியாமல் மண்டி கிடக்கும் சில ரகசியங்களை ஒட்டி கதை நகர்கிறது. சில கதைகளில் வரும் காட்சிகளும் சம்பவங்களும் கொண்டு எஸ். ரா முன் வைக்கும் கேள்விகள் மிக அந்தரங்கமானவை.


பிழைத்திருத்துபவரின் மனைவி
அச்சகத்தில் பிழை திருத்தம் செய்யும் மந்திரமூர்த்தியின் மனைவிக்கு காகிதங்களைப் பிடிக்காமல் போய் பலவருடங்களாகிறது என தொடகுகிறது இந்த கதை. அதிகம் பேசாத, நண்பர்கள் அதிகம் அற்ற, பிழை திருத்தம் செய்வதை மட்டுமே அறிந்த, நகைச்சுவை என்பது கூட பிழைகளில் வருவதை மட்டுமே ரசிக்க தெரிந்த ஒரு மனிதராய் மந்திரமூர்த்தி அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர் மனைவியோ பாடல் கேட்பதில் ஆர்வம் உள்ள, பேசுவதில் ஆர்வம் உள்ள ஒரு சாதாரண கிராமத்து பெண்.அந்த பெண் மனத்தின் மீது காகிதமும், மந்திரமூர்த்தியின்யின் நடவடிக்கைகளும் செலுத்தும் வன்முறை மிக அழகாய் இந்த கதையில் சித்தரிக்கபட்டுள்ளது.
http://sramakrishnan.com/deep_story.asp?id=118&page=3


பி.விஜயலெட்சுமியின் சிகிட்சை குறிப்புகள்
அதிகம் பாராட்ட பெற்ற எஸ். ரா வின் இந்த கதை, குடும்பம் என்னும் அமைப்பு பெண் மீது தொடர்ந்து நிகழ்த்தி வரும் ஆதிகத்தையும் அதன் மூலம் சிதிலப்படும் அவள் ஆளுமையும் பி.விஜயலெட்சுமி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் மிக அழகாக விவரிக்க பட்டுள்ளது.
http://sramakrishnan.com/deep_story.asp?id=133&page=3


மூன்று குடும்பக் கதைகள்
மூன்று சிறுகதைகள் இந்த தலைப்பின் கீழ் வருகிறது. முதல் கதை, திருமணமான புதிதில் ஒரு பீங்கான் கோப்பையை தவறவிட்டதற்காக, தன் கணவன் தன்னை அடித்து விட 42 வருடம் அவரிடம் பேசாமல் தலையை கவிழ்ந்த வண்ணமே இருந்து அவர் மரணம் அடைந்த அன்று பிணத்தின் முன் வந்து தலையை நிமிர்த்தி பார்த்து “நான் வேணும்னு பீங்கான் கோப்பையை உடைக்கலைங்க” என்று சொல்லும் பெண்ணை பற்றியது.”ஙப் போல் வளை” மற்றும் ”இல்லறம்” என்னும் மற்ற இருகதைகள் முன் வைக்கும் கேள்விகள் மிகுந்த வலி தர கூடியவை.
http://sramakrishnan.com/kathai_1.asp


பணாரஸ்
பணாரஸ் படித்துறையில் தொடங்கும் இந்த கதை, அந்த நகரத்தின் மர்மத்தையும் வசீகரத்தையும் மிக அழகாய் படம் பிடித்துள்ளது. கதை முடிந்த உடன் ஓர் மர்ம உலகல் சூழ்ந்திருப்பது போன்ற பிரமை!!!


பதினைந்து வயதில் ஒருவன்
பதினைந்து வயது என்னும் முதிரா பருவத்தின் ஒரு நாளில் ஒருவன் எதிர் கொள்ளும், பின் நாளில் அவனின் ஆழ் மனத்தில் நிரந்திரமாய் தங்கி விட போகும் “ஒரு” நாளை பற்றியது.


நடந்து செல்லும் நீரூற்று
வியாபாரத்தில் நொடிந்து மகள் வீட்டில் தங்கி வசிக்கும் ஒருவர், மற்ற யாருக்கும் தெரியாமல் வீதியில் தான் நடக்கும் போது தனக்கு மட்டும் தெரியும்படி தன் கால்களுக்கு அடியில் இருந்து வரும் ஓர் நீரூற்றை தேடும் கதை.


சம்பிரதாயமான கதைகளில் இருந்து மாறுபட்டு வேறு வகையான கதைகளை படிக்க விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய தொகுப்பு.

Thursday, March 5, 2009

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

ஒளியை நிழலாகவும் வெப்பத்தை தட்பமாகவும் மாற்றி கொண்டிருந்த ஒரு புளியமரம் வாழ்ந்து வீழ்ந்த கதை இது.தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகம் ஆகும் வாசகர்களுக்கு சிபாரிசு செய்யபட்டு வரும் நாவல்களில் இது முக்கியமானது. சுந்தர ராமசாமியின் இந்த நாவல் 1966 ஆண்டு வெளி வந்து, இன்று வரை தொடர்ந்து தீவிர வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளது. முடிந்த வரை சுந்தர ராமசாமி என்கின்ற ஆளுமையின் பிம்பத்தை தவிர்த்து இந்த நாவலை படித்தேன். திருப்தி !!!


தெளிவான கதை, ஒரு கிராமத்தின் ஓரத்தில் குளத்தருகே வருகிறது புளியமரம், ஒரு முறை அந்த பிரதேசசமூகம் (அரசன்) அவ்வழி போகையில் அந்த குளத்தை சீரமைக்க உததரவிடுகிறான். இதுவரை கதை இந்திய சுதந்திரத்திற்கு முன் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.அதன் பின் அந்த மரத்தை சுற்றிய இடம் மெல்ல வளர்ச்சி பெறுகிறது. "புளியமர ஜங்க்சன்" ஆகிறது.அந்த இடத்தில் கடை தெரு உருவாகி, அந்த கடை தெருவில் நடக்கும் வியாபார போட்டிகள் மூலம், புளியமரத்திற்கு ஆன்மீக மற்றும் அரசியல் அங்கீகாரம் குடுக்கப்பட்டு வழக்கம் போல் மனிதனின் இச்சைக்கு பலியாகிறது.


நாவலின் ஆரம்பமே, ஓர் கடந்த காலத்தை ஒரு பார்வையாளன் சொல்வது போலவே அமைந்துள்ளது. புளியமரத்தின் இளமை காலம், "ஆசான்" என்னும் பாத்திரத்தின் மூலம் சிதறிய நினைவுகள் மூலம் சொல்ல பட்டுள்ளது. பின் பாதியில் நடக்கும் விஷயங்கள் மிக தெளிவாக பதிவு செய்ய பட்டுள்ளது.ஆசிரியனின் கூற்றாக அங்கெங்கே வரும் சில வாக்கியங்கள் சிந்திக்க வைக்கிறது..


வயதானவர்கள் Parkல் சந்தித்து கொள்கையில் இப்படி வருகிறது..

" சமதர்ம சந்தோஷம் அளிப்பது கடவுளால் சாத்தியமில்லை என்றால் பாரபட்சம் காட்டாமல் துன்பபடுத்திவிட்டாலும் போதுமென்று அவர்களுக்கு தோன்றுகிறது"
அதே Parkல் நடுத்தர வயதானவர்களை பற்றி சொல்கையில்..

" முன்பக்க கொட்டை எழுத்துகளில் இடம் பிடித்து கொள்ளும் ஒடுகாலிகளின் பெருக்கம் மனைவியின் இருப்பை எதிர்பார்த்து வீடு திரும்புதல் விவேகமல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது" (செய்திதாள்கள் எந்த மாதிரி விஷயங்களை தொடர்ந்து முன் நிறுத்தி மனவிகாரங்களை அகாலபடுத்துகிறது என்ற நோக்கில் மட்டும்)

கதைகளை பற்றி சொல்கையில், " உலக வழக்கை கற்பனைக்குள் கொண்டு வகைப்படுத்துவது சத்தியமாற்ற காரியமாக இருக்க, கற்பனைக்குள் உலகை திணித்து திருப்தி தேடிகொள்வதே நாம் செய்ய கூடியதாய் உள்ளது" என்னும் வரிகள் அப்போது உருவாகி வந்த நவீனத்துவ சிந்தனைகளின் தொகுப்பு போல் தெரிகிறது.


" சொல்ல போனால் எல்லா பாதைகளும் கடலோரம் கிளைத்து மற்றொரு கடற் கரையில் கரைகின்றன" என்னும் வரி அதிக நேரம் சிந்திக்க வைத்தது.


நாவலின் வடிவம் மிக கட்சித்தமானது. உதிரி வரிகள், உதிரி காட்சிகள் என எங்கும் எனக்கு தென் படவில்லை. அதன் பின் படித்ததில் சுந்தர ராமசாமி அவர்களின் சிறப்பே அதுதான் என்று அறிந்தேன்.நாவல் முழுதுமே பல குறியீடுகள் பயன்படுத்த பட்டுள்ளது என்றே அறிகிறேன். சொல்ல போனால் மொத்த நாவலுமே.


வளர்ச்சி என்ற பெயரில் மனிதன் அழகாய் அமைதியை இருந்த இடத்தை தனக்கு சாதகமாய் ஆக்கி கொண்டு, பின் அங்குள்ள இயற்கையை சிதைக்கிறான்.அரசியலில் சிக்கியது சம்பந்தமே இல்லாமல் அழிகிறது.புளியமரத்தை ஒரு பெண்ணாய் உருவகித்தால், அதன் இளமை காலங்களில், அதன் அழகில் மயங்கி பலர் வருகின்றனர், பின் அதன் நடுத்தர வயதுகளில், அதனால் என்ன பொருளியல் லாபம் என கணகிடப்படுகிறது, பின் கடைசி காலங்களில் அது பட்டு போன பின் அதனால் ஒன்றும் ஆக போவதில்லை என்று உணர்கையில் முதியோர் இல்லங்களில் தள்ளுவது போல், புளிய மரம் வெட்டப்பட்டு விறகாகிறது.


முதியோர் இல்லத்தில் தன் காலங்களை கழித்தலும் கடைசி தீக்கு விறகாதல் போல்தானே?

நினைவுகளை கோர்த்து….

போன Blogகிற்கு வந்த லட்சக்கணக்கான பாராட்டுகளை தொடர்ந்து மிச்சம் உள்ள சில நிகழ்வுகளையும் சொல்ல முடிவு எடுத்து உள்ளேன்(எழுத ஆரம்பித்த உடன் ஒரு காரணம் வேண்டும் தானே!!).கோபி கிருஷ்ணனின் "உள்ளேயிருந்து சில குரல்கள்" பாணியில்…

காட்சி 1:

கல்லூரியில் முதல் வருடம் அப்போதுதான் கணினி முன் செயல்முறை வகுப்புக்காக (Correctu Lab தான்) உட்கார வைக்க பட்டோம்.கணினியை சிறிது நேரம் உற்று பார்த்து கொண்டிருந்த என் நண்பன், "டேய் டேய், இங்க வாங்கடா, என்றான், ஏதாவுது Shock அடிசிடுச்சோனு அவசர அவசரமாக சிலர் அங்கு கூடினோம், மெல்ல ஒரு ஆச்சரியத்துடன் அவன் சொன்னான், "டேய், இங்க பாரேன் (கையில் உள்ள Mouseஐ காண்பித்து), இத ஆட்டுனா அங்க அந்த அம்பு குறி ஆடுது பாரேன்" என்றான்!.முதல் செயல் முறை வகுப்பு என்பதை விட சிலருக்கு முதல் முறை கணினி முன் அமர்தல் என்பது எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை.


நிலை 1:
அவன் தற்போது M.S முடித்துவிட்டு எப்படியும் H1B விசா வாங்கி USல் Settleஆகும் ஆசையுடன் Newyork நகரின் வீதிகளில் சுற்றி கொண்டு இருக்கிறான்.


காட்சி 2:

முதலாம் ஆண்டு மாணவன் என பாராமல் ப்ரோப்பசாரே நம்மிடம் உதவி கேக்கிறாரே என நினைத்து பவ்வியமாக என்ன Sir? என்றான். அவர், ஒரு Document Type அடித்து பிரிண்ட் எடுத்து குடுப்பா என்றார். பின் அவர் சொல்ல சொல்ல அவன் MS Wordல் Documentஐ அடித்து முடித்த பின் மெதுவாக பின்னால் வந்தவர் சொன்னார், தம்பி, எல்லாம் OK, ஆனா எனக்கு பிரிண்ட் எடுக்கும் போது அதோ மேல இருக்கே ( Computer Screenன் இடது மூலையை காண்பித்து) இந்த File,Edit,View எல்லாம், Printல வராத மாதிரி பார்த்துக்கோ என்றார்.


காட்சி 3:

அந்த ப்ரோப்பசாரே அவசர அவசரமாக புத்தகத்தில் ஏதோ தேடி கொண்டிருக்கையில் அவன் உள்ளே சென்றான். என்ன பண்றீங்க Sir என்றான்?, அது ஒண்ணும் இல்ல, ஒரு சின்ன Distillation Method மறுநதுதுச்சு,எந்த Booklaல இருக்குனு தெரியல அதான் தேடிகிட்டு இருக்கேன் என்றார். உடனே அவன், Net இருக்குல sir, என்று, கூகிலினான்(Google) , Distillation Methodsவந்து கொட்டியது. மறுநாள் வகுப்புக்கு வந்தவுடன் மெல்ல Board அருகில் சென்று Professor வகுப்பை இப்படி ஆரம்பித்தார்.
Dear Students, "I am goin to tell a new thing to all today"
"THere is a Website called GOOGLE!!!!"


நிலை 2:

இப்போது அவர் அந்த Departmentன் HOD!!

காட்சி 4:

ஈராக்கின் மீது அமேரிக்க படைகள் சராமரியாக குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த காலமது. ஹிந்து முதல் ஜோதிட மாமணி வரை அத்தனை இதழ்களும் அதை பற்றிய செய்திகளையே வெளியிட்டு இருந்தது. Hostel அறையில் மெல்ல பேச்சு போர் பற்றி திரும்பியது. அப்போது நாங்கள் அமெரிக்க தாக்குதலின் மூல காரணமே எண்ணை கிணறுக்கள்தாம், அவர்கள் நோக்கமே அதை கை பற்றுவது தான், அதற்காக கவனத்தை திசை திருப்ப சில எண்ணை கிணறுகளையும் குண்டு வைத்து தகர்கின்றனர் என பேசி கொண்டிருந்தோம். அதையே உற்று பார்த்து கொண்டிருந்த என் நண்பன், "ஏன்டா, எண்ணை கிணறுகல பிடிச்சு அமெரிக்ககாரன் என்ன பண்ண போறான்? அதுவும் இல்லாம இந்த ஈராக்ல ஏன் முட்டாள்தனமா தேங்கா எண்ணை, கடலை எண்னையெலாம் இப்படி வெட்டை வெளியில அதுவும் கிணத்துல ஊத்தி வச்சிருகானுக என்றான்?


நிலை 3:
நிலை ஒன்றை மீண்டும் படித்து கொள்ளவும்.

ஏன்? - தேவா!!!

நான் முடிந்தவரை "ஏன்?" என்ற கேள்வியை தவிர்கிறேன். காரணம் நீங்கள் நினைப்போது போல் தத்துவார்த்தமான ஒன்று அல்ல.அதை விளக்க ஒரு சின்ன Flashback தேவைப்படுகிறது.கல்லூரியில் என் நண்பன், வகுப்பு தோழனுக்கு அபாரமான திரை பட ஞானம் உண்டு, அவனிடம் இருந்துதான் திரைப்படங்களில் என் ரசனையை நான் வளர்த்து கொண்டேன். அவன் ரசனை பரந்த தளங்களில் விரிவது, அவனை போலவே!!. தமிழ் நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் தண்ணீர் பிரிச்சனை வந்த போது காவிரியை ஒரு பெண்ணை போல் உருவகித்து பிரபுதேவா நடித்து வெளிவந்த "காவேரி" என்ற உலக திரைப்படத்தை பார்த்தவர்கள் அவனும், கோவை கற்பகம் Complex தியேட்டர் அப்பிரேட்டர் மட்டுமே. அந்த படத்தில் வரும் "விட மாட்டேன் விட மாட்டேன்" என்ற பாடலை ஒரு வாரம் வரை முணு முணுத்து கொண்டிருந்தான்.


"துள்ளுவதோ இளமை" வெளி வந்து ஒரு புயலை உருவாக்கி விட்ட போது அதற்கு போட்டியாக அவன் முன் வைத்தது "ப்லஸ் 2" என்ற திரைப்படம்.Internal Exam நடக்கையில் கண்ணில் காண முடியாத DNA,RNA வகாயாறககலில் வெறுபுற்று அவன் காலை Internals மதியம் கட் அடித்துவிட்டு ஒரு திரைப்படம் என கழிக்க முற்பட்டான், 11 பேர் மட்டுமே கொண்ட வகுப்பில் 5 பேர் அவன் கருத்தை ஆமோதித்தது அவன் உடன் சென்றது தற்செயலல்ல.


அவன் சொல் வன்மை அத்தகையது. அந்த Internal களை கட் அடித்து அவன் பார்த்த திரைப்படங்களின் வரிசை பின் வருமாறு, விஜயகாந்த் Comedyள் கலக்கிய, "எங்கள் அண்ணா", 75 வருட தமிழ் சினிமாவின் வரலாற்றில் பதிக்கவேண்டிய பிரசாந்தின் திரை காவியம் "ஜெய் ", முற்றிலும் வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட சத்தியாராஜின் "அய்யர் IPS". இதன் உச்சக்கட்டம் காட்சிக்கு காட்சி திரையில் கோடு போட்டு ஒரு பக்கம் த்ரிஷா, ஒரு பக்கம் தருன் என அமர காதலை வெளிப்படுத்திய "எனக்கு 20 உனக்கு எவளோ? sorry, உனக்கு 18" படத்தை காதலை தமிழ் சினிமாவில் இதை விட அழுத்தமாய் சொன்தில்லை என்றான்.இவ்வளவு சொன்ன பிறகு, நட்பின் இலக்கணத்தை வெளிப்படுத்திய சிறந்த படம் என்று அவன் குணால், கரன் நடித்த ஒரு படத்தை சொன்னதை சொன்னால் நீங்கள் ஆச்சரிய பட போவதில்லை.


இப்படியே முற்ற விட கூடாதென முடிவெடுத்த நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அவனுக்கு முறையே "அலைபாயுதே" மற்றும் "தளபதியை" DVDயில் போட்டு Scence by Scene ஆக explain செய்தோம். அப்போது நான் சும்மா இருக்காமல், ரஜினி சிறையில் அடைப்பட்டு வேறு ஒருவன் குற்றத்தை ஒப்பு கொண்டதால் விடுதலை ஆகி வெளி வரும் காட்சியில் வசனத்தின் வீரியத்தை அவனுக்கு உணர்த்த அதே காட்சி மற்ற படங்களில் ஒரு பக்க வசனத்திற்கு நீண்டிருக்கும் ஆனால் ரஜினி "ஏன்" என்பார், அதற்கு பதில் "தேவா" என்ற ஒற்றை வரியில் மணி முடித்ததை சொன்னேன்.அதன் பின் எங்களிடம் பேசாமல் ஒரு அரை மணி நேரம் யோசித்து கொண்டிருந்தான்.


மறுநாள் Hostel Bathroomல் அதிக நேரம் உள்ளே இருந்து வந்தவனிடம் "ஏன்?" என்றேன் "தேவா" என்று சொல்லி சென்று விட்டான்.அதன் பின் ஆசிரியர் Attendance lagக்காக "ஏன்" என்றபோது, பணத்தை வாங்கிவிட்டு திரும்ப கொடுகலயே "ஏன்?" என்றபோது என இந்த 7 வருடத்தில் அவனிடம் எப்போது யார் "ஏன்" என்றாலும் அவனின் ஒரே பதில் "தேவா".

Tuesday, March 3, 2009

Mountain Patrol - உறை பனியில் ஒரு ஊடுருவல்



திபெத்திற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள பனிமலையின் உயர்ந்த பகுதியான கிகிஜிலியில் வாழும் அரிய வகை கலைமான்களை வேட்டையாடுபவர்களை தடுத்து நிறுத்த போராடும் கிராம காவலர்களை பற்றிய படமிது. National Geographic Channel தயாரித்த இத்திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியாகி Berlin,Tokyo விருதுகள் உட்பட பல சர்வதேச விருதுகளை பெற்றது.


Tibetian Antelope எனப்படும் அரிய வகை கலைமான்கள் தொடர்ந்து வேட்டையாட படுவதை கண்டு, 1993 ஆம் ஆண்டு அந்த பணி பிரதேச கிராமம் ஒன்றில், முன்னால் ராணுவ வீரன் Ri Tai தலைமையில் தன் ஆர்வல குழு ஒன்று அமைகிறது.Ga Yu என்னும் Beijing நகர புகைப்பட கலைஞன் தீபெத்திய பழங்குடி மக்களிடம் உள்ள புராதன சடங்குகளை பற்றி அறிய அந்த கிராமத்திற்கு வருகிறான். அந்த சமயத்தில் கலை மான்களை காப்பாற்ற Ri Tai தலைமையில் குழு ஒன்று ரோந்திற்கு புறப்பட, தானும் அவர்களுடன் வருவதாய் சொல்லி கிளம்புகிறான்.


அந்த பனி மலையில் அவர்களின் பயணம் அந்த அப்பாவி கலைமான்களை காப்பாற்ற புறப்படுகிறது. சில லட்சங்கள் இருந்த அந்த மான்கள் 1990 ள் இருந்து 1996 க்குள் 1000 சொற்பத்திற்கு குறைந்துள்ளது. மிகவும் விலை உயர்ந்த அதன் தோலுகாகவே அவை வேட்டையாடப்பட்டு வந்துள்ளது.அவர்கள் பயணம் தோறும் அவர்கள் கடந்து போகும் அந்த பனி பிரதேச நிலகாட்சிகள் ஓவியம் போல் நம் கண்கள் முன் விரிகிறது. தூரத்தில் சூரியன் தெரிய அதன் மெல்லிய வெளிச்சத்துடன் படமயக்க பட்டுள்ளது. இந்த முறை எப்படியும் அந்த கொலைகாரர்களை பிடித்து விட எண்ணி தொடங்கிய அவர்கள் பயணத்தில் சூரிய ஒளியில் உருகும் பனி போல் அவர்கள் கொண்டு வந்திருந்த உணவு மற்றும் எரி பொருட்கள் குறைந்து கொண்டே வருகிறது.



வழியில் ஓர் ஆயிரம் தோள்கள் ஓரிடத்தில் குவிக்கபட்டிருக்க, அந்த தோலுக்குறிய உடம்புகள் கழுகுகளின் உணவாய் இரைந்து கிடக்கிறது. அதை கண்டு மேலும் கோபமுற்ற , அந்த கொள்ளையர்களுக்கு தோல் எடுக்க உதவும் சில கிராம மக்களை கைது செய்து கொண்டு தன் பயணத்தை மீண்டும் தொடர்கிறான்.வழியில் எரி பொருள் தீர்ககயில் கைது செய்தவர்களையும் தன் குழுவை சேர்ந்தவர்களையும் அங்கேய விட்டு விட்டு Ri Tai தன் பயணத்தை தொடர்கிறான். இறுதியில் Ri Tai மற்றும் Ga Yuவும் கொள்ளையர்களை கண்டு பிடிக்கின்றனர். ஆனால் போதிய ஆள் மற்றும் ஆயுத பலம் இல்லாமல் Ri Tai அவர்களால் சூடப்பட்டு இறக்கின்றான். Ga yuவுக்கும் அந்த கூட்டத்திற்க்கும் தொடர்பு இல்லை என அறிந்து அவனை விடுவிக்கின்றனர். உயிர் தப்பிய Ga Yu அங்கு நடந்த விசயங்களை வெளி கொணர்ந்து அதன் மூலம் அரசின் கவனம் பெற்று அந்த மலை பிரதேசம் அரசின் கண்கானிப்புக்கு வந்ததாகவும், கலை மான்களின் எண்ணிக்கை தற்போது சில லட்சங்களை தாண்டி உள்ளது என்னும் குறிப்புடனும் படம் நிறைந்தது.



பயணத்தில் ஒருவனுக்கு Pulmonary Hedia வந்து வீழ்க்கையில், அவனுக்கு Inject செய்ய மருந்திற்கு தண்ணீர் தேவை படுகையில், அவன் இரத்ததையே எடுத்து அவனுக்கு உபயோக படுத்தும் காட்சியும், வண்டி பழுதாகி நின்று விட மீண்டு திரும்ப வழி இல்லாமல் மரணம் நெருங்கி வர அந்த காவலர்கள் துயருறும் காட்சியும் மிக அழகாக படமாக்க பட்டிருந்தது.


ஓர் ஆவண படத்தின் கருவை கொண்டிருந்தாலும் ஓர் சிறந்த திரைபடமாகவும் இப்படம் வெற்றி பெற்றது. நேர்த்தியான Camera , நேரான கதை, காட்சிகளின் வீரியம், உறுத்தாத பின்னணி இசை என பல சிறப்பம்சங்களை கொண்ட இப்படம் பார்த்த பின் பல நாட்களுக்கு நம் நினைவில் நிழலாடி கொண்டிருக்கும்.



இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 |