Tuesday, February 17, 2009
Bicycle Theives - Vittorio De Sica
ஒரு நல்ல திரைப்படம் எப்போதும் நம்முள் ஒரு அனுபவமாகவே உறைந்து விடுகிறது. சிறந்த திரைப்படங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்ந்து நம்முன் சில கேள்விகளை முன் வைக்கின்றது.அவ்வகையில் இரண்டாம் உலக போர் முடிவுற்ற சமயத்தில் 1948 ஆம் ஆண்டு வெளியாகி உலக போருக்கு பிந்தைய இத்தாலியை யதார்த்தமாக படம் பிடித்து, சில சமூக மற்றும் தனி மனித ஒழுக்கங்களை பற்றிய கேள்வியை எழுப்பியது Vittorio De Sica வின் “The Bicycle Theives”.
உள்ளது உள்ளபடி என்னும் Neo Realistic வகையை சார்ந்த இப்படம் பல சர்வதேச விருதுகளை பெற்றது. இப்படத்தில் நடித்த நடிகர்களும் சாதாரனர்களே, உதாரணமாக படத்தின் கதாநாயகன் Lamberto Maggiorani உண்மையில் ஒரு தொழிற்சாலையின் அடி மட்ட தொழிலாலியே.
படத்தின் கதை மிக எளிமையானது.Antonio Ricci என்னும் வேலை இல்லா தொழிலாளியை பற்றிய படம் இது. வேலை தேடி அலையும் Antonio Ricciக்கு ஓரிடத்தில் வேலை கிடைக்கிறது, ஆனால் அதற்க்கு அவனிடம் சைக்கிள் இருக்க வேண்டும் என்கிறார்கள்.தங்கள் திருமணத்தின் நினைவாய் உள்ள துணியை அடகு வைத்து அவன் மனைவி, அடகில் உள்ள சைக்கிளை மீட்கிறாள்.
வேலை கிடைத்த உடன் தன் கணவனுக்கு வேலை கிடைக்கும் என முன் கூட்டியே சொன்ன ஜோசியாக்காரியிடம் அவனை கூடி செல்கிறாள் அவன் மனைவி.ஆனால் நாம் நினைத்தது போல் சைக்கிள் அங்கே தொலைய வில்லை. முதல் நாள் தன் சினிமா போஸ்டர் ஒட்டும் வேலைக்கு செல்லும் அவன் அங்கு Rita Hayworthன் (Ironical!!)போஸ்டரை ஒட்டி கொண்டு இருக்கிறான். அப்போது நாம் எதிர் பார்த்த அந்த சைக்கிள் திருடு நடை பெறுகிறது.
தன் மகன் Bruno உடன் சைக்கிளை தேடி புறப்படுகிறான். அவன் தேடுதல் வழியாக அன்றைய இத்தாலியின் நிலைமை இயல்பாக பதிவு செய்யபட்டுள்ளது. திருட்டு சைக்கிளின் பாகங்களை விற்கும் இடத்தினில், அந்த சிறுவன் தங்கள் சைக்கிளின் பாகங்கள் எங்காவது தென்படுகிறதா என பார்க்கும் காட்சி அற்புதம்.
கடைசியில் எங்கு தேடியும் கிடைக்காததால் Antonio Ricci, ஒரு சைக்கிளை திருடி செல்ல முயற்சித்து மாட்டி கொள்கிறான். தன் மகன் முன்னால் தான் செய்த குற்றத்தோடு குறுகி நிற்க, அந்த சைக்கிளின் உரிமையாளன் அவனை போலீசில் ஒப்படைக்காமல், இந்த தண்டனையே அவனுக்கு போதும் என விட்டு செல்கிறான். தன் சைக்கிளை திருடியவனுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அவன் தன் மகன் உடன் செல்வதாய் படம் நிறைகிறது.Stupendous!!!
இத்திரைப்படத்தை பார்த்த Satyajit Ray வாழ்நாளில் தன்னால் இப்படி ஒரு படம் எடுக்க முடிந்தால் அதுவே தன் பெருமை என்று கூறுப்பிட்டுள்ளார். இதன் தாக்கத்திலேயே தான் “Pather Panchali” எடுத்ததாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 |
பகுப்புகள்
உலக சினிமா,
எண்ணங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment