Thursday, February 12, 2009

நெஞ்சம் எல்லாம் சுஜாதா - இசையின் புன்னகை



கண்டிப்பாக பெயர் ராசி மட்டும் அல்ல, நான் ஒரு தீவிரமான சுஜாதா ரசிகன். பெயர் தெரிந்து சுஜாதாவின் பாடல்களை நான் ரசிக்க வில்லை. ஆனால் பல சமயம் என்னுடன் அந்தரங்கமாய் பேசிய குரல் சுஜாதா மோகனுடையது. மிக அமைதியான ஆர்ப்பபடமில்லாத குரல் அவருடையது. இரவு நேரங்களில் காதருகில் மென்மையாய் பாடும் தோழியாகவே இதுவரை நான் அவரை அறிந்துள்ளேன்.


சுமார் 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் பாடி வரும் சுஜாதா தமிழில் முதன் முதலில் இளையராஜா இசையில் காயத்ரி படத்தில் “காலை பனியில்” என்னும் பாடல் மூலம் அறிமுகம் ஆனார்.இளையராஜா அவர்களின் இசையில் சில நல்ல பாடல்கள் மூலம் அறியப்படாலும் 1992 ஆம் ஆண்டு வெளி வந்த மணி ரத்னத்தின் ரோஜா திரைப்படத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் “புது வெள்ளை மழை” மூலம் மீண்டும் தன் திரை இசை வாழ்வை துவங்கினார்.


“புது வெள்ளை மழை” ரஹ்மானின் இசையையும் தாண்டி, வைரமுத்துவின் வரிகளோடு சுஜாதாவின் குரல் இணையும் இடம் அழகானது. “இது கம்பன் பாடாத சிந்தனை உன் காதோடு யார் சொன்னது” என்னும் போது ஒவ்வொரு முறையும் சிரித்து கொள்வேன். இவரது மிகவும் கவனிக்க பட்ட பாடல் ஆன “நேற்று இல்லாத மாற்றம்” இன்றும் காதலை விளக்க முயன்ற சில நல்ல பாடல்களில் ஒன்றாகவே இருகிரது. யுவன், ஹார்ரிஸ், விதயாசாகர் என பல இசை அமைப்பாளர்களிடம் பாடி இருந்தாலும் ரஹ்மானிடமே இவரது திறமை மிக அழகாக வெளிப்பட்ட வண்ணம் உள்ளது.


யுவனின் இசையில் “பூவெல்லாம் கேட்டுப்பார்” படத்தில் இவர் பாடிய “இரவா. பகலா” பாடல் மிக தனித்துவமானது. “அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு புரிந்தது புரிந்தது இன்று எனக்கு” என்று இவர் பாட ஆரம்பிக்கும் இடம் மிக அழகு.


இதுவரை இவர் பாடியததில் அதிகம் கவனிக்க படாமல் போனதும் எனது மிக விருப்பமான ஒன்றும் ஆயுத எழுத்தில் வரும் “நெஞ்சம் எல்லாம் காதல்” பாடலே. ” உன் குறைகள் நான் அறியவில்லை நான் அறிந்தால் சூரியனில் சுத்தம் இல்லை” என இவர் பாடும் வரிகளுக்காகவே அந்த பாடலை நூறு முறைக்கும் மேல் கேட்டிருப்பேன்.


கொஞ்சமாய்ட்டு சுருதி விலகுநுது என மலையாள தமிழில் வளர்ந்து வரும் பாடகர்களை Airtel Super Singeril திருத்தும் சுஜாதா சேச்சியின் சுருதி என்றும் நம் நினைவில் இருந்து விலகாதது!!

No comments:

Post a Comment