Wednesday, February 11, 2009

It’s a Wonderful Life - சிரிப்பு இல்லை சந்தோஷம்



நீ இல்லாத ஒரு வாழ்க்கைய என்னால நெனச்சு கூட பார்க்க முடியாது என்ற வசனத்தை நாம் பல திரைப்படங்களின் காதல் காட்சிகளில் கேட்டிருப்போம், ஆனா நாம இல்லாத ஒரு வாழ்க்கைய நாமே பார்க்க நேர்ந்தால்?.அப்படி பார்க்க நேரும் போது நம் மீது தழுவுவது ஒரு மரண பயமாகவே இருக்க முடியும். “மரணம் என்பது இல்லாத ஒரு உலகத்துக்கு போக போவதினால் ஏற்படும் பயம் அல்ல இருக்கின்ற உலகத்தை இழக்க போவதினால் வரும் பதற்றமே” என்னும் வாக்கியம் மிக சரியனவே தோன்றுகிறது. “இன்று புதிதாய் பிறந்தோம்” என்னும் பாரதியின் வரியை உணர செய்தது சமீபத்தில் நான் பார்த்த ”It’s a Wonderful Life” திரைப்படம்.


1946 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சகர்காளால் மட்டும் பாராட்ட பெற்று வசூலில் தோல்வி அடைந்து பின் மீண்டும் 1980 களில் கண்டு எடுக்கப்பட்ட படம் “It’s a wonderful Life”. Philip Van Doren Stern னின் “The Greatest Gift” என்னும் கதையை திரைப்படம் ஆக்கினார் Frank Capra. James Stewart ன் மிகை இல்லா நடிப்பும், நல்ல திரைகதையும் இப்படத்தின் சிறப்பம்சம்.


1946 ஆம் ஆண்டு Christmas க்கு முந்தைய இரவு தன் தந்தையை காப்பாற்றும் படி பிராத்தனை செய்யும் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு தேவதைகள் (ஆண் தேவதைகள்!!- சின்ன ஏமாற்றம்) ஒன்று கூடுகின்றன. தேவதைகளின் தலைவன் குழந்தைகளின் தந்தையான ஜார்ஜ் பேலீயின் (James Stewart) வாழ்க்கையை சொல்ல துவங்குகிறது.


ஜார்ஜ் பேலீ ஆறு வயதில் நீரில் விழுந்த தன் தம்பியை காப்பாற்ற போகையில் தன் ஒரு காதின் கேட்கும் சக்தியினை இழக்கிறான். மருந்து கடையில் வேலை செய்கையில் தன் முதலாளி தவறுதலாக தரும் மருந்தை கண்டுபிடித்து தடுத்து ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றுகிறான்.எதிர்பாராதவிதமாக தன் தந்தை இறந்ததினால் பள்ளி படிப்பு முடித்த பின் Architect ஆக வேண்டும் என நினைத்த தன் லட்சியத்தை விடுத்து தான் தந்தையின் Building and Loan Association Company யை பொறுப்பேற்று நடுத்துகிறான்.ஊரை எய்த்து பிழைக்கும் பாட்டரின் கையில் தன் Company சிக்காமல் ஏழை களுக்காக “பேலீ பார்க்” என்னும் சிறு வீடு மனைகளை குறைந்த விலையில் கட்டி தருகிறான். தவறுதலாய் Companyயின் 8000 டாலர் தொலைந்து விட, அந்த சமயத்தில் Auditing வர என்ன செய்வது என தெரியாமல் தற்கொலை செய்து கொள்ள செல்கிறான்.


இப்போது அவன் தற்கொலையை தடுக்கும் பொருட்டு தலைமை தேவதை Clarence என்னும் ஒரு இரண்டாம் தர (இறக்கை இல்லா தேவதை!!) தேவதையை பூமிக்கு அனுப்புகிறது.இதுவரை சாதாரண வழியில் செல்லும் திரைக்கதை ஒரு Fantasy கதையாக உறு மாற்றம் கொள்கிறது.தன்னை தற்கொலையில் இருந்து காப்பாற்றிய Clarenசிடம் “நான் பிறக்காமல் இருந்திருக்கலாம்” என்கிறான் Clarance சிரித்து கொண்டு அவனை அவன் ஊருக்குள் கூட்டி செல்கிறது.இப்போது அந்த ஊரில் ஜார்ஜ் பேலீ பிறந்ததற்கு அடையாளமே இல்லை.அவன் தம்பி ஆறு வயதில் இறந்திருக்கிறான், அவன் சிறு வயதில் வேலை பார்த்த கடை முதலாளி மருந்தை தவறுதலாய் தந்தற்காக 18 வருடம் சிறையில் இருந்து விட்டு வந்திருக்கிறான். பாடர் ஊரின் மிக முக்கியமான ஆளாக உள்ளான். அவன் மனைவி திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்கிறாள்.


தன் தாய் மற்றும் தன் மனைவிக்கே தன்னை அடையாளம் தெரியாதத்தை கண்டு மனம் உடைந்து, எத்துன்னை பேர் வாழ்க்கையில் தாம் நல்ல மாறுதல்களை உருவாகியுள்ளோம் என உணர்ந்து தன் வாழ்வை வாழ விரும்புகிறான். நண்பர்கள் உதவியால் 8000 டாலர் பணத்தை ஜார்ஜின் மனைவி சேர்த்து வைய்த்திருக்கிறாள்.மீண்டு வந்து தன் குடும்பத்துடன் இணைகிறான். அவனை தற்கொலையில் இருந்து காப்பாற்றியதற்காக தேவதைக்கு இறக்கை கிடைப்தை Christmas மணி உணர்த்துவதாய் படம் நிறைவடைகிறது.
சந்தோஷமான திரைப்படம்!!!!

If I can stop one heart from breaking,
I shall not live in vain:
If I can ease one life the aching,
Or cool one pain,
Or help one fainting robin
Unto his nest again,
I shall not live in vain.

என்னும் Emily Dickinson னின் வரிகளை நினைவூட்டியது கடைசி 15 நிமிட திரைப்படம்..

No comments:

Post a Comment