Monday, March 30, 2009

Chungking express - நகர வீதிகளில் நசியும் காதல்கள்

இந்த உலகம் கை விடபட்டவர்களால் நிரம்பி இருக்கிறது. நாம் எல்லோரும் ஏதோ ஓர் நிலையில் யாராலாவது கை விடபட்டவர்களாக தாம் இருப்போம். அதிலும் காதலில் கை விடபட்டவர்கள் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும்.நகரங்களில் காதல் உருவாவதில் உள்ள மர்மம் போலவே உள்ளது அது கலைந்து போவதிலும்.நகர வீதிகளில் நசிந்து விழும் காதலையும், அதன் மெல்லிய மாற்றங்களையும் கலை அழகுடன் உருவாக்கிய படைப்பு Wong Kar Waiன் Chungking express. நவீன சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான இவரது Chungking express 1990 களின் Hongkong வீதிகளையும், மிக வேக மாற்றம் கொண்ட அந்த காலம் மனித உணர்வுகளிடம் ஏற்படுத்திய சலனங்களையும் விவரிக்கிறது.Time இதழ் வெளியிட்டு உள்ள இந்த நூற்றாண்டின் சிறந்த நூறு படங்கள் வரிசையில் உள்ள இப்படம், காதலியை பிரிந்த இரு காவலர்களை பற்றியது. முதலில் Cop 223, எனபவரின் கதை, படத்தின் முதல் காட்சியில் Cop 223 ஒருவனை துரத்தி கொண்டு வருகிறான், அந்த துரத்தல் காட்சி மிக அழகாக படமாக்க பட்டிருந்தது, அவன் துரத்துகையில் ஒரு பெண்ணை மோதுகிறான். மின்னல் வேகத்தில் சென்ற கேமரா ஒரு கணம் அவளில் நிலைக்கிறது, இன்னும் 56 மணி நேரத்திற்கு பின்னால் இவளை நான் காதலிப்பேன் என நினைக்கவில்லை என அந்த காவலன் சொல்வது போல் வர, மீண்டும் துரத்தல் காட்சி.அந்த 56 மணி நேரத்தில் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் நம் கண் முன் விரிகிறது. Cop223ன் காதலி April 1 ஆம் தேதி அவனிடம் ஒரு சின்ன பிரச்சனையால் பிரிந்து சென்று இருகிறாள், இன்னும் இரண்டு நாளில் வர போகும் தன் பிறந்த நாள் (May 1) அன்று எப்படியும் அவள் தன்னிடம் பேசி விடுவாள், என நம்பி அவளுக்கு பிடிக்கும் என Bottleல் அடைக்கப்பட்ட May 1அன்று Expire ஆக கூடிய அண்ணாச்சி பழங்களை வாங்கி வைத்து காத்திருக்கிறான்.


“உலகத்தில் எல்லா பொருட்களுக்கும் Expiry Date இருக்கிறதா என்ன?, காதலுக்குமா?” என நினைத்து கொள்கிறான். அப்படி “ஒருவேளை காதலுக்கு Expiry Date இருக்கும் என்றால் அது 10000 வருடமாய் இருக்கட்டும்“ என்கிறான். அவள் May 1 வராததால் Expiry ஆன அண்ணாச்சி பழங்களை உண்டு விட்டு ஒரு மது விடுதிக்கு செல்கிறான், அங்கே இப்போது நான் முதலில் எந்த பெண்ணை பார்கிறேனோ அவளை காதலிக்க போகிறேன் என்று நினைக்கையில் முதல் காட்சியில் அவன் மேல் மோதிய பெண், போதை மருந்து கடத்துவதில் பிரச்சனை ஏற்பட்டு அங்கு வர அவள் மீது காதல் கொள்கிறான், அவளை இரவு அவள் வீட்டில் விட்டு விட்டு அவள் உறங்குவதையே பார்த்துவிட்டு அவள் காலணிகளை கழுவி விட்டு தன் இருப்பிடும் செல்கிறான். சென்றவுடன் அவனுக்கு ஒரு செய்தி வருகிறது அவளிடம் இருந்து “இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று.


மறுநாள் அவன் வழக்கமாய் தான் செல்லும் கடைக்கு போக அங்கே ஒரு பெண் மீது இடிக்கிறான், இப்போது அவளின் கதை - படத்தின் இரண்டாவது கதை. அந்த பெண் ” Express” என்னும் இரவு நேர உணவு விடுதியில் வேலை செய்பவள். அவள் அங்கு வரும் Cop 663 என்பவரை காதலிக்கிறாள், அவர் விமான பணிபெண்ணான தன் முன்னால் காதலியை பிரிந்து வாழ்பவர். அவர் இல்லாத சமயம் அவர் வீட்டிற்கு சென்று அந்த வீட்டை அழகு படுத்துகிறாள் அந்த உணவு விடுதியில் வேலை செய்பவள். மிக மெல்லிய காதல் கட்சிகள் அவை. இறுதியில் அவள் அவரை பிரிந்து California சென்று மீண்டும் இணைவதாய் படம் நிறைகிறது.


படத்தின் கேமரா கோணங்கள், இரவு நேர நகரம்,அமெரிக்கா செல்ல விரும்பும் இளைய தலை முறை, இசையோட கலந்த வாழ்வு என அன்றைய நிலையை மிக அழகாய் பதிவு செய்து உள்ளார். Wong Kar Waiன் In the Mood for Love என்னை கவர்ந்தது போலவே இந்த படமும் கவர்ந்தது.
மிக தனித்துவமாய் படம் பிடிக்க பட்டிருந்த இப்படம், Berlin, Venice என பல சர்வதேச விருதுகளை வென்றது. Hollywoodல் நிழல் உலகை மையமாய் வைத்து Pulp Fiction, reservoir Dogs படங்களை தந்த Quentine Torantino Wong Kar Wai ன் தீவிர ரசிகர். நானும் கூட!!

இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |

No comments:

Post a Comment