இளவேனில்
நேற்று வரை உறைந்திருந்த
மரங்கள் எல்லாம்
பூக்கள் ஏந்தி
கிளையசைக்க தொடங்குகின்றன
உன் குறுஞ்செய்தியை சுமந்த
கைப்பேசியின் சிணுங்கலை
நினைவூட்டியபடி
நட்பை கைவிடுதல்
நீண்ட உரையாடல்களையெலாம்
குறுஞ்செய்திகளாய்
மாற்ற கற்று கொள்ள வேண்டும்
ரகசியங்களின் கள்ள அறை
சாவிகளை கைமறதியாய்
எங்காவது வைத்து விட வேண்டும்
பிறந்த நாளுக்கோ/திருமண நாளுக்கோ
ஒரு பொது வாழ்த்து சொல்லி
நிறுத்தி கொள்ள வேண்டும்
இறுதியாக,
நீண்ட நேரம் கூகள் சாட்டில்
உயிர்ப்போடு இருக்கையிலும்
பேசாமல் இருக்க முடிகிறதா
என சரி பார்த்து கொள்ள வேண்டும்
ஒரு காதலியை கைவிடுவது போலவோ
புகைப்பதை கைவிடுவது போலவோ,
இல்லை ஒரு ஊன்றுகோலை கைவிடுவது போலவோ
அத்தனை கடினம் ஒன்றுமில்லை
ஒரு நட்பை கைவிடுதல்
குழந்தைகளின் சமையல்
அரிசி களைந்து
பிளாஸ்டிக் குடுவையில் கொட்டி
அடுப்பில் ஏற்றி விட்டாள்
அரிசி வெந்தாதானே குழம்பு
என மற்ற குழந்தைகளை
அமைதி படுத்தி,
சூடான அரிசியை இறக்கிவிட்டு
ஒருமுறை வாயிலும்
விரல் வைத்து கொண்டாள்
பசியில் பரபரத்தவர்களிடம்
பத்து கையா இருக்கு என
நெட்டி முறித்து கொண்டாள்
வாசனை பிடித்து
நானும் போய் வாசலில் நின்றேன்
இன்னைக்கு
சோறு கொஞ்சம் கொழஞ்சிடுச்சு
என சொல்லி கொண்டே பரிமாறினாள்
உப்பு கொஞ்சம்
குறைவு என்றாலும்,
“ நல்லா இருக்கு”
என சொல்லி வந்து விட்டேன்.
Madhan - Liked all the poems. The premise of each was interesting. உங்க அபிமான பாடகி ஸ்டைல்ல சொல்லணும்னா, “இன்னும் கொஞ்சம் கூடி ட்ரை பண்ணியிருக்கலாம்” ;)
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் கூடி ட்ரை பண்ணியிருக்கலாம் // :)
ReplyDeleteAgreed Boss!
நன்றாக இருக்கு.
ReplyDeleteநன்றி மதுமிதா :)
ReplyDeleteSuper Madhan... especially, Natpai Kaividudhal... Anubavithu ezhuthirukkeenga, right?
ReplyDeleteThanks Ajeesh...
ReplyDeleteYes, Romba annubavichu thaan ezhuthinathu... ;)
தம்புரானே.. நிண்ட கவிதைகள் காட்டில் பூக்கும் குறிஞ்சி போல் உள்ளது :) நட்பை கைவிடுதல் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு :)
ReplyDeleteகவிதை எழுதி கொறை காலம் ஆகிட்டுண்டு. கொசெமானுக்கு கவிதைல நல்ல ரசமுண்டு பார்த்துகிடுங்க.;)
ReplyDeleteநன்றி கேட்ஸ் :)