Wednesday, February 17, 2010
அறைகளில் பூட்டப்பட்ட உலகம்
(Image: www.traceyfoster.com)
அறைகளில் பூட்டப்பட்ட உலகம்
எப்போதும் ஒன்றுபோலவே
இருக்கிறது
எப்போதேனும் மாற்றப்படும் திரைசீலைகள்
அளிக்கும் ஆசுவாசங்கள்
கறை படிந்த கண்ணாடிகள் வழியே கரைகிறது
இறுக்கி சாத்தப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள்
அணில்களின் க்ரீச்யையோ
இரவில் மரங்கள் முணுமுணுக்கும்
மூச்சினையோ தெரியப்படுத்துவதே இல்லை
பின்னிரவில் தீடிரென்று கேட்கும்
ஆம்புலன்ஸ் ஒலிகளுக்கும்
நாளடைவில் பழக்கி விட்டுவிடுகிறது
பூட்டப்பட்ட அறைகள்
கண்ணாடி வழியே தெரியும்
ஊமை நாடகம் தாங்காமல்
ஜன்னல் ஓரத்தில் கசியும்
வானத்தை கண்டு
நீ கத்த தொடங்கும் ஒருநாள்,
இந்த பூட்டப்பட்ட அறைகள்
உனக்கு அளித்தது போலவே
அளிக்கிறது உன் ஒலிகளுக்கும்
பாதுகாப்பை
- மதன். எஸ்
பகுப்புகள்
கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
அபாரம் போங்க!
ReplyDeleteஇதே தான் போன முறையும் நான் கமெண்டினேன்.
நன்றி தலைவா! :D
ReplyDeleteArumaiyana kavithai madhan! :) ending note sema!
ReplyDeleteThks a lot Suba! Nice to see your comments here too! :D
ReplyDeleteMika arumai!
ReplyDeleteநன்றி சுழியம் :)
ReplyDelete