நீண்ட நாட்களுக்கு பிறகு, ச்சே! இந்த உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக போல, பதிவு எழுத ஆரமிக்கையிலேயே இந்த வரி நினைவு வந்து விடுகிறது. ஆதலால் மீண்டும் "என் ஜன்னல் வழியே". எழுத நினைத்து விஷயங்கள் தள்ளி போய் கொண்டே இருக்கையில், அவசரத்திற்கு கிண்டப்பட்ட உப்புமா போல இந்த மாதிரி ஒரு காக்டையில் பதிவு. சில சமயம் உப்புமாவும் நல்லா இருக்கும் (அழகன் தான்!). என்ன வேணா சொல்லலாம் என்பதற்கு இது போல ஒரு தலைப்பு இருப்பது சந்தோசம் தான்.
முதல் முதலில் விமானத்தில் வந்ததோ, இல்லை அமெரிக்கா வந்து இறங்கிய உடன் வரும் ஆரம்ப கால ஆச்சர்யங்களோ எதுவும் இருக்கவில்லை. ஒரே ஒரு முறை பொழியும் பனியை கிழித்து கொண்டு விமானம் பறக்கையில், துணி துவைத்த சோப்பு நுரைகள் போல மேகங்கள் கீழே மிதந்தன. என்னையும் மீறி கடவுளே என சொல்லி கொண்டேன்.அதிகமான ஆங்கில படங்கள் பார்த்து நான் கற்பனை பண்ணி கொண்டதை விட இந்த இந்தியானாபோலிஸ் நகரம் சராசரி தான். இங்கேயும் ரோட்டில் குண்டு குழிகள் இருக்கிறது. வந்த ஒரு வாரத்திலேயே இங்கு உள்ள கோவிலுக்கு சென்று வந்தோம். எல்லா தெய்வங்களுக்கும் சேர்த்து ஒரே கோவில் தான்.
தமிழ் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது, பத்து டாலர் செலவு ஆனாலும் பரவாயில்லை என சென்று வந்தோம். பொங்கல் நன்றாகவே இருந்தது, பூரியும் கூட. சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது விழா, குழந்தைகள் நடனம் பார்க்க அழகாய் இருந்தது. அர்த்தமே புரியாமல், இங்கும் கந்தசாமி படத்தின் பாடல்களுக்கு தான் நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர். பாப் கட்டிங் வெட்டி கொண்டு, சற்றும் பொருந்தாத தாவணி அணிதிருந்த ஒரு சின்ன பெண், மிக அழகாக காற்றினிலே வரும் கீதம் பாடியது. இந்த பாட்டு ஏன் பிடிக்கும் என கேட்டதற்கு,"It has something in it, I don’t like cine songs of nowadays” என்ற ரீதியில் பத்து நிமிடம் ஆங்கிலத்திலேயே உரை ஆற்றியது. மூன்று முதல் ஆறு வரையான குழந்தைகள் உற்சாகமாக நிகழ்சிகளில் கலந்து கொண்டு இருக்க, அதன் பெற்றோர்கள் விடாமல் கை தட்டிய வண்ணமே இருந்தனர். இதில் எதுவுமே சம்மந்தபடாமல் பத்தில் இருந்து 15 வயது உள்ள சிறுவர்கள் ஒரு அறையில் அமர்ந்து அமெரிக்கன் புட்பால் பார்த்து கொண்டு இருந்தனர்.(It’s taking more time than they said dude, Common it’s getting late, finish your programs soon)
மனுஷ்யபுத்திரனின் சமீபத்திய கவிதைகள் அடங்கிய "அதீதத்தின் ருசி" இந்த புத்தக திருவிழாவில் வெளிவந்துள்ளது. அவரின் மிக சிறந்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. சிநேகிதிகளின் கணவர்கள், வரலாறு என்னும் பைத்தியகார விடுதி, உன்னிடம் அதை சொல்வதற்கு, உணர்ச்சிவசப்படும் ஒரு சிறய கணம் ஆகிய உன்னதமான கவிதைகள் அடங்கிய தொகுப்பு.
உணர்ச்சிவசப்படும் ஒரு சிறய கணம்
அன்போ
வெறுப்போ
உணர்ச்சி வசப்படும்
ஒரு சிறிய கணத்தில்
நீ மீட்சியடைகிறாய்
நீ யாராக இருக்க விரும்பினாய்
என்பதையோ
அல்லது
இனி யாராக இருக்க
முடியாதேன்பதையோ
தெரிவிக்கும் சிறிய கணத்தை
உணர்ச்சி வசப்படும்போது
மட்டுமே உருவாக்குகிறாய்
-------------------------------------------
-------------------------------------------
-------------------------------------------
என செல்லும் கவிதை
-------------------------------------------
பிறகு
உணர்ச்சி வசப்படாமல்
நீ சிந்திக்க தொடங்குகிறாய்
உணர்ச்சியற்ற
சிறந்த
உறுதியான
முடிவுகளை எடுக்க தொடுங்குகிறாய்
அதுதான் எதிர்கொள்ளமுடியாதது
எல்லாப் பாதுகாப்பின்மையும்
அங்கிருந்தான் தொடங்குகிறது
என முடிகிறது. புத்தகத்தில் சிறந்த கவிதைகளில் ஒன்று இது.
சமீபத்தில் கிம் கி டக்கின் " 3 iron " திரைப்படத்தை காண நேர்ந்தது. அழகான காதல் கவிதை, இருவரும் கடைசி வரை ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. பேசாமலே காதலா? என நம்ம ஊர் பார்முலா இல்லை. காட்சிபடுத்துவதில் மிக தனித்துவமாய் மிளிர்கிறது இப்படம்.
இறுதி காட்சிகளில் நாம் தான் பின்னாடி நின்று கொண்டு பார்க்கிறோம் என நினைக்க வைத்து விடுகிறார். படத்தில் அதிகபட்சமாக ஒரு முப்பது வரிகள் தான் பேசுகிறார்கள், ஆனால் சொல்ல வந்த விஷயத்தை அழுத்தமாய் பதிவு செய்கிறார் இயக்குனர். மேலும் படத்தில் அவர் உபயோக படுத்தி உள்ள பாடல் Natasha Atlasன் பாடல். பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இவர் அரபிக் இசையை பாடலில் கலந்து புகழ் பெற்றவர் என தெரிகிறது. மயக்கும் அந்த குரலும் நேர்த்தியாக படத்தில் சேர்க்க பட்டுள்ளது. அவசியம் பார்க்க வேண்டிய படம், படத்தின் இறுதி காட்சியினை அந்த உடன் கேட்க கீழ் உள்ள சுட்டியினை காணவும்.
இந்த தொடரின் முந்தையப் பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 |
நல்ல பதிவு.நிறைய விசயங்கள் பகிர்ந்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteMadhan... romba naal kalichu unga pathivu company blog thavira innoru idathula padikka nala iruku! :) Feels Gud!
ReplyDeleteIndianapolis sumar ragam thana? padathula kamikara mathiri elam onumilaiya?! :roll: seri atha vidunga... Poori pongal epadi irunthichu :P
And., 3-iron padam trailer parthen madhan., (unga buzz parthuthan...)nala irukumnu thonuthu..and am already a fan of The ending song!
Manushyaputhiran kavithai - Epadi than ipadi elam yosikarangalo :s.. thoguppu ooruku poi vanga pora booklist la senthachu! :D
As usuala breezyaa irunthichu unga pathivu! :)
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சரவணன்..
ReplyDeleteநன்றி சுபா,
ReplyDeleteஆமாம் ஊரு சுமார் ராகம் தான், ஆனா பிடிச்சிருக்கு.
கண்டிப்பா அந்த படாத பாருங்க, கூடிய விரைவில் அரவிந்தன் அத பத்தி எழுத வாய்ப்பு இருப்பதால் நான் அப்படியே தொட்டு விட்டுட்டேன்.
அந்த கவிதைகள் எல்லாம் அபாரம், கண்டிப்பா படிங்க...
சேனல் ஒன் ஜன்னலுக்கு வெளியே இதை தொடர்ந்து படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. படித்து விட்டு நானும் சுமீதாவும் ரொம்ப விசனப்பட்டோம், நீங்கள் ஒழுங்காக அங்கேயே இருந்திருக்கலாம் என. பரவாயில்லை, இந்தியானாபோலிஸ் பார்க்க வாய்ப்பு கிடைத்ததல்லவா!
ReplyDeleteஅதீதத்தின் ருசி கைக்கு இன்று வந்தது. அதீத ருசியுடைய கவிதைகள் போல தெரிகின்றது.
3-iron பத்தி எழுதவேன்னு கோத்து விட்டுட்டீங்களே!
நன்றி அரவிந்தா!
ReplyDeleteஎனக்கும் தீடிர்னு வெளியில மட்டும் எழுதறது ஒரு மாதிரி இருக்கு, பழகிடும்னு நினைக்கிறன்.
நிறைய நல்ல கவிதை இருக்கு அந்த புக்ல... ஆனா கொஞ்சம் கவிதைகள் looks Predictable
அது ஒரு விதமான வகைமாதிரிக்குள் அடங்கிடுதுன்னு நினைக்கிறன்.. படிச்சிட்டு சொல்லுங்க பேசுவோம்...
ஏற்கனவே In the Mood for Love missing அதனால தான் இதுக்கும் கோத்து விட்டுட்டேன்... சீக்கிரம் சீக்கிரம் :)
உங்கள் பதிவை படித்து விட்டு உடனே 3 iron படம் பார்த்தேன்.என்னை மிகவும் கவர்ந்து விட்டது. நன்றிகள் பல.கிம் கி டுக்கின் படங்களை தேடி தேடி பார்க்க ஆரம்பித்து விட்டேன்
ReplyDeleteநன்றி ஸ்டெல்லா,
ReplyDeleteஅதே போல Wong Kar Woi படங்களையும் மனதில் வைத்து கொள்ளுங்கள். In the mood for love, Chungking Express ஆகியவை சிறப்பான படங்கள்.