Thursday, April 2, 2009

திரைப்படமும் அதன் பின்னணி இசையும்-2 (இளையராஜா Spl)

மென்மையாய் காதருகே பேசி கொண்டு நம்மை உறக்கத்திற்கு இட்டு செல்ல இளையராஜாவால் மட்டுமே முடியும். தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத ஆளுமை இளையராஜா. இளையராஜாவின் பாடல்கள் எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவிற்கு அவரது பின்னணி இசையும். எனியோ மோரிகோனுக்கு நிகராக பின்னணி இசையில் புதுமையும் நவீனமும் கொண்டு வந்தவர் ராஜா.இந்த பண்னையபுறத்து ஞானியின் கைகளில் தான் தமிழ் சினிமாவின் இசை 25 வருடம் கட்டுண்டு கிடந்தது.
பெயர் தெரியாத படங்களில் கூட இவரது இசை சோடை போனதில்லை. "ஆட்டோ ராஜா" என்ற படத்தை யாராவது கேள்வி பட்டிருக்கிறீர்களா. அதில் தான் "சங்கத்தில் பாடாத கவிதையை உன் அங்கத்தில் யார் தந்தது" என்ற ராஜாவின் பாடல் வருகிறது. இந்த பாடலின் Instrument தான் சமீபத்தில் சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் ஸ்ரேயா ஆட வெளி வந்தது. அதே போல் வந்த மற்றொரு Instrument கோழி கூவுது படத்தில் வந்த, "ஏதோ மோகம் ஏதோ தாகம்" பாடல்.பல ஆண்டுகளுக்கு பிறகு மீள்கண்டுபிடிப்பு செய்யபட்ட அப்பாடல்கள் இன்றும் மிக சிறப்பானவை.இதில் "ஏதோ மோகம்" பாடல், அந்த படத்தில் சுரேஷ்-விஜி சந்திக்கும் காட்சிகளில் பின்னணி இசையாக பயன்படுத்த பட்டிருக்கும்.


மகேந்திரன், மணிரத்தினம், பாலு மகேந்திரா, பாரதிராஜா முதலிய இயக்குனர்களின் படங்களில் இளையராஜாவின் பின்னணி இசை மிக அழகானவை. மௌன ராகம், புன்னகை மன்னன் மற்றும் நாயகனின் பின்னணி இசை நாம் அறிந்ததே.தமிழ் சினிமாவின் பின்னணி இசைக்கான களம் இளையராஜாவின் வரவிற்கு பின்னே துவங்கியது எனலாம். மேல் சொன்ன இயக்குனர்களின் வரவும், இளையராஜாவின் பின்னணி இசையும் தமிழ் திரைப்படங்களின் காட்சி அமைப்பை புது பரிணாமத்தி்ற்க்கு இட்டு சென்றது. பின்னணி இசை மற்றும் காட்சி நேர்த்தியால், மிக கட்சிதமாய் வெளிவந்த சில காட்சிகள்.


1. முதல் மரியாதை - வடிவுக்கரசி அறிமுக காட்சி

வடிவுக்கரசி ஓர் தூண் அருகே நிற்க, சிவாஜி உணவு அருந்த வருகிறார்.காட்சி முழுக்க மௌனம். ஒரு கையால் மூக்கை சிந்தி விட்டு வடிவுக்கரசி மறு கையால் சிவாஜிக்கு தட்டை எடுத்து வைக்கிறார். வயலின் இசை ஆரம்பமாகிறது, மீட்ட துடிக்கும் வயலின்களின் தந்தியை மூர்க்கமான விரல்கள் பிடித்து கொண்டதும், அது கனத்த ஒலியை எழுப்புவது போன்ற இசை. சிவாஜி சாப்பிடாமல் சென்று சட்டை மாட்டி கொல்கிறார், அவர் மனைவி அவரை முறைத்து பார்த்த படி இருக்க, வயலின் சடாலென்று நிற்கிறது. மீண்டும் காட்சி முழுக்க மௌனம். அவர் வாசல் செல்லும் வழியில் , கழுவிய தட்டில் இருந்து தண்ணியை அவர் மனைவி ஊற்ற அது அவர் மேல் தெறிக்கிறது, வயலினின் தந்தி மீண்டும்!! வெக்கை நிரம்பிய அந்த இசையின் கனத்தை நம்மை போலவே தாங்க முடியாமல் அவரும் வெளிய வர, விரல்களின் பிடி தளருகிறது. சிவாஜி வானத்தை நோக்கி பார்க்கிறார், காற்றின் அசைவு, பறவையின் சிறகின் ஒலி!!. நான்கு வருடம் கல்லூரியில் காதலித்த பெண்ணிடம், கல்லூரியின் இறுதி நாள், தன் காதலை சொன்ன உடன் அவள், "இதை சொல்ல உனக்கு நான்கு வருடம் ஆச்சா? என்ற உடன் வரும் ஓர் சந்தோசம்,


2. ஜானி - வித்யாசாகர் (ரஜினி) ஜானி ஆக (மற்றொரு ரஜினி) அர்ச்சனாவை (ஸ்ரீதேவி) சந்திக்கும் காட்சி

மிகுந்த கவித்துவம் கொண்ட காதல் காட்சிகளில் ஒன்று இது. அர்ச்சனாவை சந்திக்கும் வித்யாசாகர் இரவு தூங்கி கொண்டு இருக்கிறான். எங்கோ ஓர் தேவாலய மணி அடிக்கிறது.புரண்டு படுக்கும் வித்யாசாகர், அர்ச்சனா அவனையே பார்த்த படி அமர்ந்திருப்பதை பார்க்கிறான். (பின்னணியில் மணி பனிரண்டு முறை அடிக்கிறது!).

வித்யாசாகர் : இன்னும் தூங்கலையா?

(இல்லை என தலை அசைக்கிறாள் அர்ச்சனா )

வித்யாசாகர் : என்ன பாக்கிற?

(மெல்ல பியானோ ஒலியுடன் இசை தொடங்குகிறது )

அர்ச்சனா : இன்னும் எவ்வளவு நேரம் நான் உங்களை பார்க்க போறேனோ?, ஒவ்வொரு சத்தமும் எனக்கு பயத்தை கொடுத்துட்டு இருக்கு, யார் வரு வாங்கலோனு ….. நீங்க போற வரைக்கும் நான் பாத்துட்டு இருக்கேன்

(அர்ச்சனாவின் கேள்வி குறிப்பு போலவே இசை ஒலிக்க)

அர்ச்சனா: பேசுங்க, இன்னும் எவ்வளவு நேரம் பேச போறீன்ங்க,

பேச மாட்டீங்களா?

இந்த இடத்தில ரஜினியின் நடிப்பும் பின்னணி இசையின் நெகிழ்வும் மிக மிக கவித்துவமானது.
இதை தவிர ஆண்பாவம் படத்தில் பாண்டியன் பெண் பார்க்கும் காட்சி, நாயகனில் கமல் சரண்யாவை இரவு சந்திக்கும் காட்சி ஆகியவை இசைஞானியின் முத்திரைகள். கண்டிபாக ஒரு சின்ன பத்தியில் அவரது பின்னணி இசையின் சிறப்பை அடைத்து விட முடியாது எனினும், ஒரு சிறு துளியனவே!!

6 comments:

 1. முடிந்தால் ஆடியோ க்ளிப்ங்ஸ் இணைக்கவும்.

  நன்றி வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 2. kandippa, muyarchikkiren... meendum varuga

  ReplyDelete
 3. நல்லா இருந்நதுங்க பதிவு...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. //தில் தான் "சங்கத்தில் பாடாத கவிதையை உன் அங்கத்தில் யார் தந்தது" என்ற ராஜாவின் பாடல் வருகிறது.//

  இந்த படத்தோட இசையமைப்பாளர் வேற யாரோவாம்... இயக்குனரோட வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பாடல் மட்டும் ராசா போட்டாராம்... அசல் பாட்டு பாலு மகேந்திராவோட மலையாளப் படம் ஓலங்கள்ல வரும்... இதோ வீடியோ

  http://www.youtube.com/watch?v=4fL-zqByB2E

  ReplyDelete
 5. http://www.youtube.com/watch?v=UJk9UXkvOGQ

  ReplyDelete
 6. நன்றி கதிர், ஜி

  ஒ, எனக்கு இந்த விஷயம் தெரியாது!! பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete