Monday, July 12, 2010

மாறுதல்

(போன பதிவில் சொல்லி இருந்த மாறுதல் சிறுகதை, இதுவரை பதிவிட மறந்திருந்தேன். இந்த கதை எங்கே என பல நூறு (ரமேஷ்!) கடிதங்கள் வந்து குவிந்தமையால், தூசு தட்டி மீண்டும்)

முன்னுரையே இல்லாமல் ஆரமிக்கப்பட்ட கதை போலதீடீரென்று முன்னால் வந்து ப்ரேக் போகலாமாஎன்றாள் அர்ச்சனா. 

அவள் அலுவலகம் வந்து அரை மணி நேரம் ஆகி இருந்தது. அலுவலக பேருந்தில் என்னுடன் ஒன்பது மணிக்கு தினம் வருபவள் இன்று பத்து மணிக்கு தான் வந்தாள். எப்போதும் வந்த உடன் GMடா என்று ஒரு ஸ்மைலியுடன் கம்யூனிக்கெட்டரில் பிங் பண்ணுவாள். இன்று அப்படி எதுவும் இல்லாமல்,காலையில் அலுவலக பேருந்தில் என்னோடு வராத காரணத்தை பற்றியோஎனது செல்லின் அழைப்பை ஏற்காததைப் பற்றியோ எதுவும் பேசாமல் வந்து ப்ரேக் போகலாமா என்கிறாள். ஒருவேளை அதை எல்லாம் சொல்வதற்கு கூட இருக்கலாம்.  

இல்லை, வேலை இருக்கு என்று கூட சொல்லி விடலாம். ஆனால் முணுக்கென்று கோபித்து கொண்டு விடுவாள். இந்த மென்பொருள் அலுவலகத்தில் நான் வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகின்றது,சேர்ந்த இரண்டாவது நாள்ஹாய் ஐம் அர்ச்சனா என கைகுலுக்கி கொண்டது  முதல் அவளைத் தெரியும்.  அவளது கோவத்தின் வெவ்வேறு வடிவங்களை பார்த்தாயிற்று ஆதலால் எதுவும் சொல்லாமல் எனது கணினியை லாக் செய்து விட்டு அவளுடன் கிளம்பினேன்.  

எப்போதும் ப்ரேக் வரும் நேரத்திற்கு சற்று முன்பே வந்ததால்தேநீர் வாங்கும் இடத்தில் சில புதிய முகங்கள் பளிச்சிட்டது. காலையில் பிள்ளைக்கு உடம்பு சரியில்லை அதனால் சமைக்க முடியவில்லை என சொல்லி கொண்டே ஒருவர் வெஜ் பப்ஸ் சாப்பிட்டு கொண்டு இருந்தாள். இரண்டு லைட் காப்பி  வாங்கி கொண்டு அலுவலகத்தின் வாசலுக்கு வரும் வரை அர்ச்சனா எதுவும் பேசவில்லை. எப்போதும் நாங்கள் அமரும் அந்த செயற்கை நீருற்றை ஒட்டிய கல்லில் அமர்ந்து கொண்டு காப்பி குடிக்க தொடங்கினோம். 

காப்பி உறியும் சத்தத்தை தவிர எந்த சத்தமும் உன்னிடம் இருந்து வரப் போவதில்லையா? என்றேன். 
முறைத்து பார்த்து விட்டு திரும்பி கொண்டாள்.  

நேத்து அவங்க வீட்ல இருந்து போன் வந்தது என்றாள். 

நான் அவளையே பார்த்தப்படி என்ன சொன்னாங்க? என்றேன். 

அந்த சொட்ட தலை மாப்பிள்ளைக்கு என்ன பிடிக்கலையாம். 

ஏன் என்னவாம்?. ஜாதகம் எல்லாம் பொருந்தி இருக்குனுதானே சொன்னாங்க முதல்ல 
ஆமாம்இப்போ வேற எதோ ஜாதககாருக்கிட்ட பார்த்தாங்கலாம்இந்த கல்யாணம் நடந்தா மாமியாருக்கு ஆகாதுன்னு சொல்லிட்டாராம். 

அதுக்கு ஏன் அவரு பிடிக்கலைனு சொன்னாருன்னு நினைச்சுக்கிற? 

அவங்க வீட்ல இருந்து வந்து ரெண்டு வாரத்துக்கு முன்ன பார்த்தப்ப எல்லாம் சரியாத்தான் இருந்தது. இவரு ரெண்டு நாளைக்கு முன்ன என்ன கோவில்ல பார்த்து பேசின பிறகு தான் இப்படி.  

அர்த்தம் பொதிந்த ஒரு மௌனத்துடன் நான் பார்த்து கொண்டே இருந்தேன். 

பொண்ணு கொஞ்சம் பூசினாப்ல இருக்குன்னு தரகர் அப்பாகிட்ட சொன்னத கேட்டேன் என்றாள். 

ஏன் உனக்கு என்னநல்லா  ஜோதிகா மாதிரி தான் இருக்க என்றேன். 

வெவ்வே என்று அழகு காட்டினாள். 

பாரு முகத்துல ரியாக்ஷன் கூட ஜோ மாதிரியே என்றேன். 

காலையில் இருந்து முதல் முறையாக சிரித்தாள்.  அமெரிக்காவில் இருந்து வர வேண்டியதுஇங்க நாலு வாரத்துக்குள்ள நாலு ஐந்து பெண்களை பாக்க வேண்டியதுஅதுல பெட்டறா ஒன்ன செலக்ட் பண்ணிக்கிட்டு  அப்படியே கல்யாணம் பண்ணிக்கிட்டும் போய்ட வேண்டியது என்றேன்.  
நீ ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி நடிக்காதஉனக்கு விசா இருக்கா என்றாள்.   

உனக்கு தெரியாதாஇந்த வருஷம் L1 விசா எதுவும் கிடைக்கல. 

அதான் வயத்து எரிச்சல்ல பேசற. 

சரி வா கிளம்பலாம்அடுத்த ப்ரேக் பசங்க கூப்பிடுவாங்க என்றேன். 

ஆமாம் ப்ரேக் வந்துட்டுஇருக்குற பொண்ணுங்களுக்கு செல்ல பேர் வைக்க வேண்டியதுஇல்லை தரம் பிரிக்க வேண்டியது. 

ஏய் பின்னஇத்தனை பேர் வேலை செய்ற இடத்துல எல்லா பெண்களுக்குமா பேர் தெரிஞ்சுக்க முடியும்.  அதான் நாங்களே ஒரு பேர் வச்சுக்கிறோம். அந்த பொண்ணுஇந்த பொண்ணுன்னு பேசனா புரியுமா? . 
அதற்குள் லிப்ட் வர,  மூன்றாவது மாடியை அழுத்தி விட்டு நின்றோம். அதற்குள் அவசர அவசரமாக ஒரு பெண் வந்து ஏறி இரண்டாவது மாடியில் இறங்கி போனாள். அவ பேரு தெரியுமாப்ரியாமணி என்றேன்.  
நிஜமான பேரா? 

இல்லைஆளு நல்லா இருப்பா பார்க்க ஆனா பேசுனா அச்சு அசல் ப்ரியாமணி மாதிரியே இருக்கும். 
போடா என்று என் தலையில் தட்ட லிப்ட் மூன்றாவது மாடியை தொட்டது.  

சூமூகமாகவே சென்ற இரண்டு நாள் கழித்துமீண்டும் அதே நீருற்றின் அருகில் பேசி கொண்டிருந்தோம். ஒரே எரிச்சலா வருது என்றாள். ஆனா போன முறை போல இல்லைஇவன் ரெண்டு நாளிலேயே வேண்டாம்னு சொல்லிட்டான் என்றாள். எதுவும் பேசாமல் காப்பியை உதட்டருகே வைத்து கொண்டு அவள் பேசுவதையே கேட்டு கொண்டிருந்தேன்.  

பின்னால் கொட்டி கொண்டிருந்த நீரின் சலசலப்பின் தாளத்திற்கு ஏற்ப பேசி கொண்டே இருந்தாள். ஒவ்வொரு வாக்கியத்தையும் அவள் உதடுகள் ஆரமித்துவைக்க மெல்ல ஒரு சோகத்தோடு அவள் கண்கள் முடித்து வைத்தன. ஒண்ணு ரெண்டுனா பரவா இல்லஇதோடு ஏழு ஆட்கள் தட்டி போய்டுச்சு என்று அவள் சொல்லி முடிக்கவும் அந்த நீருற்று நிறுத்தப்படவும் சரியாக இருந்தது.    
சடாரென்று அங்கு பரவிய மௌனம் ஒரு சங்கடத்தை அளித்ததுஅவள் மெல்ல தன கண்களை துடைத்து கொண்டாள். 

உனக்கு என்ன பிடிச்சிருக்கா 

என்ன 

இல்லை என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? 

கண்கள் மேல் படர்ந்த நீர் திரையை மெல்ல விளக்கி என்னை பார்த்துநிஜாமாவே சொல்றயா என்று மெல்ல ஒரு புன்னகை செய்து இது கற்பனையா என நான் கிள்ளி கொள்ள இருந்த என் கையைத் தொட்டாள். அவள் கையின் ஈரம் சில்லிட்டது.   

ஆமாம் என்று நான் எழஅவளும் எழுந்தாள்.  

அவளது காலி கோப்பையை என் கையில் வாங்கி கொண்டு மேலே செல்ல லிப்ட் நோக்கி நடந்தோம்.

முந்தைய சிறுகதைகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6

4 comments: