Tuesday, May 5, 2009

கல்யாண்ஜியின் கேலிசித்திரம்

எளிய வார்த்தைகளை சம்ப்ரதயமான பொருள்களிலிருந்து விடுவித்து வேறுஒரு தளத்திற்கு கொண்டு சென்று மிக அழகான, அழமான அதிர்வுகளை உருவாக்கிட வல்லவை கல்யாண்ஜியின் கவிதைகள். அவரது தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. “இன்னொரு கேலிசித்திரம்” நான் இதுவரை படித்த சிறந்த கவிதைகளில் ஒன்று என்பேன்.


இன்னொரு கேலிசித்திரம்


காலம் என் கேலிச்சித்திரத்தை

வரைந்துவிட்டது

உயரத்தையும்

முன்பற்க்களின் இடைவெளியையும்

நிச்சயம் கணக்கில் எடுக்கும்

என்று நினைத்திருந்தேன்

எடுக்கவில்லை

என் கூர்மையற்ற மூக்கைக்கூட

அது பொருட்படுத்தக் காணோம்

கனத்த கண்ணாடியின்றியும்

முகத்தின் சாயல்

பிடிப்பட்டிருந்தது

அதன் கோடுகளுக்குள்

என் உடல் மொழியனைத்தும் அடங்கியிருந்தன

என் சித்திரத்தை விட

என் கேலிச்சித்திரத்தை ரசிக்க முடிகிறது

எனினும்

என்னுடைய எந்த அடையாளத்தை

அது ஒளித்துவைதிருக்கிறது தன்னிடம்

என்ற புதிரை

என்னால் விடுவிக்க முடியவில்லை

அதற்குள் வரையப்பட்டுவிடுகிறது

அடுத்த நாளில்

இன்னொரு கேலிச் சித்திரம்…



கல்யாண்ஜி கவிதைகள்

ஆழி பதிப்பகம் விலை ரூ50

No comments:

Post a Comment