Monday, March 30, 2009

கவிதைசாரல் - எல்லோரும் கவிதை எழுதலாம்….

வைரமுத்து, அப்துல் ரகுமான் மூலம் தான் உங்களுக்கும் கவிதை அறிமுகம் என்றால், கை கொடுங்க Boss நீங்க நம்ம ஆள்.ஆனா இப்போ எல்லாம் கல்யாண்ஜி, தேவதேவன், மனுஷ்யபுத்திரன் தான் புடிச்சிருக்கு, ஏன் சொல்ல போன, பிரமிள் கவிதை தேடிட்டு இருக்கேன் என்றால் சந்தேகமே இல்லை நீங்க மேல தைரியமா படிக்கலாம். 14 வயசில் பிறந்த நாள் பரிசாக வைரமுத்து கவிதைகள் முழு தொகுப்பு கேட்டவன் நான். அதன் பின் கவிதையில் வெகு தூரம் வந்து விட்டேன்.


பார்த்திபன் ரம்பாவை பண்யாரம் சாப்பிட வைத்து விளக்கம் சொன்ன பின்னும் , புதுகவிதைனா என்ன? என்று கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் மேலே செல்கிறேன். இந்த புதுகவிதை இயக்கம் வெற்றி பெற்றதில் வந்த சில முக்கியமான நன்மைகள், எல்லாரும் " நாம கூட கவிதை எழுதலாம் போல இருக்கே" என என்ன வைத்தது தான்.ஆனால் கவிதை என்பது வார்த்தை விளையாட்டுகளை மீறியது, பொதுவாக இந்த கவிதைகளை சில வார்த்தைகளை வைத்து கண்டுபிடித்து விடலாம் அவை என்ன வகை மாதிரி என்று.கீழ் வரும் சொற்கள் எந்த வகை கவிதையில் வரும் என கண்டு பிடித்தால், ஓர் எவர் சில்வர் டம்ளர் பரிசு அளிக்க படும்.


(1) ஏ பெண்ணே-அடியே (2) ஒ தமிழே,என் அணங்கே,மூச்சே,பேச்சே (3) கூர் வாளினை எடு, திலகம் இடு, தீ பறக்கட்டும் (4) சொல் - வெல் - நில் - என்னை கொல்.


ஏற்கனவே இந்த பகுதியில் எனக்கு பிடித்த சில கவிதைகளையும், சில விளக்கங்களையும் கொடுத்து உள்ளேன்.


1. கவிதை செய்ய பட கூடாது , நிகழ வேண்டும்


2. கொஞ்சம் மொழி ஆளுமையும் கூறிய அவதானிப்பும் இருந்தால் கண்டிப்பாக எல்லோராலும் சில நல்ல கவிதைகள் எழுதி விட முடியும்.


3. பட்டம் பூச்சி, சிட்டுகுருவி, காதல்,அம்மா, இவை எல்லாம் தேவை ஆன அளவு அலச பட்டு விட்டதால் அடுத்த இடங்களை நோக்கி நகர்வது நல்ல கவிதைக்கான வாசல் திறக்கும்.


4. நல்ல கவிதை ஒற்றைபடையாய் இருக்காது, தொடர்ந்த வாசிப்பில் பல வாசல்களை திறந்த வண்ணமே இருக்கும்.


நான் நல்ல கவிதைகளின் ரசிகன், நமது CH1ல் எழுதபடும் சில கவித்துவம் கொண்ட வரிகளை தொடர்ந்து ரசித்து வந்து உள்ளேன். கவிதை எழுதுவது நல்ல விஷயம் தான்,ஆனால் நல்ல கவிதை எழுதுவது முக்கியம் என நோக்கில் தான் இந்த பதிவுகளும், பகிர்தல்களும்.சமீபத்தில் படித்த நல்ல கவிதை தொகுப்பு, மனுஷ்யபுத்திரனின் " கடவுளுடன் பிராத்தித்தல்" அதில் வரும் "ஒரு மழை நாளில் ", "காணமல் போன மகள்" "அந்த இடம்" ஆகியவை மிக அழகான கவிதைகள்.

படிமங்கள் அதிக அளவில் பயிலும் இவரது கவிதைகள், எனக்கு விருப்பமானவை.நல்ல கவிதை தொடர்ந்து நம் அழ் மனதில் நாம் மறைக்க அல்ல மறந்து விட்ட பகுதிகளுடன் உரையாடுகிறது. அதற்க்கு அது தேர்ந்தெடுத்து கொண்டவையே படிமங்கள். கவிதையில் படிமம் என்பது ஓர் நிகழ்வு, ஓர் பொருள் அல்லது ஓர் சொல் ஒரு குறியீடு அது தொடர்ந்து நாம் அழ் மனதை தொடர்பு கொள்ளவே முயற்சிக்கிறது,


சாத்தியங்கள்


நடக்கலாம்

கால் வலிக்கும் பொது கொஞ்சம் உட்காரலாம்

பேசலாம்

வெறுமை சூழும் பொது மௌனமாக இருக்கலாம்

கைகளை பற்றி கொள்ளலாம்

பயம் வரும் போது கைகளை விலக்கி கொள்ளலாம்

ஒருமுறை முத்தமிடலாம்

முத்தத்தை பற்றி பேச்சு வந்து விடாமல்

வேறு எதாவது பேசலாம்

அவரவர் வீடு நோக்கி போகலாம்!!



அந்த இடம்

நீ அங்குதான்

இருப்பதாய் சொன்னாய்

நான்

அங்கு வந்த போது

அந்த இடம்

கலைந்துவிட்டிருந்தது

மேல குறிபிட்ட கவிதைகளில் முத்தம், வீடு, இடம் ஆகியவை படிமங்கள்.


பழக்கம்

பழக்கத்திற்கு இன்னொரு அடிமை

பழக்கமற்ற எதையும் இதுவரை

செய்ததில்லை - இனிமேல்

செய்யபோவதில் பழக்கமற்றது

சாவதும்

பழக்கமானது என்னவோ

அதுவும் நாள்தோறும்

மேல குறிபிட்ட சி, மணியின் கவிதையில் "சாவதும்" படிமம் கவிதைக்கு மிக முக்கியம்,

2 comments:

  1. padimam enbathu kurithu thangalin vilakkam enakku vilangavillai. saavathum enbathu enganam padimam aakiyathu. vilakkinaal purinthukolven.
    by
    www.kanalvanan.blogspot.com

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி Kanalvan,

    படிமங்கள் பற்றி முதல் முதலில் படிக்க ஆரமிக்கையில் எழுதியது. சாவதும் என்பது நேரடியாக மரணம் என்பதை மட்டும் குறிக்கவில்லை என நினைக்கிறன், அந்த கவிதையை படித்த கணத்தில், ஒரு த்யான நிலையில் எட்டும் கனத்தையும் குறிப்பதாகவும் எனக்கு தோன்றியதால் அதை படிமம் என்றேன்.
    நீங்கள் சொல்வது போல், மிக சரியாக சொல்ல போனால் சாவதும் என்பது மிக கறாரான படிமம் அல்ல.

    ReplyDelete